March 31, 2009

சத்தியத்தின்பால் அழைப்பார்

உண்மை முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தனது அழைப்புப் பணியில் உற்சாகத்துடனும் உறுதியுடனும் செயல்படுவார். நன்மையைச் செய்ய ஏதேனும் தகுந்த சூழ்நிலை ஏற்படுமா என எதிர்பார்க்காமல் மனிதர்களை சத்தியத்தின்பால் அழைப்பதற்கு விரைந்து செல்வார். மனத்தூய்மையுடன் அழைப்புப் பணிபுரிபவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்துள்ள அருட்கொடைகளை பெரிதும் விரும்புவார்.
அலீ (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதருக்கு உம்மூலமாக அல்லாஹ் நேர்வழி கிடைக்கச் செய்வது உமக்கு உயர்ரக செந்நிற ஒட்டகைகளைவிட மேலானதாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)
வழிதவறி திகைத்து நிற்கும் ஒரு மனிதனின் செவியில் சத்திய அழைப்பாளர் ஒரு நல்ல வார்த்தையை போடுவதன் மூலம் அவரது இதயத்தில் நேர்வழியின் விளக்கேற்றுகிறார். அப்போது அவர் அரபுகளின் செல்வங்களில் மிக உயரியதாக கருதப்பட்ட செந்நிற ஒட்டகைகள் அவருக்கு கிடைப்பதைவிட பன்மடங்கு அதிகமான நன்மைகளை அடைந்து கொள்கிறார். இவர் மூலமாக நேர்வழி பெற்றவரின் நன்மைகளைப் போன்று இவருக்கும் கிடைக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
நேர்வழியிலிருந்து விலகியிருப்பவர்களை ஏகத்துவத்தின்பால் அழைப்பதில் தங்களது செல்வங்களையும் நேரங்களையும் செலவிட்டு அறிவீனர்களிடமிருந்து வரும் தீமைகளை இன்முகத்துடன் சகித்துக் கொள்ளும் அழைப்பாளர் மீது பொறாமை ஏற்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
விரும்பத் தகுந்த இப்பொறாமை குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''இரண்டு விஷயத்திலே தவிர பொறாமை (கொள்ள அனுமதி) கிடையாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தான். சத்தியத்திற்காக அதை அவர் செலவு செய்கிறார். மற்றொருவருக்கு அல்லாஹ் கல்வி ஞானங்களைக் கொடுத்தான். அவர் அதன்படி மக்களுக்குத் தீர்ப்பளித்து மற்றவருக்கும் கற்றுக் கொடுக்கிறார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அல்லாஹ்வின்பால் அழைப்புப் பணிபுரியும் முஸ்லிம் தன்னிடமுள்ள ஞானத்தை அற்பமாக நினைக்காமல் சத்திய வார்த்தைகளில் தனக்கு எது தெரியுமோ அது அல்லாஹ்வுடைய வேதத்தின் ஒரே ஒரு வசனமாயிருப்பினும் எவ்விதத் தயக்கமுமின்றி அதை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: ''...என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை எத்திவைத்து விடுங்கள்...'' (ஸஹீஹுல் புகாரி)
ஏனெனில், ஒரு வசனம் கூட மனித இதயத்தினுள் ஊடுருவி அவன் நேர்வழிபெற போதுமானதாகி விடலாம். அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவனது இதயத்தில் ஈமான் இடம்பெற ஒரு வசனம் போதும். அந்த ஒரு வசனம் அவனது ஆன்மாவில் ஒளியேற்றி, வாழ்வில் பெரியதொரு மாற்றத்தை உண்டு பண்ணி அவனை புதியதொரு மனிதனாக மாற்றிவிட முடியும்.
நபிமொழி கூறுவதுபோல உண்மை முஸ்லிம் தனக்கு விரும்புவதையே தமது சகோதரருக்கும் விரும்புவார். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மையே நாடுவார். அதனால் பிரகாசமான நேர்வழி தன்னிலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களிலும் குறுகிப் போய்விடாமல் உலகம் முழுவதும் பரவவேண்டுமென விரும்புவார். தனக்கும் தனது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் சுவனத்தை விரும்புவார். அதனால் நரகத்தை தூரமாக்கி சுவனத்தில் சேர்ப்பிக்கும் நேர்வழியின்பால் எல்லாக் காலங்களிலும் எல்லோரையும் அழைத்துக் கொண்டேயிருப்பார். இது அழைப்பாளர்களின் பண்பாகும். இப்பண்பைக் கடைபிடிப்பதால் அல்லாஹ்வின் தூதரின் வாழ்த்தையும் துஆவையும் பெற்றுக் கொள்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நம்மிடமிருந்து ஒரு விஷயத்தைக் கேட்டு அதைக் கேட்டவாறே பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதரை அல்லாஹ் செழிப்பாக்குவானாக! எத்தி வைக்கப்பட்ட எத்தனையோ மனிதர்கள் அதைக் கேட்டவரைவிட நன்கு புரிந்து கொள்கிறார்கள்.'' (ஸுனனுத் திர்மிதி)
இஸ்லாமிய சமூகம், பொறுப்புகளை சுமந்து நிற்கும் சமூகமாகும். இஸ்லாம் அந்த பொறுப்புகளை தனது உறுப்பினர் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழப்பதித்துள்ளது. ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விற்கு முன் தங்களது பொறுப்புகளை நன்கறிந்து அழைப்புப் பணியை திறம்பட செய்திருந்தால் இன்று இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கி பலவீனப் பட்டிருப்பதை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும்.
ஏகத்துவ அழைப்புப் பணிக்கான வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தும் அதில் குறை செய்து, கல்வி ஞானமிருந்தும் அதை மறைத்து, பதவியையும் பொருளையும் அடைந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்பவர்களை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் கல்வியை உலகாதாயத்தை பெறுவதற்காக மட்டுமே கற்றுக் கொள்வாரேயானால் அவர் மறுமை நாளில் சுவனத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்.'' (ஸுனன் அபூதாவூத்)
மேலும் கூறினார்கள்: ''தான் அறிந்த ஒரு விஷயத்தைப் பற்றி கேட்கும்போது அதை மறைப்பவர் மறுமைநாளில் நரக நெருப்பினாலான கடிவாளம் அணிவிக்கப்படுவார்.'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி)
நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார் அல்லாஹ்வின்பால் அழைப்பதன் அவசியப் பணிகளில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் ஒன்றாகும். அழைப்பாளர் அறிவுடனும், நிதானத்துடனும் அழகிய முறையில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார். கரத்தால் தடுப்பதில் கடுமையான குழப்பங்கள் எதுவும் ஏற்படாது என்றால் அத்தீமையை தனது கரத்தால் மாற்றுவார். அது இயலவில்லையென்றால் தனது நாவின்மூலம் சத்தியத்தை எடுத்துரைத்து தீமையை நன்மையாக மாற்றப் போராடுவார்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களின் நலம் நாடி நல்லதை ஏவி, தீமையைத் தடுப்பார். ஏனெனில், மார்க்கம் என்பது பிறர் நலம் நாடுவதுதான். இதை உண்மைப்படுத்த வேண்டுமெனில் அவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தேயாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள், ''மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவது'' என்று கூறியபோது நாங்கள் கேட்டோம் ''யாருக்கு?'' நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும்'' என பதிலளித்தார்கள். (ஸஹீஹ முஸ்லிம்)
பிறர் நலம் நாடுவதும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் அநீதியிழைப்பவனின் முகத்துக்கு நேராக சத்தியத்தை உரக்கச் சொல்வதற்கான துணிவை முஸ்லிமுக்கு ஏற்படுத்தித் தரும். சுதந்திரமாகவும், கண்ணியமாகவும், கெªரவத்துடனும் இச்சமூகம் நிலைபெறுவதென்பது அநியாயக்காரனுக்கு முன் 'நீ அநியாயக்காரன்' என்று அச்சமின்றி சொல்லும் ஆற்றல் பெற்ற வீரர்களால் மட்டுமே சாத்தியமாகும். இச்சமூகத்தில் எப்போது அச்சமின்றி சத்தியத்தை எடுத்துரைக்கும் ஒரு கூட்டம் இல்லையோ அப்போது ஒட்டுமொத்த சமுதாயமும் வீழ்ச்சியை சந்திக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''அநியாயக்காரனிடம் 'நீ அநியாயக்காரன்' என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.'' (முஸ்னத் அஹமத்)
அசத்தியத்தை எதிர்ப்பதில் வீரத்தை கடைபிடிக்க வேண்டும், அநியாயக்காரனை எதிர்ப்பது உணவையோ வாழ்வையோ குறைத்துவிட முடியாது என்று அறிவுறுத்தும் அதிகமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''மனிதரைப் பற்றிய அச்சம் நீங்கள் சத்தியத்தைக் கூறுவதிலிருந்தோ, மகத்தானதை (அல்லாஹ், மறுமை நாளை) நினைவுபடுத்துவதிலிருந்தோ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது நிச்சயமாக உங்களது ஆயுளைக் குறைத்துவிடவோ, உணவை தூரமாக்கிவிடவோ முடியாது.'' (ஸுனனுத் திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்தபோது ஒரு மனிதர் எழுந்து வினவினார்: ''அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்?'' நபி (ஸல்) அவர்கள், ''மனிதர்களில் சிறந்தவர் அவர்களில் நன்கு குர்ஆன் ஓதுபவர், மிகுந்த இறையச்சமுடையவர், அவர்களில் மிக அதிகம் நன்மையை ஏவி தீமையை தடுப்பவர், அவர்களில் மிக அதிகமாக இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பவர்'' என்று கூறினார்கள் (முஸ்னத் அஹமத்)
இஸ்லாமிய சமூகத்தில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது முஸ்லிம்களின் வீரத்தையும், துணிச்சலையும் அடிப்படையாகக் கொண்ட தாகும். தீமைகளை எதிர்கொள்வதிலும், அநீதி இழைக்கப்பட்டோருக்கு உதவி புரிவதிலும், வீரத்தை வெளிப்படுத்த வேண்டும்.
சத்தியத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளதென்றும், சத்தியத்தை எடுத்துரைக்காமல் வாய் மூடியிருக்கும் கோழைகளுக்கு இழிவு உள்ளதென்றும் விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒரு முஸ்லிமை கேவலப் படுத்துகிறார்கள்; அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள்; அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லையென்றால் அல்லாஹ்வுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ் அவனை கைவிட்டு விடுவான். ஒரு முஸ்லிம் கேவலப்படுத்தப்படும்போது, அவனுடைய கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அவன் 'அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதா' என்று ஏங்கும் தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.'' (ஸுனன் அபூதாவூத்)
முஸ்லிம் அசத்தியத்தை சகித்துக்கொள்ள மாட்டார். சத்தியத்திற்கு உதவி செய்வதில் சோர்வடைய மாட்டார். தனது சமூகத்தில் அநீதம் பரவுவதையும், சபைகளில் தீமைகள் பரவுவதையும் ஒருபோதும் விரும்பமாட்டார். எப்போதும் தீமைகளை தடுத்துக் கொண்டேயிருப்பார். ஏனெனில் தீமையைத் தடுக்காதிருந்தால் அல்லாஹ்வின் வேதனை வாய்மூடி கோழையாக இருப்பவர்களையும் சூழ்ந்து கொள்ளும்.
அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்த பின் கூறினார்கள்: மனிதர்களே நீங்கள் அல்லாஹ்வின் திருவசனமான, ''விசுவாசிகளே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழிதவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது...'' (அல்குர்ஆன் 5:105) என்ற திருவசனத்தை ஓதுகிறீர்கள். நீங்கள் அந்த திருவசனத்திற்கான பொருளை உரிய வகையில் விளங்கிக்கொள்வதில்லை. நிச்சயமாக நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் ''மனிதர்கள் தீமைகளைக் காணும்போது அதை தடுக்காமல் இருந்தால் வெகுவிரைவில் அல்லாஹ்வின் வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்துகொள்ளும்.'' (ஸுனன் அபூதாவூத்) ஒரு முஸ்லிமின் மார்க்கப் பற்று உண்மையாக இருந்து, அவரது ஈமான் உயிரோட்டமுடையதாக இருந்தால் நன்மையை ஏவுவதில் தீவிரமாகவும், தீமையை எதிர்கொள்வதில் வீரத்துடனும் இருப்பார். தீமைகளை அகற்ற முடிந்தளவு போராடுவார். ஏனெனில் மார்க்கத்தின் எல்லா அம்சங்களும் முக்கியமானவைதான். அதன் எந்தப் பகுதியிலும் அலட்சியம் கூடாது. அதன் கொள்கைகள் அனைத்தும் உறுதியானவை; சந்தேகமற்றவை. தங்களது மார்க்க விஷயங்களில் யூதர்கள் அலட்சியம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்கானதுபோல, முஸ்லிம்களும் பலியாகிவிடக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகமான பனூ இஸ்ராயீல்களில் ஒருவர் தவறு செய்தால் அதைத் தடுத்து கண்டிக்க வேண்டியவர் தடுப்பார். அதற்கு அடுத்த நாள் அந்த நபருடன் அமர்ந்து சாப்பிடவும், குடிக்கவும் செய்வார். அவர் நேற்று எந்த தவறுமே செய்யாதது போன்று நடந்துகொள்வார். இதை அல்லாஹ் அவர்களிடையே கண்டபோது அவர்கள் மாறுசெய்து, வரம்பு மீறியதன் காரணமாக தாவூது (அலை), ஈஸா (அலை) அவர்களின் நாவினால் சபித்து அம்மனிதர்கள் சிலரின் உள்ளங்களை வேறு சிலரின் உள்ளங்களோடு கலந்துவிட்டான். எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள். தவறிழைப்பவனின் கரங்களைப் பிடித்து அவனை சத்தியத்தின்பால் திருப்பிவிடுங்கள். அவ்வாறு செய்யவில்லையானால் அல்லாஹ் உங்களது இதயங்களை ஒன்றோடொன்று இணைத்து விடுவான். (தீமைகளோடு ஒத்துப் போய் விடுவீர்கள்) அந்த இஸ்ரவேலர்களை சபித்ததுபோல உங்களையும் சபித்து விடுவான்.'' (முஃஜமுத் தப்ரானி)

