ரோமாபுரி சக்கரவர்த்தி ஹெர்குலிசுக்கு எழுதிய அக்கடிதத்தில் காணப்படுவது: அளவற்ற அருளாளனும் கருணையுடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி யஹர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க, இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்! நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான். (இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால்(உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும். வேதத்தை உடையவர்களே! நாம் அல்லாஹ்வைத் தவிர(வேறு எவரையும்) வணங்கக் கூடாது; அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்மில் சிலர் சிலரை நமது இரட்சகனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது, என்ற எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான ஒரு கொள்கையை நோக்கி வந்து விடுங்கள். (இக்கொள்கையை) நீங்கள் (ஏற்க மறுத்து) புறக்கணித்தால், நாங்கள் நிச்சயமாக (அந்த ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக ஆகிவிடுங்கள்"என்று கூறப்படுகின்றது.
மன்னர் தாம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி, நபி(ஸல்) அவர்களின் கடிதத்தைப் படித்து முடித்ததும் அங்கே ஒரே கூச்சலும் குழப்பமும் மிகுந்த அளவுக்கு முஹம்மதின் காரியம் இப்போது மேலோங்கி விட்டது என்று கூறினேன். (அப்போதி ருந்தே)அவர்கள்தான் வெற்றி அடைவார்கள் என்ற நம்பிக்கையில் திளைத்தவனாகவே நான் இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்குள்ளேயும் இஸ்லாத்தை நுழைத்து விட்டான். (எங்களை மன்னர் அழைத்த காரணம் பற்றி) சிரியாவிலுள்ள கிறித்தவர்களின் தலைமைக் குருவும் ரோமாபுரியின் மாமன்னர் ஹெர்குலிஸின் அருமை நண்பரும் அல்அக்ஸா ஆலயத்தின் நிர்வாகியுமான இப்னு நாத்தூர் என்பார், கூறியதாவது: "மன்னர் அல்அக்ஸா ஆலயத்துக்கு வருகை தந்தபோது ஒரு நாள் கவலை தோய்ந்த முகத்தினராகக் காணப்பட்டார். அப்போது அவரது அரசவைப் பிரதானிகளில் சிலர் மன்னனிடம் தங்களின் கவலை தோய்ந்த இந்தத் தோற்றம் எங்களுக்கு கவலையைத் தருகிறது என்று கூறினார்கள்.
ஹெர்குலிஸ் மன்னர் விண்கோள்களை ஆய்ந்து சோதிடம் சொல்லுவதில் வல்லவரா யிருந்தார். மன்னரின் கவலைக்குக் காரண மென்னவென்று வினவியவர்களிடம் அவர், இன்றிரவு நான் நட்சத்திர மண்டலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களின் மன்னர் தோன்றி விட்டதாக அறிந்தேன் என்று கூறிவிட்டு, இக்கால மக்களில் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள் யார்? என வினவினார். யூதர்களைத் தவிர யாரும் விருத்த சேதனம் செய்து கொள்வதில்லை; அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்; உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக்கெல்லாம் எழுதி அங்குள்ள யூதர்களைக் கொன்றுவிடுமாறு கட்டளையிடுங்கள் என்றார்கள். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போதே நபி(ஸல்) அவர்களைப் பற்றிய தகவல் ஒன்றைக் கொண்டு வந்திருக்கும் ஒரு மனிதரை கஸ்ஸான் என்ற கோத்திரத்தின் குறுநில மன்னர்ஹெர் குலிஸிடம் அனுப்பி இருந்தார். அம் மனிதர் அவரது முன் கொண்டு வந்து நிறுத்தப் பட்டார். அவரிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்ட ஹெர்குலிஸ், இவரை அழைத்துச் சென்று இவர் விருத்த சேதனம் செய்திருக்கின்றாரா? அல்லவா? சோதியுங்கள் என்று ஆணையிட்டார். அவரை அழைத்துச் சென்று பரிசோதித்தவர்கள் அவர் விருத்த சேதனம் செய்திருப்பதாகக் கூறினார்கள். அவரிடம் அரபிகளின் வழக்கம் பற்றி மன்னன் விசாரித்தபோது, அவர்கள் விருத்த சேதனம் செய்யும் வழக்கமுடையவர்கள் தாம் என்றார். உடனே ஹெர்குலிஸ் அவர் தாம் முஹம்மது(ஸல்). இக்காலத்தின் மன்னராவார்; அவர் தோன்றி விட்டார் என்று கூறினார்.
