இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை;
இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன.
அவற்றின் மேன்மைக்கு யார் காரணம் என்று பார்த்தால், அதற்கு மனிதனே காரணம் என்பது விளங்கும். ஆம்! அவற்றின் மீது மனிதனின் இடைவிடா தொடர் முயற்சியின் காரணமாக அவை ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. இப்படி பொருட்களின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொண்டு மனிதன் பெரிதும் முன்னேறி விட்டதாகப் பெருமையடிக்கிறான். ஆக மனிதன் வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக நினைத்து பெருமையடிக்கிறான்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு சிற்றூரும் ஓர் உலகம் போல் காட்சி அளித்தது. அன்று ஓர் ஊரில் உள்ளவர்களுக்கு, இதுபோல் பல ஊர்கள் இருக்கின்றன என்பது தெரியாதிருந்தது; அது ஒரு காலக்கட்டம். பின்னர் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு ஊரிலிருப்பவர்களும் தங்கள் ஊரைப் போல் உலகில் வேறு பல ஊர்களும் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டனர். ஆயினும் ஓர் ஊரில் இடம் பெறும் சம்பவங்கள் பக்கத்து ஊருக்குத் தெரியாதிருந்த நிலை; காலகட்டம்.
பிராணிகளில் பிரயாணம் செய்யும் அளவு முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், பக்கத்து ஊர்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் உடனடியாகத் தெரிய முடியாமல் இருந்தாலும், காலம் தாழ்ந்து அறிந்து கொள்ளும் நிலைக்கு முன்னேறினார்கள். இப்படி படிப்படியாக முன்னேறி இன்றை விஞ்ஞான யுகத்தில், ஒரு காலத்தில் ஒரு சிற்றூரே உலகமாக இருந்த நிலைமாறி இன்று உலகமே ஒரு சிற்றூரின் நிலைக்கு,ஏன்? ஒரு கையடக்கத்தில் இருப்பது போல் முன்னேறிவிட்டது.
ஆனால் இது மனிதனின் முன்னேற்றம் என்று கூறுவதுதான் அறிவீனமாகும். மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்கள் அனைத்திலும் பாடுபட்டான்; கடுமையாக உழைத்தான்; தனது மூளையைக் கசக்கினான். அதன் பலன் அவன் பாடுபட்ட அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான , ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியைக் கண்டன. மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக மனிதன் நினைப்பது மடமையல்லவா?
இப்போது அன்றிருந்த ஒரு பொருளின் நிலையோடு இன்றிருக்கும் அதே பொருளின் முன்னேற்றத்தை- வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது போல், அன்றிருந்த மனிதனோடு இன்றைய மனிதனின் முன்னேற்றத்தை வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்போம். அன்றிருந்த மனிதன் படிப்பறிவற்றவனாக, எழுத்தறிவு அற்றவனாக ஏன்? இன்றைய மனிதன் கூறும் நாகரீகம் அற்றவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் மனிதனாக இருந்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனிதனுக்குரிய மனிதப் பண்புகள் நிறைவாகவே அவனிடம் காணப்பட்டன. திடகாத்திரமான, ஆரோக்கியமான உடலைப் பெற்றிருந்தான். அதிகமான நினைவாற்றலைப் பெற்றிருந்தான். கூர்மையான பார்வையுடையவனாக இருந்தான். களைப்பில்லாமல் நீண்ட தூரம் நடக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். நீண்ட வயதுடையவனாக இருந்தான். இன்று மனிதனைத் தாக்கும் பெருங்கொண்ட நோய்கள் அன்றிருந்ததாக வரலாறு இல்லை.
ஆம்! அன்று மனிதன் பிக்கல், பிடுங்கல் இல்லாத அமைதியான, ஆரோக்கியமான, சந்தோசமான வாழ்க்கை வாழ்ந்தான். மனிதன் தன்னில் பாடுபடுவதை மறந்து தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் பாடுபடுவதை பெரும் சாதனையாகக் கொண்டு அவற்றில் முனைந்ததால் அந்தப் பொருள்கள் அதிசயத்தக்க அளவில் முன்னேறின.