நற்குணமுடையவர்

உண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு உண்டு. நபி (ஸல்) அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல, நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை மிகைப்படுத்திக் கூறத் தூண்டவுமில்லை. நபி (ஸல்) அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு சுட்டிக்காட்டினார்கள். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நான் நபி (ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி) நபி (ஸல்) அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்) மேலும் கூறினார்கள்: "உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற் குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் அகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி) அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நற்பண்புமிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது கண்களால் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக் கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் "என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்) நபி (ஸல்) அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக் கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில், அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக இருந்தார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தையும் உறுதிப்படுத்தினார்கள். முஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு முறைகளும், உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம் காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான். மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது. முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின் தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத் திர்மிதி) நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.'' (ஸன்னனுத் திர்மிதி) நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸப்மா இப்னு ஷுரைக் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும். நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல் அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்களின் சபையில் எங்களில் எவரும் பேசமாட்டார். அப்போது சிலர் வந்து நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?' என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக் கூறினார்கள். நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம் எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும். நாம் முன்பு கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும் மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை, நோன்புக்கு இணையானதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்) மற்றோர் அறிவிப்பில்: "ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தங்களது சொல், செயலால் நபி (ஸல்) அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தூண்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும்விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள். அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ""நற்குணத்தையும் நீண்ட மெªனத்தையும் பற்றிப் பிடித்துகொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா) மேலும் கூறினார்கள்: "நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்) நபி (ஸல்) அவர்கள்: "யா அல்லாஹ் எனது தோற்றத்தை நீயே அழகுபடுத்தினாய். எனது குணத்தையும் அழகுபடுத்துவாயாக'' என்ற துஆவை வழமையாகக் கூறி வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத்) ....(நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர். (அல்குர்அன் 68:4) அல்லாஹு தஅலா தனது திருமறையில் இவ்வாறு கூறியிருந்த போதும் நபி (ஸல்) அவர்கள் தனது குணத்தை அழகுபடுத்துமாறு துஆ செய்ததிலிருந்து நற்குணத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளலாம். நற்குணம் என்பது முழுமையானதொரு வார்த்தையாகும். அதனுள் மனிதனை பரிசுத்தப்படுத்தும் குணங்களான வெட்கம், விவேகம், மென்மை, மன்னிப்பு, தர்மம், உண்மை, நேர்மை, பிறர்நலம் நாடுவது, நன்மையில் உறுதி, உளத்தூய்மை, முகமலர்ச்சி போன்ற பல நற்பண்புகள் உள்ளடங்கியுள்ளன. இஸ்லாமின் சமூகக் கண்ணோட்டத்தைப் பற்றி ஆராய்பவர் அச்சமூகத்தை மேன்மைப்படுத்தும்படியான நற்பண்புகளை வலியுறுத்தும் ஏராளமான சான்றுகளை கண்டுகொள்வார். சமூகத்தில் முஸ்லிம் தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு இஸ்லாம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. பொதுப்படையானதாக இல்லாமல் சமுதாயத்தின் ஒவ்வொரு நபர்களின் ஒவ்வொரு செயலிலும் அப்பண்புகளை இஸ்லாம் வளரச் செய்திருக்கிறது. சமூகம் அனைத்தையும் நற்பண்புகளால் அலங்கரித்த சாதனையை இஸ்லாமை தவிர வேறெந்த கொள்கையாலும் சாதிக்கமுடியவில்லை. இறையச்சமுள்ள முஸ்லிம் சமூகத்தில் தனித்தன்மை பெற்றுத் திகழ்வதற்காக, இஸ்லாம் எற்படுத்தியுள்ள மார்க்க நெறிகளைப் பின்பற்றுவது சிரமமானதல்ல என்பதை அதன் சான்றுகளை ஆராய்பவர்கள் அறிந்துகொள்வர். இறைவன் எற்படுத்திய வரம்புக்குள் நின்று, அவனது விலக்கலைத் தவிர்த்து, மார்க்க நெறிகளை முழுமையாக ஏற்று, முஸ்லிமின் இலக்கணமாகத் திகழ்பவரின் ஒவ்வொரு செயலிலும் நற்பண்புகள் பிரகாசிக்கின்றன. முஸ்லிம் மோசடிக்காரராக, வஞ்சகராக, எமாற்றுபவராக, பொறாமைக்காரராக இல்லாமல் அனைத்து மக்களிடமும் நற்குணத்துடன் நடந்துகொள்வார்.

வாக்குறுதியை நிறைவேற்றுவார்

இஸ்லாமிய நேர்வழியை முற்றிலும் கடைபிடிக்கும் முஸ்லிம் ஒப்பந்தத்தைப் பேணி, வாக்குறுதியை நிறைவேற்றுவார். வாக்கை நிறைவேற்றுவது முஸ்லிமின் சமுதாய வெற்றிக்கான அடிப்படையும் மனிதகுலத்தின் உயர்வுக்கான வழியுமாகும். முஸ்லிம் வாக்குறுதியைப் பேணுவதில் முதன்மையானவராக இருப்பார். வாக்குறுதியை நிறைவேற்றுவது இஸ்லாமிய நற்பண்புகளில் தலையாயதாகும்.