பின்னர் ரோமாபுரியிலிருந்த தமக்கு நிகரான கல்வியறிவும் ஞானமும் பெற்றிருந்த தமது நண்பர் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதி விட்டு ஹிம்ஸ் என்ற நகரத்திற்குப் பயணமானார். அவர் ஹிம்ஸுக்கு போய்ச் சேர்வதற்குள் பதில் கடிதம் வந்தது. அக்கடிதத்தில் ஹெர்குலிஸின் கருத்துப்படியே, இறைத்தூதரின் வருகை பற்றியும் அத்தூதர் இவர்தாம் என்றும் எழுதப்பட்டிருந்தது. (இதன் பின்னர் தான் மன்னர் எங்களை அவைக்கழைத்தார். எங்களைச் சந்தித்த பின் நடந்ததாவது) முன்னர் ஹிம்ஸ் நகரிலிருந்த தமது கோட்டை ஒன்றிற்கு வருமாறு ரோமாபுரி பிரமுகர்கள் அனைவருக்கும் ஆணையிட்டார். (அவர்கள் வந்து சேர்ந்ததும்) அந்தக் கோட்டையின் வாயில்களை எல்லாம் பூட்டி விடும்படி உத்தர விட்டார். கோட்டையின் வாயில்கள் அடைக்கப்பட்டன. பின்னர் மன்னர் அப்பிரமுகர்கள் முன் தோன்றி ரோமாபுரியினரே! நீங்கள் வெற்றியும் நேர் வழியும் பெற வேண்டும் என்றும் உங்கள் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால் இந்த இறைத் தூதரை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார். (இதைக் கேட்டவுடனே) காட்டுக்கழுதைகள் வெருண்டோடுவதைப் போலக் கோட்டை வாசல்களை நோக்கி அவர்கள் வெருண்டோடினார்கள். வாசல் அருகில் சென்றதும் அவை தாழிடப்பட்டிருப்பதை அறிந்தார்கள். அவர்கள் வெருண்டோடியதையும் நபி(ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்பதையும் மன்னர் பார்த்ததும் அவர்களை என்னிடம் திருப்பி அனுப்புங்கள் என்று (காவ லர்களுக்கு) கட்டளையிட்டார். (அவர்கள் திரும்பி வந்ததும்) நீங்கள் உங்கள் மதத்தில் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்கள் என்பதை சோதிப்பதற்காகவே நான் சற்று முன்னர் கூறிய வார்த்தைகளைக் கூறினேன். (இப்போது உங்கள் உறுதியை) சந்தேகமற நான் அறிந்து கொண்டேன் என்று அவர் கூறியதும் அனைவரும் அவருக்குச் சிரம்பணிந்தனர். அவரைப் பற்றி திருப்தியும் கொண்டார்கள். ஹெர்குலிஸ் மன்னரைப் பற்றிக் கிடைத்த கடைசி தகவல் இதுவாகவே இருக்கிறது. (ஸஹீஹுல் புஹாரி, ஹதீஸ் இலக்கம்:7)
மேலேயுள்ள ஹதீஸ்களை அவதானிக்கும் போது நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் வேத அறிவு பெற்ற கிறித்தவ மன்னர்களும், அறிஞர்களும் இறுதித் தூதரின் பண்புகளை அறிந்தே வைத்திருந்தனர். இப்பண்புகள் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் ஒன்று பட்டதாகவே இருந்தன. இதனால் எல்லா வேதம் அறிந்தவர்களும் தமது குழந்தைகளை அறிவது போல் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் இறுதி இறைத் தூதர் என அறிந்தே இருந்தனர். எனினும் சமூக அங்கீகாரம் அற்றுப் போய்விடும் எனப் பயந்தும், மனதில் எழுந்த பொறாமையின் காரணமாகவுமே சத்திய இறுதி நெறிநூலை ஏற்கத் தயங்கினர். வேதக்காரர்களான இஸ்ரவேலர்களில் பலர் தமக்கு அருளப்பட்ட வேதங்களை வழிப்படவில்லை. சில வேத வசனங்களை ஏற்று, தமக்குப் பாதக மானவற்றை மறைத்தனர். இவர்களை நேர் வழிப்படுத்த இறைவன் அல்குர்ஆன் மூலம், இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாயிலாக பின்வருமாறு அழைப்பு விடுக்கிறான்.
வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பொதுவானதெரு கொள்கையின்பால் நீங்கள் வாருங்கள். (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வழிபடக் கூடாது; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது; அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் வேறு சிலரைக் கடவுள்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று (நபியே) நீர் கூறுவீராக. (இதற்குப் பிறகும்) அவர்கள் புறக்கணித்தால், நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடி பணிந்த) முஸ்லிம்கள் தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள் என்று சொல்லிவிடுங்கள். (அல்குர்ஆன் 3:64)
இதில் வேதக்காரர்கள் என்பது யூதர்கள், கிறித்தவர்கள், அவர்களைப் போல் வேதம் வழங்கப்பட்டோர் வழியில் செல்லும் அனைவரையும் குறிக்கும். இதில் அந்த பொதுவான கொள்கை என்பது மனித சமூகமாகிய நாம் அனைவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வழிபடக் கூடாது; அவனுக்கு எதனையும் இணை கற்பிக்கக் கூடாது; அதாவது சிலை, சிலுவை, உருவப் படங்கள், தீய சக்திகள், தூதர்கள், நெருப்பு, வேறு கற்பனைகள் உள்ளிட்ட எதனையும் அல்லாஹ்வுக்கு நாம் இணையாக்கக் கூடாது. மாறாக இணை துணையற்ற ஏகனாகிய அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் என்பதையே இது குறிக்கும். இதுவே உலகில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களினதும் அழைப்பாக இருந்தது. ஆனால் மக்காவில் வாழ்ந்த சிலை வணங்குவோரையும், ஓர் இறைவன் என்பதை மறுக்கும் வேதக்காரர்களையும் நோக்கி அல்லாஹ் பின்வருமாறு அல்குர்ஆன் மூலம் விளக்குகிறான்.
அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? அப்படியாயின் உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் நெறிநூலும், எனக்கு முன் இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றன என்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் அதைப் புறக்கணிக்கின்றார்கள். (அதுபோல் நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும், நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள் என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை. (அல்குர்ஆன் 21:24,25)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைத் தூதராக அனுப்பப்பட்ட காலத்தில் மக்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களைத் தாங்களாக கற்பனை செய்து வணங்கினார்கள். அவ்வாறு வணங்குபவர்களை நோக்கி, நீங்கள் பல தெய்வங்களை எடுத்துக்கொண்டு வணங்குவது சரியானதா என்பதற்கு முறையான ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். இதோ இந்த அல்குர்ஆன் உங்களுக்கு ஞாபகமூட்டும் நெறிநூலாக இருக்கின்றது. எனக்கு முன் இறக்கப்பட்ட வேதங்களான தவ்ராத், இன்ஜீல் போன்ற வேதங்களும் உங்களுக்கு ஆதாரங்களாக உள்ளன. அவ்வேதங்கள் அனைத்தும் உங்களுடைய இறைவன் ஒரே ஒருவன் தான்; அவன் ஏகன்; அவனுக்கு இணையாக எதுவும் இல்லை; அவனையே வணங்க வேண்டும் என வலியுறுத்தின. அல்குர்ஆனுக்கு முன் அருளப்பட்ட வேதங்கள் அல்லாஹ்வினால் ரத்துச் செய்யப்பட்டாலும் அவற்றிலும், ஓர் இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்ற வசனங்கள் தற்போதும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
அன்று அரபிகளுடன் வாழ்ந்த வேதக்காரர்களை நோக்கி அல்லாஹ்வை விடுத்து வேறு தெய்வங்களை எடுத்துக் கொண்டிருப்பின் அதற்குரிய அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள் எனக் கேட்கிறான். ஆனால் அவர்களினால் எந்த ஆதாரங்களையும் முன்வைக்க முடியவில்லை. அப்போது முஹம் மது நபி(ஸல்) அவர்களை நோக்கி முன்பு நெறி நூல் வழங்கப்பட்டவர்களிடமும் ஒரே இறைவனையே வணங்க வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது. அவதானியுங்கள் முந்தைய நெறிநூல்களிலும் ஓர் இறைவனே என்ற கொள்கை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. விவிலியன் பழைய ஏற்பாட்டில் பின்வருமாறு காணப்படுகிறது.