மண்ணின் கீழே இருந்த இரும்பு மற்றும் சில உலோகங்கள் மனிதனின் கடும் உழைப்பால் பல வாகனங்களாக பரிமாண வளர்ச்சி பெற்றன. அதன் விளைவு மனிதன் நடக்கும் ஆற்றலை இழந்தான். அதன் மூலமே பலவித நோய்களை வரித்துக் கொண்டான்.
இப்படி மனிதனின் கடும் உழைப்பின் காரணமாக மனிதனுக்கு வெளியேயுள்ள பொருள்களின் வளர்ச்சி மனிதனை பின்னடையச் செய்தனவே அல்லாமல், மனிதனை முன்னடையச் செய்யவில்லை. உதாரணமாக ஒரு தச்சன் காலையிலிருந்து மாலை வரை ஒரு மரத்தில் கடுமையாக உழைத்தால், அது அழகியதொரு மேசையாக உருவெடுத்து விடும். ஆனால் உழைத்த அந்த மனிதன் மாலையில் கடுமையான சோர்வுக்கு ஆளாகி விடுகிறான். இப்படி மனிதன் தனக்கு வெளியே எந்தப் பொருளில் பாடுபட்டாலும் அந்தப் பொருள் முன்னேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த உழைப்பைச் செலுத்திய மனிதன் அதனால் சோர்வடைகிறான், பின்னடைகிறான் என்பதிலும் ஐயமில்லை.
இப்படி மனிதன் தனக்கு வெளியேயுள்ள பொருள்களில் கடுமையாக உழைத்து அவற்றை முன்னேறச் செய்துள்ளான். அவை மூலம் மனிதன் இவ்வுலகில் சில வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கலாம். ஆயினும் அத்துடன் நில்லாது தன்னளவிலும் பாடுபட்டிருந்தால், அவனும் உண்மையிலேயே முன்னேறி இருக்கலாம். ஆனால் தன்மீது பாடுபடுவதை மனிதன் மறந்து விட்டான்.
மனிதன் வெளிப்பொருள்களில் பாடுபடுவது கொண்டு ஆகாயத்தில் பறப்பதைக் கற்றுக் கொண்டான். அதையும் தாண்டி விண்ணில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஏன்? நீரில் நடப்பதையும் கற்றுக் கொண்டான். ஆனால் மனிதன் மனிதனாக வாழ மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. இது அவனுடைய பரிதாபத்திற்குரிய நிலை என்பதை மறுக்க முடியாது. மனிதன் தன்னில் பாடுபட்டு அன்றிருந்த மனிதர்களைவிட குணத்தில், பண்பில், ஒழுக்கத்தில், மனித நேயத்தைப் போற்றிப்பேணி வளர்ப்பதில் முன்னேறி இருந்தால் மனிதனைப் பாராட்டலாம்.