ஒருவருடைய ஈமான் சீரானது என்பதற்கும், அவரது இஸ்லாம் அழகானது என்பதற்கும் இப்பண்பே சான்றாகும். அதை கடைபிடிப்பது ஈமானின் அடையாளமாகும். அதைப் புறக்கணிப்பது நயவஞ்சகத்தனத்தின் அடையாளமாகும்.

விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்... (அல்குர்அன் 5:1)

....உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். எனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும். (அல்குர்அன் 17:34)

இன்றைய காலகட்டத்தில் பல முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது போல ஒப்பந்தம், வாக்குறுதி என்பது காற்றில் பறக்கவிடப்படும் வார்த்தையல்ல. அல்லாஹ்விடம் விசாரணை செய்யப்படும் மிகப்பெரிய பொறுப்பாகும்.

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்.... (அல்குர்அன் 16:91)

இவ்விடத்தில் மனிதர்களிடம் செய்யப்படும் உடன்படிக்கையை அல்லாஹ்வுடன் செய்யப்படும் உடன்படிக்கையைப் போன்று கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணம் உடன்படிக்கையின் முக்கியத்து வத்தையும், அதன் கண்ணியத்தையும், அது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதையும் வலியுறுத்துவதேயாகும்.

விசுவாசிகளே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும்பாவமாக இருக்கின்றது. (அல்குர்அன் 61:2,3)

வாக்குறுதிக்கு மாறுசெய்வதும் அதை நிறைவேற்றாமலிருப்பதும் அல்லாஹ் தனது அடியார்களிடம் மிகவும் வெறுக்கும் பெரும்பாவமாகும். அல்லாஹ் மேற்கூறிய திருவசனத்தின் ஆரம்பத்தில் கேள்வி எழுப்புவது அல்லாஹ்வின் கண்டனத்தை வெளிப்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். 1) பேசினால் பொய்யுரைப்பான் 2) வாக்களித்தால் மாறு செய்வான் 3) நம்பினால் மோசடி செய்வான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிமின் ஒர் அறிவிப்பில்: "அவன் நோன்பிருந்தாலும் தொழுதாலும் அவன் தன்னை முஸ்லிம் எனக் கருதினாலும் சரியே'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிமின் இஸ்லாம் சீரடைவது தொழுகை, நோன்பு, ஹ்ஜ் போன்ற வணக்கங்களைக் கொண்டு மட்டுமல்ல. மாறாக, இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதன் மூலமே சீரடைகிறது. அப்போதுதான் உயர்ந்த நற்பண்புகளும், உன்னதமான நடைமுறைகளும் அவரிடம் பிரதிபலிக்கும். அல்லாஹ்வின் வரம்புக்குள் நின்று, ஏவலை செயல்படுத்தி, விலக்கலைத் தவிர்த்து வாழ்பவராகவும், அல்லாஹ்வின் நேர்வழியை எல்லா நிலையிலும் பின்பற்றுபவராகவும் இருப்பார். எனவே உண்மை முஸ்லிமின் வாழ்வில் பொய்யும், வாக்குறுதிக்கு மாறு செய்வதும் ஒப்பந்தங்களில் மோசடி செய்வதும் நிகழாது.
இந்த கசப்பான உண்மையை வியாபாரிகளும் தொழிலாளர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் மக்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துத் தருவதாக வாக்களித்து, பிறகு அதை நிறைவேற்றுவதில்லை. அவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒப்பந்தம் செய்து, பிறகு அந்த ஒப்பந்தத்தை முறித்து விடுகிறார்கள். பொருள், ரகசியம், வாரிசுரிமை போன்ற விஷயங்களில் வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு மோசடி செய்து விடுகிறார்கள். இது போன்ற குணமுடையவர்கள் நயவஞ்சகர்களாவர். அவர்கள் தொழுதாலும், நோன்பிருந்தாலும், தங்களை முஸ்லிம்களாக எண்ணிக் கொண்டாலும் சரியே.

"நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்பாகத்தில்தான் இருப்பார்கள்.'' (அல்குர்அன் 4:145)

March 18, 2009

கப்ருஸ்தானை அழிக்கின்ற காசு ஆசை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) தங்கத்தால் ஆன ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடை இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனது வாயை (கப்ரில் போடப்படும்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும் (இந்தப் பேராசையிலிருந்து) திருந்தி மன்னிப்பு கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: புகாரி 6439

பணத்தின் மீது கொண்ட பேராசைக்கு மண் தான் இறுதி எல்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் மனிதனின் இந்தக் காசாசை அந்த மண்ணையும், அதாவது கப்ரு ஸ்தானையும் அழிக்கும் அளவுக்கு வந்து விட்டது. வருவாய் பெருக்குகின்றோம் என்ற பெயரில் ஜமாஅத் நிர்வாகத்தினர் பொது மையவாடிகளை அழித்து வணிக மைய வாடிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் பள்ளிவாசல்களில் கப்ருஸ்தான்களை அழித்து, கடைகள் மற்றும் வீடுகளைக் கட்டி வாடகைக்கு விடும் போக்கு அதிகரித்து வருகின்றது. சுனாமி வந்த பிறகும் இந்த ஜமாஅத்தார்கள் சுதாரித்துப் பாடம் பெறவில்லை. பொதுவாகவே பூகம்பம், புயல், வெள்ளம், சுனாமி, கொள்ளை நோய் போன்ற இயற்கைப் பேரழிவுகளாலும், போர்கள் போன்ற செயற்கைப் பேரழிவுகளாலும் மனித வாழ்வு முற்றுகையிடப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற சோதனையான கால கட்டங்களில் இறந்த மனித உடல்களை மொத்தம் மொத்தமாக அடக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வராது என்று யாராலும் சொல்ல முடியாது. ''ஆண்டியும் இங்கே அரசனும் இங்கே'' எனும் அளவுக்கு சமரசம் உலாவும் பொது கப்ருஸ்தான்களில் பெரும் புள்ளிகளின் கப்ருகள் மட்டும் கற்கள் பதிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளன.
இது போக அவ்லியாக்கள், ஷைகுகள், மகான்கள் என்ற பெயரில் அவர்களது கப்ருகள் பொது மைய வாடியிலேயே தர்ஹாக்களாக ஆக்கப் பட்டுள்ளன. இந்த அத்துமீறிய ஆக்கிரமிப்பால் ஏற்கனவே பொது மையவாடிகள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஜமாஅத்தார்கள் வருவாய் என்ற பெயரில் மைய வாடிகளை, வணிக மைய வாடிகளாக மாற்றி வருவது நம்மில் இறப்பவர்களுக்கு இருக்கின்ற ஒரே உரிமையைப் பறிக்கும் அநியாயமும் அக்கிரமும் ஆகும். இருப்பவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிக்கும் அநியாயச் செயலைக் கண்டு மக்கள் நொந்து கொண்டிருக்கும் வேளையில் இறந்தவர்களின் ஆறடி நிலத்தையும் ஆக்கிரமித்து, அபகரித்துக் காசு தேடுவது கடைந்தெடுத்த கயமைத் தனமும் காசு வெறியுமாகும். இப்போதுள்ள சட்டப்படி ஊருக்குள் எங்கேயும் மையவாடி அமைக்க முடியாது.
ஊருக்கு வெளியே தான் மையவாடி அமைக்க முடியும். இத்தகைய இடங்களில் இனி கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு நிலத்தின் விலை வானத்தின் எல்லை தொட்டு நிற்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சமுதாயப் பொது மக்கள் இனி இதைக் கண்டு பொறுத்துக் கொண்டு இருக்கக் கூடாது.
அதிலும் குறிப்பாக இயற்கைச் சீற்றங்கள் போன்ற சோதனைக் காலங்களில் மொத்தப் புதையலுக்கு இது பெருத்த ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இந்த அபாயத்தை ஒரு போதும் மக்கள் அனுமதிக்கக் கூடாது.. ஊருக்கு மத்தியில் மையவாடி அமைந்திருப்பது உண்மையில் ஒரு பாக்கியமே! இந்தப் பாக்கியத்தை பொருளாதாரப் பேராசைக்குப் பலியாக்கவும் நம்முடைய கடைசி இடமான கப்ருஸ்தானைக் காசாக்கும் கயமைத்தனத்திற்கும் ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம் என்று சபதம் ஏற்போமாக!
இந்தச் சவாலை சட்ட ரீதியாக சந்திப்போமாக! பொறுத்தது போதும்! பொங்கி எழுங்கள்.
உங்கள் புதை குழிகளைக் காப்பதற்குப் போர்க் குரல் கொடுங்கள்.

March 15, 2009

மறுமையின் வெற்றி பொறுமையில்!

மனிதனின் இம்மை மறுமை வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது பொறுமைதான். அன்றாடம் நம்வாழ்வில் நிகழ்த்தும் காரியங்கலானாலும், நாம் எதிர்நோக்கும் பிரச்சினையானாலும், நம்மை படைத்த இறைவனை வணங்கும் விசயமானாலும் அனைத்திலும் பொறுமை இருந்தால்தான் வெற்றிபெறமுடியும். அவசரப்பட்டு செய்யும் எந்த காரியமானாலும் அதில் முழுமையிருக்காது. ஏதேனும் ஒரு செயலை நாம் செய்து அதனால் நாம் பாதிப்பை உணரும்போது, 'ஒருநிமிஷம் நான் பொறுமையா இருந்திருக்கக்கூடாதா?' என்று புலம்புவதையும் நம் வாழ்வில் சந்தித்தே வருகிறோம். அதனால்தான் அல்லாஹ் கூறுகின்றான்;நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.2:153 .