நான் முந்தினவரும் நான் பிந்தினவரும் தானே. என்னைத்தவிர தேவன் இல்லையயன்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பவரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)
இஸ்ரவேலே! கேள்: நம்முடைய தேவ னாகிய கர்த்தர் ஒருவரே! கர்த்தர். (உபாகம்:6:4)
இதுபோல் பைபிள் புதிய ஏற்பாட்டில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. அப்போது இயேசு: அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கின்றதே என்றார். (மத்தேயு 5:10)
எனவே இறை வேதங்களை வைத்துள்ளதாக சொல்லும் யூதர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் முஹம்மது நபி(ஸல்) சொன்னது என்ன? ஓர் இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை அல்லவா? இதற்கு முன்வந்த இறைத்தூதர்களும் ஒரே இறைவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் என்று கூறினார்கள் அல்லவா? சிந்திக்க மாட்டீர்களா? இதுபோல் இந்தியாவில் சில மக்கள் வழிப்படும் வேதங்களிலும் ஓர் இறைக் கொள்கை வசனங்கள் காணப்படுவதை அவதானிக்கலாம்.
அவன் ஒருவன் என்று நம்புங்கள்; அவன் ஒருவனே இறைவனாக இருக்கிறான். (அதர்வ நெறிநூல்: 13:5, 20) அவனே இந்த உலகின் நாயன், இந்த பூமியையும் வானங்களையும் அவற்றின் இடங்களில் வைத்தவன் அவனே. எல்லாம் அவனிலிருந்தே வந்தன. அகில உலகமும் அவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படுகின்றன. எனவே அவன் ஒருவனுக்கே தலை வணங்குங்கள். (ரிக்வேதம் 9:1211)
ஆகவே மேலே உள்ள வசனங்கள் மூலம் இறைவன் ஒருவனே என இருந்தும் உண்மையை அறிந்து கொண்டே சத்திய இறுதி இறை நெறிநூலை மறுக்கின்றனர். அறிவுமிக்க உலக மக்களே அசத்திய இருளிலிருந்து நீங்கி சத்தியத்தின் பக்கம் வாருங்கள். ஷைத்தான் மனித இனத்தின் விரோதியாவான். அவனே உங்களை வழி தவறக்கூடிய மடமை என்ற இருளின் பக்கம் அழைக்கிறான். இதனால் நீங்கள் இறைவன் இல்லை என மறுக்கிறீர்கள்; அல்லது போலிக் கடவுள்களை சிலையாக வடித்து வணங்குகிறீர்கள். இறைவன் வீணுக்காக மனிதனைப் படைக்கவில்லை. நாம் இறந்த தன் பின் முடிவில்லாத மறுமை வாழ்க்கையுண்டு., மறுமையில் சொர்க்கம் அடைவதற்கு இம்மையில் இறைத்தூதர்கள் காட்டிய நேர் வழியில் செல்ல வேண்டும். முன்னைய வேதங்களில் ஷைத்தான் மனித உள்ளத்திற்கு அழகாக காட்டிய பல தெய்வக் கொள்கைகளையும் உள் நுழைத்துள்ளான்.