அதற்கு மாறாக இன்றைய மனிதன் அன்றைய மனிதனை விட மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களில் பின்னடைந்துள்ளான். அதிகம் பின்னோக்கிச் செல்ல வேண்டாம். சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காமராஜ், கக்கன் போன்ற அரசியல்வாதிகளிடம் காணப்பட்ட தொண்டு செய்யும் மனப்பான்மை , அரசியலில் சுய ஆதாயம் அடையும் நோக்கமின்மை, அதனால் வஞ்ச லாவண்யத்துக்கு அடிமையாகாமல் இருந்த நற்பண்பு இவற்றை இன்றைய அரசியல்வாதிகளில் யாரிடமாவது காட்ட முடியுமா? எளிதில் புரிந்து கொள்வதற்கு இதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
இன்று பகுத்தறிவு மனிதனிடம் மிகைத்துக் காணப்படுவது ஐயறிவு பிராணிகளிடம் கூட காணப்படாத கேடு கெட்ட நிலை. போதை, ஆட்டம், பாட்டம், களியாட்டம், சூது, மாது இவை தான் இன்றைய மனிதனின் கேடுகெட்ட நிலை. தான் பிறந்த நோக்கத்தையே மறந்த நிலை. தன் இனத்தையே அதிலும் அப்பாவிகள், குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என்று கூட பாராமல் வன்செயல்கள், குண்டுகள் மூலம் ஈவிரக்கம் சிறிதும் இல்லாமல் கொன்றொழிக்கும் மனிதனை மனிதன் என்பதா? மிருகங்களை விட கேடு கெட்ட மிருகம் என்பதா? இந்த கேடு கெட்ட மிருக நிலைக்கு அவர்களை வார்த்தெடுத்தது யார்?
அகிலங்களிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்து நிர்வகிக்கும் ஏகன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை அவதாரங்களாகவும், கடவுள் குமாரனாகவும், கடவுள் நேசர்களாகவும் (அவுலியா) கற்பனை செய்து, அந்தப் போலிக் கடவுள்களை காட்டி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் புரோகிதர்கள் ஒரு பக்கம்; இந்தப் புரோகிதர்களின் தயவில் ஆட்சியைக் கைப்பற்றி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும் அரசியல் புரோகிதர்கள் மற்றொரு பக்கம், இந்தப் பொய்க் கடவுள்களையும், மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும் மக்களை ஏமாற்றி, சுரண்டிப் பிழைக்கும் எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும் ஒழித்துக் கட்ட புறப்பட்டுள்ளோம் என்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரேயொரு, இணை துணை இல்லாத, தேவை எதுவும் இல்லாத இறைவனையும் ஓழித்துக் கட்ட முயலும் நாத்திகர்கள்; இந்த மூன்று சாராரும் தான் இன்றைய உலகின் இழி நிலைக்கு காரணமாகத் திகழ்கிறார்கள்.
இந்த மூன்று சாராரின் தவறான போதனை, வழிகாட்டல் காரணமாகத்தான் மனிதன் ஐயறிவு மிருகத்திலும் கேடுகெட்ட நிலைக்கு தாழ்ந்து கொண்டிருக்கிறான். அழிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.
உண்மையில் மனிதன் முன்னேற ஆசைப்படாமல், இவ்வுலகில் மனிதனாக, மனிதப் புனிதனாக, அமைதி, சுபீட்சம், சுகம் அனைத்துடன் இவ்வுலகில் வாழ்வதுடன், மகத்தான பேற்றை அடைய விரும்பினால், அவன் இந்த மூன்று சாரார்களிடமிருந்தும் விடுபட்டாக வேண்டும்.
மதங்களை வைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் மதப்புரோகிதர்களிடமிருந்து விடபட வேண்டும். தொண்டு செய்வதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்க்கும் போலி அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களை ஒழிக்கப் புறப்பட்டு, ஒரு உண்மைக் கடவுள்களையும் மறுக்கும் நாத்திகர்களின் பிடியிலிருந்தும் விடுபட வேண்டும். மனிதனே மனிதனுக்கு நேர்வழி காட்ட முடியும் என்பது திருடனே திருடனுக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒப்பாகும்; பரீட்சை எழுதும் மாணவனே கேள்வித்தாள் தயாரிப்பதற்கு ஒப்பாகும்; எனவே படைத்த ஓரே இறைவனை மட்டும் இறைவனாக ஏற்று அவனது இறுதி வழிகாட்டல் நூல் - நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழமுடியும்
February 8, 2009
அல்லாஹ்வின் நல்லடியானாக வாழ்வது எப்படி
மனிதர்கள் இறைவனுக்கு அடிபணியவே படைக்கப்படடிருப்பதால், அவனை வணங்கி வழிபடுவது எப்படி என்பதை அவர்கள் அறிந்திருப்பது கடமையாகும். இதுவும் குர்ஆனில் அறிவிக்கப்பட்டுள்ளது. ( 22:67)
ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்கள் வணங்குவதற்கு உரிய வழியை நாம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். எனவே அந்த விவகாரத்தைப் பற்றி அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டியதில்லை. (22:67)
இறைவன் தன் அடியார்கள் எப்படித் தன்னை வணங்கி வழிபட வேண்டும் என்று கோருகிறான் என்பதைப் குர்ஆன் விரிவாக விளக்குகிறது. தொழுகை, வணக்க வழிபாடு, கடமையாக்கப்பட்ட ஈகை, போன்றவற்றைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு குர்ஆன் பதில் அளிக்கிறது.