தொழுகையில் பொறுமை;............ ......... .......... ......... ......... ........இன்று அவசரயுகத்தில் அல்லாஹ்வை வணங்குவதும் ஜெட் வேகத்தில்தான். குறிப்பாக ரமலான் மாதத்தில் இரவுத்தொழுகையில் இருபது ரக்'அத் தொழுகிறோம் என்ற பெயரில், பொறுமையின்றி மின்னல்வேக தொழுகை தொழுவதை பார்க்கிறோம்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்டுவார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். முஅத்தின் (ஃபஜர்) தொழுகைக்கு (அழைக்க) அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.நூல்;புஹாரி,எண் 994 ,ஸஜ்தாவிற்கு மட்டும் ஐம்பத்து வசனங்கள் ஓதும் நேரம் சுமார் பத்து நிமிடங்கள் என்றால், இன்று இருபது ரக்'அத்துகளை இருபத்து நிமிடத்தில் தொழுபவர்கள் சிந்திக்கவேண்டும்.

பிரார்த்தனையில் பொறுமை;............ ......... .......... நம்முடைய தேவைகளை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்போது, அந்த தேவையை அல்லாஹ் தாமதமாக நிறைவேற்ற நாடினால், நம்மில்சிலர் அல்லாஹ்வின் மீது நிராசையடைவதை பார்க்கிறோம். நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;'நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.நூல்;புஹாரி,எண் 6340

போரில் தேவை பொறுமை;............ ......... ......... அல்லாஹ் கூறுகின்றான்;நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்). 8:65.

நோயின் போது தேவை பொறுமை;............ ......... நமக்கு நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்வதோடு, நோயை நீக்குமாறு அல்லாஹ்விடம் துஆ செய்யவேண்டும். ஆனால் இன்று மருத்துவம் பார்க்கிறோம் அதில் தீரவில்லையானால் மந்திரவாதிகளை நாடி ஓடுகிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு வழங்கும் நோயின் மூலம் நன்மையையும் சுவனத்தையும் அளிக்கிறான்.அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார் இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். நூல்;புஹாரி,எண் 5652

துன்பத்திலும் தேவை பொறுமை;............ ......... கப்பாப் இப்னு அல்அரத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி 'எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்' என்றார்கள்.நூல்; புஹாரி,எண் 6943

பிரியமானவரை இழக்கும் நிலையிலும் பொறுமை;............ ......... ......... .........
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.நூல்;புஹாரி,எண் 6424

வறுமையிலும் பொறுமை;....................................................................................
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்துவிட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சம்ப்பவருக்கு அல்லாஹ் மேலும் சம்ப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை' என்று கூறினார்கள். நூல்;புஹாரி, எண் 6470பொறுமை பற்றி ஏராளமான செய்திகள் உண்டு. படிப்பவர்களின் 'பொறுமையை' சோதிக்கக்கூடாது எனபதற்காக சுருக்கமாக தந்துள்ளோம். அல்லாஹ் நம்மை பொருமையாளர்களாக வாழ்ந்து மரணிக்கச்செய்து, பொறுமையாலர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தில் சேர்த்தருள்வானாக!

March 13, 2009

! எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று இஸ்லாம் கூறுவதை அடிப்படையாக வைத்து இவ்வாறு கேள்வி கேட்கப்படுகிறது. விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள் வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின்படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏது மில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், கடவுள் என்பவன் பல வீனனாக, கையாலாகாதவனாகக் கருதப் படும் நிலை இதனால் ஏற்படும். ''நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்'' என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது. நாளைய தினம் நீங்கள் சென்னை வர விருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. நாளை நடப்பது எப்படி எனக்குத் தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது. நாளை நீங்கள் சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும். நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத்தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது. அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது. அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது. இரண்டு நம்பிக்கைகளிலுமே சில சங்கடங்கள் உள்ளன. இதனால் தான்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே'' என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத் 6381)

இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடு, சட்டதிட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப்பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது. அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது. அறிவுப்பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம். அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களின் நம்பிக்கை போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை. ''எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே'' என்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லா விட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது. எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்பியதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது. அதே நேரத்தில் விதியை நம்பியதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப்பார்த்தால் அதற் காகவாவது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும். ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கை கூட வில்லை என்று வைத்துக் கொள்வோம். விதியை நம்புகின்றவன் ''நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?'' எனக் கூறி மறுநாளே சகஜ நிலைக்கு வந்து விடுவான். அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம். இவ்வளவு பாடுபட்டும் கைகூட வில்லையே என்று புலம்பியே மன நோயாளியாவான். அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் அவன் சகஜ நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.


''உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காக வும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற் காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ் வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். '' (திருக்குர்ஆன் 57:23)

விதியை நம்பியதால் இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். நமக்கு செல்வங்களையும், வசதி களையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும். விதியை நம்புவதன் மூலம் இந்த மன நோயிலிருந்து விடுபடலாம். ''இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத் துள்ளனவே தவிர நம்மால் அல்ல'' என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும். அது போல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தி யடைந்து விடுவோம். இந்த மன நோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும். ''நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவு தான்'' என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் சகஜ நிலையை அடைவான். இவ்விரு நன்மைகளும் விதியை நம்பியதால் மனித குலத்துக்கு ஏற்படு வதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். சிலர் எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று காரணம் காட்டி வணக்க வழிபாடுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். ''நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லவர்களாக ஆவோம்'' என்று நமது விதியில் இருந்தால் நமது முயற்சி இல்லாமலேயே ஈடுபட்டு விடுவோம். நாம் நல்லவர்களாக மாட்டோம் என்று நமது விதியில் எழுதப்பட்டிருந்தால் நாம் முயற்சி செய்வதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர்கள் நினைக்கின்றனர். விதியை நம்பச் சொல்கின்ற இறைவன் தான் முயற்சிகள் மேற் கொள்ளுமாறும் நமக்குக் கட்டளையிடுகிறான் என்பதை மறந்து விடுகின்றனர். மேலும் அவர் உண்மையிலேயே விதியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே வணக்க வழிபாடுகள் செய்யாமல் இருக்கிறார் என்றால் எல்லா விஷயத்திலும் அவர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதில் மட்டும் 'விதி' இருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. இவ்வுலகில் ஒருவனுக்கு ஏற்படும் செல்வம், வறுமை போன்றவையும் பட்டம் பதவிகள் போன்றவையும் விதியின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன என்று தான் இஸ்லாம் கூறுகின்றது. இறைவணக்கத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு விதியின் மீது பழியைப் போடுபவர் இந்த விஷயத்திலும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமல்லவா? தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக் காதது முரண்பாடாகவும் உள்ளது. எனவே, விதியைப் பற்றி சர்ச்சை களைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக் கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்பியதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.

March 12, 2009

மார்க்கம் வழங்கப்பட்டது ஏன்?