ஆகவே இறைவன் அந்த வேதங்களை இரத்துச் செய்து விட்டான். அதற்குப் பதிலாக உங்களுக்கு நேர்வழி காட்ட இறுதி நெறிநூலாக அல்குர்ஆனையும் இறுதி முத்திரைத் தூதராக உங்களுக்கு நேர்வழி காட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் அனுப்பி வைத்துள்ளான். இதற்கு முன் அருளப்பட்ட நெறிநூல்களிலும் முஹம்மது நபி(ஸல்) இறுதித் தூதராக வருவார் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். மெளட்டீக கொள்கைகள் நரக வேத னைக்கே வழிகாட்டும். வீணாக விட்டில் பூச்சி போல் நரக நெருப்பில் வீழ்ந்து எரிந்து விடாதீர்கள். சத்திய மார்க்கத்தை ஏற்று உண்மை நெறிநூலின் பக்கம் வந்து விடுங்கள். அல்லாஹ்வின் பேரருளான சத்தியத்தின் பக்கம் நுழைந்து விடுங்கள்.
இன்று உலகில் இறைவனை நம்பாத நாத்தீக மக்களும் வாழ்கிறார்கள். இந்த நாத்தீக மனிதர்களில் சிலர், இறைவனால் அனுப்பப்பட்ட இறுதி நெறி நூல் உயிருடன் இருப்பதை அறிந்துள்ளார்கள். ஆனால் தமது பெற்றோர்களின் கற்பனைகள் நிறைந்த மதங்களை நம்பாது இருக்கின்றனர். அதே நிலை இந்த இறுதி நெறிநூலிலும் இருக்கும் என ஊகித்து அவர்கள் ஒளிமிக்க அல்குர்ஆன் இருப்பதை அறிந்தும் அதை பார்க்காது விட்டு விடுகின்றனர். தமது மூதாதையர்களின் ஒரு பிரிவினரே தம்மைச் சூழவாழும் முஸ்ஸிம்கள் என தப்பாக நம்புகின்றனர். எனினும் அவர்கள் தமது பெற்றோரின் பிழையான சமூக கட்டமைப்பில் இருந்து உண்மையின் பக்கம், இறுதி உண்மை நெறிநூல் அல்குர்ஆனின் பக்கம் வர தயங்குகிறார்கள். எனவே இந்த நாத்தீக மக்களும், அவர்களின் தலைவர்களும் ரோமாபுரிஹெர்குலிஸ் மன்னனைப் போல் சமுதாயத்திற்கு பயந்தவர்களே. இந்த நாத்தீக மக்களும் தம்மை தமது பெற்றோரின் மடமை நிறைந்த மூடக் கொள்கையிலிருந்து நீங்கிய பகுத்தறிவாளர் எனக் கூறிக் கொண்டாலும் இவர்களும் மறைமுகமாக தமது பெற்றோரின் மூட நம்பிக்கைகளைத் துறந்து நேர்வழியின் பக்கம் வரத் தயங்கும் அடிமைகள் எனலாம். இதற்கு ஆதாரமாகத் தமது பெற்றோரின் மதங் களின் மூட நம்பிக்கைகளை விமர்சித்து வரும் திராவிட பகுத்தறிவாளர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிச் சிறப் பாக அறிந்திருந்தாலும், தமது பெற்றோரின் சமூகத்திலிருந்து சத்தியத்தின் பக்கம் வரத் தயங்குகின்றனர். முஸ்லிம் என்போர் யார்? என்பதை அடுத்தடுத்துப் பார்ப்போம். அல்லாஹ் நாடினால்...
அந்நஜாத்
No comments:
Post a Comment