இறை நம்பிக்கையாளருக்கு உரிய பண்பாடுகள் பற்றி மட்டும் கூறுவதோடல்லாமல், இறை நம்பிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டியவை, அவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், ஆகிய யாவும் குர்ஆனில் விவரிக்கப்படுகின்றன. தன்னடக்கம், தியாக மனப்பான்மை, நேர்மை, நீதி, இரக்கம், சகிப்புத்தன்மை, உறுதி மற்றும் இவை போன்ற ஒழுக்கச் சிறப்பியல்புகள் இறைவனின் நல்லடியாளர்களிடம் அமைய வேண்டிய பண்புகளாகக் குறிப்பிடப்படுகின்றன.இறை நம்பிக்கையாளர்கள் இவற்றைக் தவிர்க்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.
இப்பிரபஞ்சத்தையும் மனிதனையும் இறைவன் ‘ஒன்றுமில்லாமை’ யிலிருந்து படைத்தான். உயிரினங்களில் மனிதன் குறிப்பாக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறான். அவற்றுள் மிக முக்கியத்துவமும் சிறப்பும் வாய்ந்தது ‘ஆன்மா’ ஆகும்.
இதுதான் மனிதனை உணர்வுடையனாக்குகிறது. மனிதனுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமானவை எனில் அவற்றை மனிதன் எண்ண ஆரம்பித்தால் அவனால் எண்ணி முடிக்க முடியாது, என்று இறைவன் அறிவிக்கின்றான். (அந்நஹல்:18)
. எனவே மனிதன் இந்தச் சலுகைகள் எல்லாம் தனக்கு வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் பிரதிபலனாக இறைவன் மனிதனிடம் கோருவது என்னவென்பதையும் ஆலோசித்து அறிய முற்பட வேண்டும்.
அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயனளிப்பவற்றை ஏற்றிக் கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும், வறண்டு காய்ந்த பூமியை செழிப்படையச் செய்ய வானத்திலிருந்து இறைவன் பொழியச் செய்யும் மழையிலும், எல்லாவிதமான படைப்பினங்களையும் பூமியில் பரவ விட்டிருப்பதிலும், காற்று வீசும் பல திசைகளிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் (நல்ல நோக்கங்கள் நிறைவேற உதவும்படி) நிலைபெற்றிருக்கச் செயதிருக்கச் செய்திருக்கும் கருமேகத்திலும் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக சான்றுகள் இருக்கின்றன. (2:164)
தான் நுகரும் எல்லாச் சலுகைகளும் இறைவனால் வழங்கப்பட்டவை என்பதை உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன் மனிதன். எனவே தான் இறைவனுக்கு நன்றியுள்ளவனாக விளங்கவேண்டும் என்பதை உணர்ந்தவனாக மனிதன் விளங்குகின்றான். ஆனாலும் அந்த நன்றியுணர்வு எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியமாட்டான். இதிலும் மனிதனுக்கு வழிகாட்டுகிறது குர்ஆன்.