படைக்கப்பட்ட கணம் முதல் ஒவ்வொரு மனிதனும் இறைவன் ஒருவன் இருக்கிறான் எனும் உண்மையை, அவனது மனச்சான்று மற்றும் அறிவுமூலம் உணரும் ஆற்றல் அருளப்பட்டுள்ளான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும், மிகச் சிறிய நுட்பமான கூறு வரை இறைவனின் படைப்பே என்பது தெளிவு. இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு நம்மைச் சுற்றிக் காணப்பெறும் ஒவ்வொன்றும் உறுதியான சான்று ஆகும். வான வீதியில் பறக்கும் பறவை, ஆழ்கடலில் நீந்தும் மீன்கள், பாலைவனங்களில் திரியும் ஒட்டகைகள், தென்துருவத்தில் வசிக்கும் பறக்கவியலாத ஆனால் நீந்தக்கூடிய கடற்பறவைகள், பென்குயின்கள், மனித உடலில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத நுண்கிருமிகள், பழங்கள், செடிகள், மேகங்கள், கோளங்கள், முழுமையாக நிறைவான நிலையில் சஞ்சரிக்கும் விண்மீன்கள், பால்மண்டலங்கள், ஆகிய யாவற்றையும் மிக நுண்ணிய அமைப்புகளோடும் மிகச் சிறந்த இயல்புகளோடும் இறைவன் படைத்தான்.
இதுபோலவே இந்தப் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு உறுதுணையாக அமைந்த எல்லா அமைப்புகளும் மிக நுணுக்கமான சமநிலை பேணும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. இந்த சமநிலையில் மில்லிமீட்டர் அளவு மாற்றம் அல்லது பிறழ்வு ஏற்பட்டாலும் புவியில் வாழ்வது சாத்தியமில்லாமல் ஆகிவிடும். அந்தச் சமநிலை பற்றிச் சிறிது உற்று நோக்கினால் மிகச் சிறந்த முறையில் அவை கணிக்கப் பெற்றிருப்பதும் அவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப் பெற்றிருப்பதும் புலனாகும். எடுத்துக்காட்டாக பூமி சற்றே குறைந்த வேகத்தில் சூரியனைச் சுற்றி சுழன்றால் பகலுக்கும் இரவுக்கும் இடையில் மிக அதிகமான அளவில் வெட்பநிலை வேறுபாடு உண்டாகும்; வேகமாகச் சுழன்றால் சூறாவளியும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு புவி வாழ்க்கையே பாதிக்கப்பட்டு விடும்
இதுபோல, இந்தப் புவியை உயிர்வாழ்வதற்கு ஏற்ற ஒரு கோளாக அமைய உதவும் பல நுண்ணிய சமநிலை பேணும் படைப்பினங்கள் உள்ளன. இவையாவும் எதேச்சையாக எழுந்தவை என்று கூறவியலாது. இத்தகைய நேர்த்தியான திட்டங்களும் சமநிலைகளும் எல்லாம் குருட்டாம் போக்கில் உண்டானவை என்று எந்த அறிவுடைய மனிதனும் கூறமாட்டான். ஒரு காரோ, கேமராவே – படம் பிடிக்கும் கருவியோ - அதை வடிவமைத்த விழிப்புடைய ஒருவரை நினைவூட்டுகிறது. இதுபோலவே, ஒன்றை ஒன்று சார்ந்துள்ள பல இணைப்பு முறைகள் நிறைந்த இந்தப் பிரபஞ்சம், தானாகவே உருவான தன்னைத்தானே நிர்வகித்துக் கொள்ளக் கூடிய ஒரு பருப்பொருள் என யாரும் முடிவு கட்ட முடியாது. இறைவன், இவையாவும் அவனால் படைக்கப்பட்டவை எனும் உண்மையை நமக்கு குர்ஆனில் அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டி ருக்கிறான். மேகத்திலிருந்து உங்களுக்கு மழையை பொழியச் செய்பவன் அவன் (இறைவன்)தான். அதிலிருந்து தான் நீங்கள் நீர் அருந்து கிறீர்கள்; நீங்கள் உங்கள் கால் நடைகளை மேய்க்கும் புற்பூண்டுகளுக்கு நீரும் அதிலிருந்தே பெறுகிறீர்கள். அதிலிருந்தே உங்க ளுக்காக பயிர்பச்சைகளையும், ஆலிவ் பழங்களையும் காய்க்கச் செய்கின்றான். சிந்தித்து அறியக் கூடிய மக்களுக்கு இதில் நிச்சயமாக அத்தாட்சி உள்ளது. இரவையும் பகலையும் உங்களுக்குப் பயன்படும் வகையில் படைத்துள்ளான். சூரியனையும் சந்திரனையும் விண்மீன்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் இணங்கிச் செயல்படும்படி படைத்திருக்கிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் நிச்சயமாக அத்தாட்சி இருக்கின்றது. மேலும் விதவிதமான வண்ணங்கள், அவன் உங்களுக்காக படைத்தவை யாவற்றையும் கவனிப் பவர்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது. (அந்நஹ்ல் 16:10-13)
இவையாவைற்றையும் படைத்தவன் படைக்கும் ஆற்றல் இல்லாதவனுக்கு ஒத்தவனாவானா? நீங்கள் இதைக் கவனிக்க வேண்டாமா? (அந்நஹ்ல் 16 :17)
மேலே கூறப்பட்டவற்றை ஆழ்ந்து சிந்தித்தால், மார்க்க(மத) அறிவு அறவே இல்லாதவரையும் கூட இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணரச் செய்து அவனுடைய வல்லமையையும் ஆற்றலையும் பாராட்டத்தூண்டும்; தன்னுடைய உடலைப் பற்றி சிந்தித்தால் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கும் மிகச் சிறந்த படைப்பை உணரத் தூண்டும்.
அகில உலகங்களையும் காத்தருளும் இறைவனே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் இயற்கையையும், மனிதனையும் படைத்தவன் ஆவான். உயிரினங்கள், மனிதன் உட்பட யாவற்றுடையவும் தேவைகளை நன்கறிந்தவனும் அவனே ஆவான். அதனால் தான் மனிதனுக்கு மிகவும் பொருத்தமான வாழ்க்கை முறையாக இறைவன் வழங்கிய மார்க்கம் விளங்குகிறது. இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றிப் பிடித்தாலே மக்கள் அமைதியாக மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.
இறைவன் வழங்கி அருளிய நெறி நூலைப் பற்றி அறியாத மனிதன் கூடத் தன்னைச் சூழ்ந்துள்ளவற்றை, உற்று நோக்கிச் சிந்தித்தால், இறைவனை உணர்ந்து கொள்ள முடியும். புரிந்துகொள்ள கூடிய மக்களுக்கு உலகில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ( 3:191,192)
வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகலின் மாற்றத்திலும் அறிவுடையோருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன. இத்தகையோர் நின்ற நிலையிலும் அமர்ந்திருக்கும் போதும், படுத்திருக்கும்போதும் அல்லாஹ்வை நினைந்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்தவர்களாக, “எங்கள் இறைவா! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன்; நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக” என்று பிரார்த்திப்பார்கள். (3:191,192)
இந்தச் சந்தர்ப்பத்தில் மார்க்கத்தின் தேவை வெளிப்படுகிறது. இதற்குக் காரணம், படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை உணர்ந்த மனிதன் நிச்சயமாக அவனை நெருங்கவே விரும்புவான். அவனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விழைவான். அவனுடைய நேசத்தையும் கருணையையும் பெறுவதற்குரிய வழிகளைக் காண நாடுவான்; இதற்குரிய ஒரே வழி குர்ஆன் வலியுறுத்தும் பண்பாடுகளை நன்றாக அறிந்து கொள்வதுதான். குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கு, மாற்றம் ஏதும் இல்லாதது; இஸ்லாமின் வழிகாட்டும் நூல்; இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம்.

March 9, 2009

Greatest Prophet's Greatest Speech

This ‘Farewell Speech’
of the beloved Prophet Muhammad (peace be upon him) is just one example of his immaculate greatness. In one speech, the greatest Prophet presented Islam in a nutshell – The Speech of Surgical Precision!Herein is an exemplary example to the leaders of Muslim Ummah as to how they should adopt a visionary approach while giving their public talks about Islam.Muqith Mujtaba அலி

The Last Sermon of the Prophet

The last sermon of the Prophet-peace be upon him- is known as Khutbatul Wada'. It is mentioned in almost all books of Hadith. Following Ahadith in Sahih Al-Bukhari refer to the sermon and quote part of it. See Al-Bukhari, Hadith 1623, 1626, 6361) Sahih of Imam Muslim also refers to this sermon in Hadith number 98. Imam al-Tirmidhi has mentioned this sermon in Hadith nos. 1628, 2046, 2085. Imam Ahmed bin Hanbal has given us the longest and perhaps the most complete version of this sermon in his Masnud, Hadith no. 19774.

This Khutbah of the Prophet-peace be upon him- was long and it contained much guidance and instructions on many issues. The Prophet-peace be upon him- gave this sermon in front of a large gathering of people during Hajj.

Whosoever heard whatever part of the sermon reported it and later some scholars put it together. It is a great khutbah and we should all pay attention to its message and guidance.

Following are the basic points mentioned in this khutbah:


O PeopleLend me an attentive ear, for I know not whether after this year, I shall ever be amongst you again. Therefor listen to what I am saying to you very carefully and take these words to those who could not be present here today.

O PeopleJust as you regard this month, this day, this city as sacred, so regard the life and property of every Muslim as a sacred trust. Return the goods entrusted to you to their rightful owners. Hurt no one so that no one may hurt you. Remember that you will indeed meet your Lord, and that He will indeed reckon your deeds. Allah has forbidden you to take usury (interest); therefore all interest obligation shall henceforth be waived. Your capital, however, is yours to keep. You will neither inflict nor suffer any inequity.Allah has Judged that there shall be no interest and that all interest due to Abbas Ibn ‘Abd al Muttalib (the Prophet's uncle) shall henceforth be waived.Beware of Satan for the safety of your religion. He has lost all hope that he will ever be able to lead you astray in big things, so beware of following him in small things.


O PeopleIt is true that you have certain rights in regard to your women, but they also have rights over you. Remember that you have taken them as your wives, only under Allah's trust and with His permission. If they abide by your right then to them belongs the right to be fed and clothed in kindness. Do treat you women well and be kind to them, for they are your partners and committed helpers. And it is your right that they do not make friends with anyone of whom you do not approve, as well as never to be unchaste.


O PeopleListen to me in earnest, worship Allah, say your five daily prayers (Salah), fast during the month of Ramadan, and give your wealth in Zakah. Perform Hajj if you can afford to.All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over a black, nor a black has any superiority over a white- except by piety and good action. Learn that every Muslim is a brother to every Muslim and that the Muslims constitute one brotherhood. Nothing shall be legitimate to a Muslim, which belongs to a fellow Muslim unless it was given freely and willingly. Do not therefor, do injustice to yourselves.Remember one day you will appear before Allah and answer for your deeds. So beware, do not stray from the path of righteousness after I am gone. People, no prophet or apostle will come after me and no new faith will be born. Reason well therefore,


O people, and understand words which I convey to you. I leave behind me two things, the Quran and the Sunnah (Hadith), and if you follow these you will never go astray. All those who listen to me shall pass on my words to others and those to others again; and may the last ones understand my words better than those who listened to me directly. Be my witness,


O Allah, that I have conveyed your message to your people."

March 3, 2009

உதவி தேடுதல்?

இன்று முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் இறந்துபோன அவுலியாக்களான இறைநேசர்களிடம் உதவி தேடலாம்; அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்ற தவறான நம்பிக்கையில் “தர்கா” என்ற பெயரால் படையெடுக்கின்றனர். இந்தப் பெரும்பாலான சமாதிகளுக்கு(தர்கா) சரியான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்பது ஒரு புறம் இருக்க, அந்த சமாதிகளில் போய் தங்கள் தேவைகளுக்காக உதவி தேடுவதை அவர்களும், அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முகல்லிது மவ்லவி புரோகிதர்களும் சரி கண்டு நியாயப்படுத்தி வருவது பெரும் வேதனை தரும் விஷயமாகும். காரணம் முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரும் கொண்ட மக்கள் இந்த வழிகேட்டின் காரணமாக நாளை மறுமையில் தங்களின் இருப்பிடத்தை நரகில் தேடிக்கொள்கின்றனர் என்று தெளிவாகக் கூறும் அல்குர்ஆன் அல்கஹ்ஃபு 18:102-106 இறைவாக்குகளை - எச்சரிக்கைகளைத் துணிவுடன் இவர்கள் நிராகரிக்கின்றனர் என்பதுதான்.