குர்ஆனில் இறைவன், மனிதன் தன் வாழ்நாளில் ஒவ்வொரு காரியத்திற்கும் தன் அனுமதியைப் பெற வேண்டுமென்று கோருகிறான். மனிதனுடைய வாழ்வில் ஒவ்வொரு கணமும் இறைவனுடைய விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டுமேயல்லாது தன்னுடைய விருப்பத்திற்கும் இச்சைக்கும் ஏற்ப செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் தன் இச்சைக்கு அடிமையாகி விடுவான். ( 25:43)
தன் இச்சையை தன்னுடைய இறைவனாக எடுத்துக்கொண்டிருப்பவனை பார்த்தீருக்கிறீரா?
இறைவனின் இந்த எச்சரிக்கைக்குச் செவி சாய்த்து, இறை நம்பிக்கையாளர் தன்னுடைய வாழ்நாளில் ஏதேனும் ஒரு நடவடிக்கையை நிறைவேற்ற பலவழிகள் தோன்றும்போது, இறைவனின் திருப்தியைப் பெற்று தரும் வழிமுறைகளையே தேர்ந்தெடுப்பான்; அஃதொரு சாதாரண நிகழ்வாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு கருத்தாகவோ மனப்பான்மையாகவோ இருந்தாலும் சரி.
இதன் விளைவாக, தன் இறைவனின் திருப்தியைப் பெறும் வகையில் தன் வாழ்நாளில் எல்லா நடவடிக்கைககளையும் மேற்கொள்ளும் இறைநம்பிக்கையாளன் என்றும் அழியாத பேறுகளை அடைய அருகதை உடையவனாகிறான். எனவே,மனிதன் இறைவனின் அடிமையாக இருப்பதன் மூலம் தனக்கே பலன் தேடிக் கொள்கிறான் என்பது தெளிவாகிறது.
இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ அவர் நிச்சயமாகத் தமக்காகவே உழைக்கிறார் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் (உதவி எதுவும்) தேவைப்படாதவன். (29:6)
மனிதனுடைய வணக்க வழிபாடுகளும் நல்ல நடவடிக்கைகளும் எல்லாம் இறைவனுக்குத் தேவையே இல்லை. குர்ஆன் இதனை, அல்லாஹ் என்றுமே தேவைப்படாத வளமிக்கவன்.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா?
25.1.2009 ந்தேதி இரவு என்.டி.டி.வி பார்த்துக் கொண்டிருந்தஅனைவருக்கும் பெரும் அதிர்ச்சியான ஒரு நிகழ்ச்சி நடந்தேரியது. கர்நாடகா மாநிலம் மங்களூரில் பார்வசதியுடன் கூடிய ஒரு ஹோட்டலுக்குச் சென்ற பெண்கள், மாணவிகள் ஆபாசத்தில் ஈடுபட்டதாகக் கூறி திரு. பிரமோத் முத்தலிக் தலைமையில் இயங்கி வரும் ஸ்ரீராம் சேனா கும்பலைச்சார்ந்தவர்கள் பெண்கள் என்றும் பாராது தலை முடியைப் பிடித்து இழுத்தும், அவர்களை கீழே தள்ளியும், அணிந்திருந்த மேலாடைகளைக் கிளித்தும், ஓட ஓட விரட்டி அடித்தக் காட்சி தான் நாடையே உலுக்கியது. அதற்கு ஸ்ரீபிரமோத் அளித்த விளக்கம் என்ன தெரியுமா, பெண்கன் பண்பாடு தவறி நடந்து கொண்டதால் ‘மாரல் போலிஸிங்கில்’ ஈடுபட்டதாக கூறுகிறார்.
‘மாரல்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் சரி,தவறு என்று முடிவு எசய்யும் கொள்கை என்று அர்த்தம். ‘போலீஸிங்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு அரசால் நியமிக்கப்பட்ட அலுவலர் என்று தமிழில் கூறலாம். ஜனநாயகத்தில் ஒவ்வொரு அரசும் கட்டுக்கோப்பான நாகரீக சமுதாயத்தினைக் கட்டிக்காப்பது தன் மேலான கடமையாகும். ஆனால் அரசு அலுவல் செய்ய வேண்டிய ‘போலீஸிங்’ வேலையை ஒரு தனிப்பட்ட அமைப்பு செய்யலாமா, அவ்வாறு ‘போலீஸிங்’ நடவடிக்கைகளில் ஈடுபடும்போது வன்முறைகளில் ஈடுபடலாமா? என்பது தான் முக்கிய கேள்வியே. முன்னாள் உச்ச மன்ற நீதிபதி திரு. கே.டி. துhம° 2000 ஆம் வருடம், நவம்பர் மாதம் 30ந்தேதி ‘போலீஸிங் இன் இந்தியா’ என்ற தலைப்பில் கூறியிருப்பதாவது, ‘அரசால் நியமிக்கப்பட்ட காவலர் கூட தனது உடல், உயருக்கு ஆபத்து இருந்தாலொழிய எந்த இந்தியக் குடிமகனுக்கும் உடலளவில் எந்த வன்முறையிலும் ஈடுபட உரிமையில்லை’. தடி வைத்துக்கொள்ள அரசு ஆணைகளில் உரிமை உள்ள காவலர்களுக்கே அத்துமீறல் கூடாது என்று சட்டத்தில் இருக்கும்போது ‘போலீஸிஸிங்கில்’ஈடுபட ஸ்ரீராம் சேனாவிற்கு எங்கே இருந்து அதிகாரம் வந்தது? சீக்கியர்கள் மத கோட்பாடுகளுங்கிணங்க பெரிய வாள் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அடுத்தவர்களைத் தாக்கும் ஆயுதமாக அதை பயன்படுத்தும் போது இந்திய ஆயுதச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கலாம். ஆங்கில பழமொழியில் ‘குடை வைத்துக் கொள்ள உரிமை உண்டு, ஆனால் அது அடுத்தவர் முக்கை பதம் பார்க்கக்கூடாது’ என்பார்கள்.
டி.வியில் இன்னுமொரு நிகழ்ச்சியையும் காட்டினார்கள். ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் பெண்களைத்தாக்கும் போது முன்னாள் பஜ்ரங் தால் அமைப்பைச்சார்ந்த திரு. குமார் என்ற வாலிபர் பெண்களை தன்மேல் விழும் அடிகளையும் தாங்கிக்கொண்டு காப்பாற்றிய நிகழ்ச்சி தான் அது.நிருபர்களிடம் திரு. குமார் பேசும் போது பண்பாடு என்ற போர்வையில் பெண்களை தாக்க ஸ்ரீராம் சேனாவிற்கு யார் உரிமை கொடுத்தது என்ற கேள்வியை எழுப்பி, இவர்களின் போக்கு பிடிக்காமல் தான் பஜ்ரங் தாலிடமிருந்து விலகியதாகவும் கூறியுள்ளார் என்று பார்க்கும் போது இன்றும் இந்திய நாடு மத சார்பற்ற மக்களுக்கு சொந்தமான நாடே என்று கூற முடிகிறது.