அதற்கு மேலும் வேதனை தரும் விஷயம் இந்த முகல்லிது மவ்லவிகள், கேவலம் அழிந்து போகும் இந்த அற்ப இவ்வுலக வாழ்க்கையில் தங்களின் ஒரு ஜான் வயிற்றை நிரப்ப, இவ்வளவு தரம் தாழ்ந்து அறிவுக்கே பொருந்தாத கற்பனை உதாரணங்களைக் கூறி அல்லாஹ் அல்குர்ஆன் லுக்மான் 31:6 -ல் எச்சரித்திருப்பதையும் கண்டு கொள்ளாமல் மனம் துணிந்து மக்களை ஏமாற்றி வருவதுதான்.

மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிசாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையயோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு. (31:6)
தர்கா, தரீக்கா முகல்லிது மவ்லவிகளின் இப்படிப்பட்ட அறிவீனமான வாதம் வருமாறு:
அல்லாஹ் ஒருவன்தான் நம்முடைய ரப்பு; அவனே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து தருகிறவன் என்பதில் உங்களை விட எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. இந்த அவுலியாக்களின் மூலம் தருகிறான் என்றே கூறுகிறோம். நம்முடைய தேவைகளுக்காக அவுலியாக்களிடம் உதவி தேடிச் செல்வது தவறு என்றால், நமது மருத்துவ தேவைக்காக டாக்டர்களிடம் உதவி தேடிச் செல்வதும் தவறுதான்; வழக்கு சம்பந்தமாக வக்கீல்களிடம் உதவி தேடுவதும் தவறுதான்; கட்டிட தேவைக்காக பொறியாளர்களிடம் உதவி தேடுவதும் தவறுதான்; பணக்கஷ்டம் ஏற்பட்டால், நம்மைப் போன்ற மற்ற மனிதர்களிடம் உதவி தேடுவதும் தவறுதான்; இப்படிப்பல தரப்பட்ட நம்முடைய தேவைகளுக்காக மற்றவர்களிடம் உதவி தேடாமல் அல்லாஹ்விடம் மட்டுமா உதவி தேடுகிறோம்? இங்கெல்லாம் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவதை சரி கண்டு ஏற்கும் இவர்கள், அவுலியாக்களிடம் உதவி தேடுவதை மட்டும் ஏன் மறுக்கிறார்கள்? அதை ஷிர்க்(இணை வைப்பு) என்கிறார்கள். நாங்கள் ஷிர்க் செய்கிறோமா? அல்லது அவர்களுக்குக் கிறுக்குப்பிடித்திருக்கிறதா? என்று கேட்டு தங்களை நம்பியுள்ளவர்களை ஏமாற்றி நரகில் தள்ளுகிறார்கள். அந்த அப்பாவி மக்களும் தங்களின் சிந்தனையை இந்த முகல்லிது மவ்லவிகளிடம் கடன் கொடுத்து விட்டு, அல்லாஹ் 31:6-ல் கூறியுள்ளது போல், அவர்களின் அறிவில்லாத வீணான பேச்சுக்களை இறைவாக்காக ஏற்று, அதன்படிச் செயல்பட்டு, நாளை மறுமையில் தங்களின் இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்கின்றனர்.
இந்த முகல்லிது புரோகித மவ்லவிகள் மனந்துணிந்து அறிந்த நிலையில் செய்யும் ஹிமாலயத்தவறு என்ன தெரியுமா? அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கக் கூடிய உதவியான “இஸ்திஆனத்” (பார்க்க அல்ஃபாத்திஹா 1:4) என்பதற்கும், மனிதர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்ளும் “தஆவுன்” (பார்க்க அல் மாயிதா 5:2) என்பதற்குமுள்ள ஹிமாலய வேறுபாட்டை தெரிந்திருந்தும் தெரியாதது போல் நடிப்பதுதான். இதையும் அல்லாஹ் அல்குர்ஆன் அல்பகரா 2:75 -ல் “இவர்களில் ஒரு சாரார் இறைவாக்கைக் கேட்டு, அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்” என்றும், அல்குர்ஆன் பக்ரா 2:146 மற்றும் அன்ஆம் 6:20-ல் கூறுவதுபோல் சத்தியத்தை அறிவார்கள்; அறிந்த நிலைமையிலேயே அதை மறைப்பார்கள் என்றும் அப்பட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளான்.

எனவே எமது இந்த விளக்கங்கள் இந்தப் புரோகித மவ்லவிகளின் உள்ளங்களில், அவர்கள் புரோகிதத்தில் நிலைத்திருக்கும் வரை, அதாவது மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் வரை கடுகளவும் மாற்றத்தை ஏற்படுத்தாது, இதை அல்குர்ஆன் யாஸீன் 36:21 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. எனவே அவர்கள் பின்னால் செல்லும் முஸ்லிம்களே இந்த விளக்கங்களை நடு நிலையோடு படித்து சிந்தித்து விளங்கி நேர்வழி பெற முன் வரவேண்டும்.

சூரத்துல்ஃபாத்திஹா 1:4 -ல் காணப்படும் “இஸ்திஆனத்” என்ற உதவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உதவி அல்ல; மேலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கும் உதவி நினையாபுரத்திலிருந்து கிடைப்பதாகும். அதற்குரிய காரணகாரியத்தைத் துள்ளியமாக அறிய முடியாது. இந்த உதவியை அல்லாஹ் அல்லாத யாரிடமும் அவர்கள் இறந்து போன அவுலியாக்களாக இருந்தாலும், உயிரோடிருப்பவர்களாக இருந்தாலும் கேட்க முடியாது. அது ஷிர்க்காகும்; இணை வைப்பாகும். அதற்கு மாறாக “தஆவுன்” என்ற உதவி உயிரோடிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்வதாகும். 5:2 இறைவாக்கைப் படித்துப் பார்த்தால் இது தெளிவாக விளங்கும். இந்த உதவி காரண காரியங்களுடனேயே நிறைவேறும்.

உதாரணமாக ஒரு மருத்துவரிடம் சென்று நமது வியாதி பற்றி முறையிடுகிறோம். அவர் காது கொடுத்து கேட்கிறார். தனது சந்தேகங்களை வாய்திறந்து கேட்கிறார். பரிசோதனைக்கருவிகள் மூலம் பரிசோதித்து விளங்குகிறார். வியாதியை முடிவு செய்து மருந்து தருகிறார். அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்கிறார். அவர் கொடுத்த மருந்தை அல்லது கடையில் வாங்கி அதைச் சாப்பிடுகிறோம். இவை அனைத்தும் காரண காரியங்கள். இந்த மருத்துவரிடம் ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சென்று அவரிடம் வியாதியைச் சொல்லி வைத்தியம் செய்து கொள்கிறோம்.

நோயாளிகளில் இருவர் கூட ஒரே நேரத்தில் அவர்களின் வியாதி பற்றி முறையிட்டால், அவரால் அதைக் கேட்கவும் முடியாது; முறையாக விளங்கி மருந்து தரவும் முடியாது. இந்த நிலையில் ஏக காலத்தில் பலர் முறையிட்டால் அவரது நிலை என்னவாகும்? அதுபோல் அந்த மருத்துவர் நனடறாகத் தூங்கிக்கொண்டிருக்கும் போதும், நோயாளியின் குறைபாட்டைக் கேட்டு அதற்கு மருத்துவம் செய்ய முடியாது.

இந்த பலகீனங்கள் மருத்துவர், வழக்குரைஞர், பொறியாளர் இதுபோல் உதவி செய்யும் அனைத்து மனிதர்களிடமும் காணப்படவே செய்யும். ‘தஆவுன்’ என்ற பரஸ்பர உதவி செய்தலின் நிலை இதுதான்.

இன்னும் ஓர் உதாரணம்:
இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அவுலியாவை - இறைநேசரையே எடுத்துக் கொள்வோம். அவர் மக்களிடம் மிகமிக அதிகமாக அன்பு காட்டுகிறவர். தன்னிடம் வந்து யார் எந்த உதவி கேட்டாலும் மறுக்காமல் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொடுப்பவர். மக்களுக்கு உதவி செய்வதையே தனது கொள்கையாகக் கொண்டவர். அப்படிப்பட்ட உயர்ந்த இறைநேசர்; அவரிடம் போய் முறையிட்டு உதவி தேடுகிறவர்கள் ஒவ்வொருவராக, தனித்தனியாக மட்டும் சென்று தான் உதவி கேட்க வேண்டும். எல்லோரும் ஒரே நேரத்தில் உதவி கேட்டால், யாருடைய அழைப்பையும் அவரால் கேட்க முடியாது என்பதையும் இந்த மவ்லவிகள் மறுக்க முடியாது.

மேலும் அந்த அவுலியா - இறைநேசர் மரணிக்கவில்லை. சிறு மரணம் என்று சொல்லக்கூடிய கடுமையான உறக்கத்தில் இருக்கிறார். இந்த நிலையில் யாரும் கூட்டாக அல்ல தனியாக அவரது தலைமாட்டில் போய் நின்றுகொண்டு, தங்களுடைய கஷ்டங்களைக் கூறி உதவி கேட்கிறார்கள் கஷ்டங்களைக் கூறி உதவி கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த அவுலியாவால் அவர்களில் இந்த தனி மனிதரது அழைப்பையேனும் செவியேற்று அவருக்கு வேண்டிய உதவியைச் செய்ய முடியுமா? நிச்சயமாக தூக்கத்தில் அவரால் உதவி செய்ய முடியாது என்பதையும் இந்த புரோகித மவ்லவிகளால் மறுக்க முடியாது.