நமது நாட்டில் மதத்தால், மொழியால், பகுதி தொகுப்பால், பண்பாடு என்ற போர்வையில் நடந்த அத்து மீறல் சம்பவங்களை உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என எண்ணுகிறேன். ஒரி°ஸா மாநிலத்தில் வாழும் பழங்குடியினர் தொழு நோயால் பாதிக்கப்பட்டும், கல்வி அறிவில்லாமை அறிந்து, ஆ°திரேலியா நகரிலிருந்து ஒரி°ஸா மாநிலத்தில் தொழுநோய் ஆ°பத்திரி நிறுவியும், பாடசாலை அமைத்தும் குடும்பத்துடன் தங்கி சேவை செய்து கொண்டு இருந்தார் டாக்டர் °டெய்ன்°. அவர் மதத்தைப்பரப்புகிறார் என்று கூறி இரவில் டாக்டரும், அவரது மகனும் ஜீப்பில் து ங்கிக்கொண்டிருக்கும் போது தீயிட்டு உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர். அந்த படுபாதகச்செயலில் ஈடுபட்டவர்கள் வேறுயாருமில்லை, பஜ்ரங் தால் அமைப்பைச்சார்ந்த தாராசிங்கும் அவனது கூட்டாளிகளும் தான். இந்த நிகழ்ச்சிக்குப் பின் திருமதி. °டெய்°ன்°ஸிடம் நிருபர்கள்,’உங்கள் கணவர், மகன் இறந்த பின் நீங்கள் ஆ°திரேலியா திரும்ப சென்றுவிடுவீர்களா என்ற கேள்விக்கு அந்த பெண்மனி ‘என் கணவர் விட்டுச்சென்ற சேவைகளை தெடர்ந்து செய்வேன் என்று சொன்னதின் மூலம்தாராசிங் அவரது கூட்டாளிகள் முகத்தில் கரியைப்பூசி விட்டார். சமீபத்தில் சர்ச்சுள் தாக்கப்பட்ட சம்பவங்களும் மதத்தால் ஈடுபடும் போலீஸிங் என்ற அத்து மீறல்தான்.
26.1.09 குடியரசு விழா அன்று மகாரா°ட்ரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பள்ளியில் குடியரசு விழாவும், மும்பையில் தீவிர பாதிகளால் கொல்லப்பட்ட காவல், ராஞுவ அதிகாரிகலுக்கு பாராட்டும் விதமாக பள்ளிச்சிரார்கள் ஒரு ‘கல்ச்சுரல்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பெற்றோர்கள், பார்வையாளர்கள் ஏராளனமானோர் கூடியிருந்தனர். வடநாட்டைச்சார்ந்த மாணவர்கள் அவர்கள் மொழியில் பாட்டுப்பாடி மகிழ்ந்து இருந்த நேரத்தில் ராஜ் தாக்கரேயின் எம்.என்.எ° சேனாவினர் ஏன் வேற்றுமொழி பாடல்களைப் பாடுகிறீர்கள் என்று சிறுவர்கள், முதியவர், பெண்கள் என்று பாராது ஓட, ஓடகுண்டாந்தடியாலும், பெல்ட்டுகளாலும் விரட்டி அடித்தனர். அது மட்டுமா? தியாகம் செய்த ராணுவ, காவல் அதிகாரிகளின் விளம்பர பேனர்களையும் கிழித்து எறிந்தனர். இது தான் மொழியின் பெயரால் ஈடுபடும் போலீஸிங்.
மேற்கு ரயில்வே டிவிசனில் வேலைக்கு ஆள் எடுப்பதிற்காக விளம்பரப்படுத்தப்பட்டது. ஏராளமான வேலை வாப்பில்லாத படித்த வடநாட்டு இளைஞர்கள் இரவே மும்பை வந்து பரீட்சை நடக்கும் கட்டிடித்தில் தங்கியிருந்தனர். மஹாரா°ட்ராவில் மஹாரா°ட்ரா மக்களுக்கு மட்டுமே வேலை அளிக்க வேண்டும் என்று ராஜ் தாக்கரேயின் எம்.என்.எ°ஸின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் ஒத்துக் கொள்ளலாம், மாறாக வடநாட்டு வாலிபர்களை தாக்கி விரட்டி அடித்தார்கள். இந்த செயல்தான் ‘பகுதியின் பெயரால் அழைக்கப்படும் ‘போலீஸிங்’ ஆகும். பண்பாட்டின் பெயரால் நடத்தப்படும் போலீஸிங் எடுத்துக் காட்டுத்தான் மங்களூரில் மேலே சொன்ன ஸ்ரீராம் சேனாவின் போலீஸிங் எடுத்துக்காட்டு ஆகும்.