இந்த நிலையில் அந்த அவுலியா பெரிய மெளத் என்ற நிரந்தர மரணத்தை அடைந்து, அவருக்காக ஜனசா தொழுகை தொழுது, குழி தோண்டி மண்ணுக்குள் அடக்கம் செய்த பின்னர், அந்தப் புதைகுழியின் தலைமாட்டில் போய் நின்று கொண்டு உதவி தேடினால் அவரது சடலத்தால் உதவி செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது என்பதையும் மறுக்க முடியாது.

அப்படியானால் இந்த முகல்லிது மவ்லவி புரோகிதர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டு, மண்ணுக்கடியில் சென்றவர்களிடம் உதவி தேட முடியும் என்று கூறுவது எந்த அடிப்படையில்? தஆவுன் என்ற பரஸ்பர உதவி அடிப்படையிலா? அல்லது படைத்து, உணவளிதது, பாதுகாத்து வரும் எஜமானன் அல்லாஹ்விடம் மட்டும் கேட்கும் இஸ்திஆனத் என்ற காரண காரியங்கள் காண முடியாத உதவியா? ஆம்! இந்த மூட முகல்லிது மவ்லவி புரோகிதர்கள், அவுலியாக்களுக்கும் தெய்வீக சக்தி இருக்கிறது. அத்துவைதம் என்ற மனிதனும் இறைவனுடன் இரண்டறக் கலந்து ஒன்றாக முடியும் என்ற இறைவனுக்கு இணை வைக்கும் (வஹ்தத்துல்வுஜூது) மூட நம்பிக்கையின் அடிப்படையில், ‘இஸ்திஆனத்’ என்ற அல்லாஹ்விடம் மட்டும் கேட்கும் உதவியைத்தான் இறந்து அடக்கம் செய்யப்பட்ட அவுலியாக்களிடம் கேட்க மக்களைத் தூண்டிவருகின்றனர்.

அல்குர்அன் 18:102 -106 இறை எச்சரிக்கைகளின்படி இஸ்திஆனத் என்ற அல்லாஹ்விடம் மட்டும் கேட்க வெண்டிய உதவியை, அவுலியாக்களிடம் கேட்பதன் மூலம், இறந்து போன் அந்த அவுலியாக்களை தங்களின் பாதுகாவலர்களாக - உதவி செய்பவர்களாக நம்புவதன் மூலம் இறை நிராகரிப்பவர்களாகி - காஃபிர்களாகி நரகம் புகும் நிலைக்கு ஆளாகிறார்கள். அவர்களின் தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ், தான தர்மம் இவை அனைத்தும் ஏற்கப்படாது. அவற்றிற்கு எவ்வித மதிப்பும் இல்லை. அவை அனைத்தும் வீணாகி விடும். நரகில் எறியப்படுவார்கள். அவர்களுக்காக நரகத்தைத் தயார் செய்து வைத்திருப்பதாக அல்லாஹ் தெளிவாக நேரடியாகவே இந்த 18:102 -10 வசனங்களில் கூறி எச்சரிக்கிறான்.

இந்த 18:102-106 இறைவாக்குகளை படித்துக்காட்டி தர்கா சடங்குகள் எவ்வளவு பெரிய பாராதூரமான கொடிய இணைவைக்கும் குற்றம் என்று சொன்னவுடன் இந்த முகல்லிது புரோகித மவ்லவிகள் என்ன சொல்லி மக்களை ஏமாற்றவார்கள் தெரியுமா?

இந்த 18:102 இறைவாக்கு “நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா”? என்று ஆரம்பிப்பதைக் காட்டி, இது முஸ்லிம்களுக்கல்ல; காஃபிர்களுக்கு இறங்கிய ஆயத்து; முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி, வஞ்சித்து வயிறு வளர்த்து வருகின்றனர். சுய சிந்தனையற்ற முஸ்லிம்களும், இவர்களின் இந்த நயவஞ்சகக் கூற்றை அப்படியே நம்பி, கத்தம், ஃபாத்திஹா, கூடு, கொடி, கந்தூரி, மீலாது, மெளலூது, யாகுத்பா, ஸலாத்து நாரியா என்ற நெருப்பு(நரக) ஸலவாத் இத்தியாதி, இத்தியாதி என நரகிற்கு இட்டுச் செல்லும் வழிகேட்டு சடங்குகளை பக்தி சிரத்தையோடு செய்து வருகின்றனர்.

இந்த புரோகித முகல்லிது மவ்லவிகளின் கூற்றுப்படியே, அல்லாஹ் நிராகரிப்பவர்கள் - காஃபிர்கள், அல்லாஹ் நிராகரிப்பவர்கள் - காஃபிர்கள் என்று சுட்டிக்காட்டுவது யாரைத் தெரியுமா? இப்றாஹீம் (அலை) இஸ்மாயீல்(அலை) ஆகிய சிறப்புக்குரிய இரண்டு நபிமார்களின் நேரடி வாரிசுகளாகும். அவர்கள், எந்த இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தை நம்மைப் பின்பற்றும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அந்த நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகள். எங்கள் தந்தை இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றும், முஸ்லிம்கள் நாங்கள் என்று சொல்லிக் கொண்டு தான் உண்மையான அவுலியாக்களை - இறைநேசர்களை (இவர்கள் அவுலியாக்களாக்கியுள்ள குடிகாரர்களையும், பயித்தியங்களையும், கஞ்சா மஸ்தான், பீடி மஸ்தான், பீங்காட்டப்பா போன்றவர்களையும், கழுதைகளையும், கட்டைகளையும் அல்ல) தங்களின் பாதுகாவலர்களாகக் கொண்டு அவர்களிடம் உதவி தேடி வந்தனர். இந்த உண்மையை 10:18, 39:3 இறைவாக்குகளைப் பொருள் அறிந்து படித்து விளங்குகிறவர்கள் மறுக்காமல் ஒப்புக் கொள்வார்கள்.

இப்போது நாம் சிந்திக்க வேண்டும். தங்களை முஸ்லிம்கள் என்றும், தங்களின் தந்தை இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்ட குறைஷ்களை அல்லாஹ் காஃபிர் - நிராகரிப்பாளர்கள் என்று ஏன் கூறுகிறான்?
அப்படி நாம் சிந்தித்து விளங்கினால் நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது தங்களை முஸ்லிம்கள் என்றும், இப்றாஹீம்(அலை) அவர்களின் மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, அல்லாஹ்வின் அடியாளர்களான அவுலியாக்களைத் தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் இடையீட்டாளர்களாக (MEDIATOR) அவர்களிடம் உதவி கோரினால் அல்லது அவர்களின் பொருட்டால் கேட்டால், அவர்கள் நிராகரிப்பாளர்களாக - காஃபிர்களாக ஆகிறார்கள். நரகத்திற்குரியவர்களாக ஆகிறார்கள். இதையே அல்குர்ஆன் 18:102 -106 இறைவாக்குகள் கடுமையாக எச்சரிக்கின்றன.
தன்னை முஸ்லிம் என்றும் இஸ்லாம் என்ற நேரிய மார்க்கத்தை மட்டுமே பின்பற்றுகிறேன் என்று சொல்லிக் கொள்ளும் உண்மை முஸ்லிம் தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் அவுலியாக்களை ஒருபோதும் கொண்டு புகுத்தமாட்டார். உங்கள் பிடரி நரம்பைவிட நான் உங்களுக்கு நெருக்கமானவனாக இருக்கிறேன்; என்னிடமே உதவி தேடுங்கள் ‘இஸ்திஆனத்’ (பார்க்க அல்குர்ஆன் 1:4, 50:16, 2:45,153) என்று அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளைப் புறக்கணிக்காமல், அவற்றை மதித்து தன்னுடைய எந்தத் தேவையாக இருந்தாலும் அதை அல்லாஹ்விடமே முறையிடுவார். உலகக் காரியங்களில் இடைத்தரகர்களைப் பிடித்து குறுக்கு வழிகளில் - தவறான வழிகளில் லஞ்சம் கொடுத்து காரியங்களைச் சாதித்துக் கொள்வது போல், அரசையும், அதிகாரிகளையும் ஏமாற்றுவது போல், அவுலியாக்களிடம் உதவி தேடி உண்டியலில் லஞ்சமாகக் காசை போட்டு குறுக்கு வழியில் படைத்த அல்லாஹ்வை ஏமாற்றி விட முடியும் என்று குருட்டுத்தனமாக நினைக்க மாட்டார்.

மனிதர்களுக்கிடையே இடம்பெறும் ‘தஆவுன்’ என்ற பரஸ்பர உதவிக்கும், அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கும் இஸ்திஆனத் என்ற உதவிக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல், அல்லது அல்லாஹ் 2:146, 6:20 இறைவாக்குகளில் கூறி இருப்பது போல் அவர்கள் பெற்ற குழந்தையை அறிவதுபோல் நன்கு அறிந்த நிலையில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும் இந்த முகல்லிது புரோகித மவ்லவிகள்.

நாங்கள்தான் அரபி கற்ற மேதைகள்; எங்களுக்குத்தான் குர்ஆன், ஹதீஸ் தெளிவாக விளங்கும் எனத் தம்பட்டம் அடிக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி போன்ற மவ்லவி புரோகிதர்கள் ்இஸ்திஆனத்’ என்ற உதவிக்கும் ‘தஆவுன்’ என்ற உதவிக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் பிதற்றுகிறார்களா? அல்லது நன்கு அறிந்த நிலையில் மக்களை ஏமாற்றி வஞ்சித்து நரகில் தள்ளுகிறார்களா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஹிஜ்ரி 400 க்குப்பிறகே மத்ஹபுகள் கற்பனை செய்யப்பட்டன; அதன்பின்னர் ஹிஜ்ரி 600 வாக்கில் தரீக்காக்கள் கற்பனை செய்யப்பட்டன. அதன்பின்னரே அதாவது ஹஜ்ரி 600க்குப் பிறகே இந்த தர்கா - சமாதிச் சடங்குகள் அனைத்தும் முஸ்லிம்களிடையே அரங்கேறின. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அதாவது ஹிஜ்ரி 11க்குப் பிறகு மார்க்கத்தில் ஓர் அணுவளவும் புதிதாகச் சேர்க்க முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாக நெற்றியடியாக 5:3, 7:3, 3:19,85, 33:21,36,66,67,68 இறை வாக்குகள் கூறிக்கொண்டிருக்க இத்தனை குர்ஆன் வசனங்களையும் நாளை மறுமையில் நபி(ஸல்) அவர்கள் முறையிடுவதாக 25:30-ல் உள்ளபடி அப்பட்டமாகப் புறக்கணித்துவிட்டு தங்கள் சொந்த யூகங்களையும், கற்பனைகளையும் கூறி (பார்க்க 31:6) மக்களை வழிகெடுக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு சுமார் 200 தலைமுறைகளுக்குப் பிறகே தோன்றிய தர்கா -சமாதி சடங்குகளை நியாயப்படுத்தி வருகிறார்கள் என்றால் இவர்களது முடிவும் இவர்களைப் பின்பற்றிச் செல்லும் பெருங்கொண்ட முஸ்லிம் மக்களின் நிலையும் அல்லாஹ் 2:159-162, 18:102-106,33:36,66,67,68 இறைவாக்குகளில் கூறி இருப்பது போல், அல்லாஹ்வின் வாக்குகள் நிறைவேறுமா? இல்லையா? என்பதை மக்களே முடிவு செய்யுங்கள்.

March 1, 2009

சமுதாய வாழ்க்கையில் மார்க்கத்தின் தாக்கம்!

இறை நம்பிக்கையின்மை மனித வர்க்கத்தின் மீதும் சமுதாயங்கள் மீதும் பல்வேறு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மார்க்கத்திலிருந்து அகன்று அல்லது அதைப் புறக்கணித்து வாழும் சமுதாய மக்களிடையே அநீதியும், தன்னலமும், ஒருவரை ஒருவர் நம்பாத நிலையுமே நிறைந்து காணப்பெறும். இறை நம்பிக்கையற்ற சமுதாயங்களின் இயல்பும் இவ்விதமே காணப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. மார்க்க நடைமுறைகளும் பண்புகளும் தாம் தனி மனிதர்களுடையவும் சமுதாயங்களுடையவும் ஒழுக்க மேம்பாட்டை உறுதி செய்யத்தக்கவை. இறைவன் மீதும் மறுமையிலும் நம்பிக்கையுடையவர்களே, அவர்கள் இறைவனின் திருப்தியைப் பெறுவதற்காகவே வாழ்வதால் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். இறைவனுக்குப் பயந்து மிக்கக் கவனத்துடன் தீயச் செயல்களைத் தவிர்த்துக் கொள்வார்கள்; இறைவன் விரும்பாத மனப்பான்மையையும் நடத்தையையும் விலக்கிக் கொள்வார்கள். இத்தகைய மக்களைக் கொண்ட சமுதாயம் பிரச்சினைகளுக்கு உள்ளாகாது.
ஆனால், இறை நம்பிக்கையற்றவன், தன்னுடைய செயல்களின் விளைவாக இறுதியில் நற்கூலி வழங்கப்படுவான் அல்லது தண்டிக்கப்படுவான் என்ற உணர்வின்றி, இறைவன் வகுத்தளித்த நியதிகளைப் பேணத் தவறி விடுகிறான். நீதிப் தீர்ப்பு நாளை நம்பாத அவன் தன்னுடைய தீயச் செயல்களிலிருந்து நீங்கும் எண்ணமே இல்லாமல் வாழ்ந்து வருகிறான். சமுதாயம் ஆதரிக்காத சில நடைமுறைகளைத் தவிர்க்கும் ஏராளமான மக்கள், நிர்ப்பந்ததிற்கு உள்ளாகும் போது, தூண்டப்படும்போது அல்லது வாய்ப்பு கிட்டும் போது மற்ற தீய நடவடிக்கைகளில் ஈடுபடத் தயங்க மாட்டார்கள்.
இறை நம்பிக்கையின்மைக்கு இலக்கானவர்கள் இங்கே இவ்வுலகில் வாழ்ந்திருக்கும் போதே தொல்லைகளுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் தங்களுடைய இதயங்களில் மார்க்க (நற்)பண்புகளைப் பேணி நடக்க வேண்டும் என்ற உணர்வுடையவர்கள் இல்லாமல் இருக்கமுடியாது. ஒவ்வொரு மனிதனும் 'மனச்சாட்சி'யுடனேயே படைக்கப்பட்டுள்ளான். இறை நம்பிக்கையாளர்களிடம் இந்த அமைப்பு மிகுந்த இணக்கத்துடன் இயங்குகிறது; மார்க்கப் பண்புகைளப் பேணாதவர்களிடம் இது நேராகச் சீராக இயங்குவதில்லை. இதை வேறு விதமாகக் கூறுவதானால், மனச்சாட்சிக்கு இசைந்து நடக்காதவர்கள் மார்க்கப் பண்புகளை விட்டு அகன்று ஆன்மீக அவலங்களுக்கு உள்ளாகிறார்கள் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் உண்மையில் அவனைப் படைத்த ஒருவன் உண்டு என்றும், அவனிடம் நாம் கணக்குக் கொடுத்தாக வேண்டும் என்றும் ஒழுக்கத்தில் மேம்பாடும் நிறைவும் உடையவர்களாக வாழ வேண்டும் என்றும் அறிந்தவர்கள் தாம். ஆனால் இந்த உண்மைகள் எல்லாம் அவனுடைய இவ்வுலக ஆசாபாசங்களோடு மோதுகின்றவையே.
இதனால் தான் தனி மனிதர்கள், ஒன்று முழுமையாக மார்க்கத்தை நிராகரித்து விடுவார்கள்; அல்லது, “நான் நேர்மையானவன், நல்லவன், உண்மையாளன்” என்று கூறி குர்ஆனின் அறிவுரைக்கு உகந்து வாழாமல் இருப்பதற்குச் சாக்குப் போக்குச் சொல்வார்கள். ஆனாலும் இந்த இரு சாராருமே உண்மையில் உள்ளுக்குள் இறைவன் அங்கீகரிக்கும் முறையில் வாழ வேண்டும் என்பதை அறிவார்கள். மார்க்கப் பண்புகளை உதாசீனப்படுத்தி வாழும் சமுதாயங்களில் காணப்பெறும் மனவேதனைக்கும், உளவியல் ரீதியான மற்றும் ஆன்மீக அவலங்களுக்கும் எல்லாம் காரணம் இந்த ஆன்மீகத் தளர்வுதான். இதை “மனச்சாட்சியின் வேதனை” என்கிறோம்.
இவ்வுலகில் வாழும்போதே இந்த அவலத்தை நுகர்பவர்களின் நிலையை குர்ஆன் இவ்வாறு வர்ணிக்கிறது:
அவர்கள், “மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் நீங்கள் கூறுவது எப்போது நிறைவேறும்?” என்று கேட்கிறார்கள். இதற்கு நீர் கூறுவீராக “நீங்கள் விரைவில் நிகழ வேண்டும் என்று நினைப்பவற்றில் சில இப்பொழுதே உங்களைப் பின் தொடரலாம். (27: 71,72)
"மனச்சாட்சியின் வேதனை" என்பது, இறை நம்பிக்கையற்றவர்கள் மறுமையில் நுகரவிருக்கும் தாங்க முடியாத ஆன்மீகத் துயரத்தில் ஒரு சிறிய பகுதியே ஆகும். மனிதன் இவ்வுலகில் துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம், அவன், தான் படைக்கப்பட்ட நோக்கத்திற்கு நேர்மாறான மனப்பான்மையையும், கண்ணோட்டத்தையும், வாழ்க்கை நெறியையும் மேற்கொள்வதுதான். மார்க்கத்திற்கு முரணான மனப்பான்மையும் நடத்தையும் உடையவனாக விளங்கும் காலம் வரை மனிதன் இவ்வுலகில் ஆன்மீக அவலத்திற்கு உள்ளாகியே தீர்வான். இதனால் தான் அவன் தன் மனச்சாட்சியின் குரலை அடக்கி ஒடுக்க முயல்கின்றான்; அதன் மூலம் தன் வேதனையை நீக்க விழைகின்றான்.
உள்ளத்தாலும், உடலாலும் மனிதன் இயல்பாகவே மார்க்கப்பண்புகளையே நாடுகிறான். மனிதனைப் படைத்த இறைவன் அவனுக்குரிய நேரான வாழ்க்கை நெறியையும் வகுத்தளித்தான். எனவே, இறைவன் வகுத்தளித்தான். எனவே, இறைவன் வகுத்தளித்த வரையறையை மீறுவது தனி மனித அளவிலும் சமுதாய அளவிலும் குழப்பங்களையே விளைவிக்கும். இந்தக் குழப்பங்கள் எல்லாம் மனித வரலாற்றில் மானிடர் மீது எதிர்மறையான தாக்கத்தையே உருவாக்கின. இந்தக் குழப்பங்களை எல்லாம் நீக்குவதற்கு உரிய ஒரு வழி மார்க்கப் பண்புகளைப் பேணி நடப்பது தான். இந்த குழப்பங்கள் ஒவ்வொன்றிற்கும் யதார்த்தத்தில் நிவாரணம் அளிப்பது மார்க்கமே!