இது போன்ற போலீஸிங்குக்கு இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? அரசியல் அமைப்பு 14 சட்டத்தின் படி சட்டத்தின் முன்பு அனைத்து குடிமக்களும் சமம், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு உண்டு. 15 வது சட்டத்தின் படி சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம்(தொகுதி) இவற்றை மட்டுமோ, அவற்றில் எதனை மட்டுமோ காரணங்களைக் கொண்டு, குடிமக்கள் எவருக்கும் எதிராக வேற்றுமை காட்டக்கூடாது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கொள்கையும், ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்னும் தமிழ் பண்பாட்டையும் போதிப்பது தான் நமது அரசியலமைப்பு. ஆனால் அதனை ஏன் பஜ்ரங் தாலோ, ஸ்ரீராம் சேனாவோ, எம்.என்.எ° அமைப்போ மதிக்கவில்லை என்பது தான் புதிரானது. அவ்வாறு மதிக்காதவர்களை ஏன் மாநில அரசுகள் வளர விடுகின்றன? ஒரு சமயத்தில் வி.எச்.பிக்கு மாற்றுக் கருத்தைச் சொன்ன மார்க்கி°ட் கம்யூனி°ட் டெல்லி அலுவலகம் தாக்கப்பட்டு அங்கிருந்த தலைவர்களும் தாக்கப்பட்டார்கள். சாந்தி, சமாதானம், அஹிம்சா போன்ற கொள்கைகளை போதித்த மகாவீர், புத்தர், காந்தி போன்றவர்களின் கருத்துக்களைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார்களா மேலே சொன்ன தீவிரவாத அமைப்புக்கள்?
இந்திய குடிமகன் தானாக முன் வந்து மதமாற்றம் செய்ய தடை ஏதும் உள்ளதா என்றால் இல்லை எனலாம். மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்த தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாமலும், சட்ட சிக்கல் இருந்ததாலும் திரும்பப்பெற்ற சம்பவங்களெல்லாம் உண்டு. ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அறியாததால் வந்த விளைவுதான் அவைகள் எல்லாம். அரசியல் சட்டம் 16(2)ன் படி சமயம், இனம், குலம், பாலினம், கொடிவழி, பிறப்பிட, உறைவிடம் காரணங்களைக் கொண்டு வேலை வாய்ப்பு மறுக்கப் படக்கூடாது என்று இருக்கும் போது எவ்வாறு ராஜ் தாக்கரே ஆட்கள் தாக்க உரிமை உண்டு? தங்கள் பகுதி புறக்கணிக்கப் படுவதாக அவர்கள் நினைத்தால் தங்கள் மக்கள் பிரதிநிதிகள் முலம் எடுத்துச் சொல்லி நிவர்த்தி எசய்திருக்கலாமே? இது போன்று பார்களில் பெண்கள் மது ஊற்றி ஆபாச நடனம் ஆடுவதாக வந்த புகாரின் பேரில் பாரில் பெண்களை வேலைக்கு அமர்த்துவதை மும்பை அரசே தடை செய்து விட்டதே. அதே போன்று ஸ்ரீராம் சேனாவும் கர்நாடகா பி.ஜே.பி அரசை அனுகியிருக்கலாமே? அதை விட்டு விட்டு குண்டர்கள் தடியினை சுழற்ற அனுமதிக்கலாமா?
நான் 1999ஆம் வருடம் அரசு அலுவலக விசயமாக மக்கா சென்றிருந்தேன். மக்கமே ஹரம் முதலாம் வாயில் எதிர் புறம்உள்ள மி°மில்லா தொருவில் சிலர் நின்று கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது வெள்ளை நிற நீளமான அங்கி அணிந்த ஒரு அரபி கையில் குச்சியுடன் வந்து அவர்கள் விரட்டினார். பின்பு ஒரு வேன் வந்து அவர்களை பிடித்துச் சென்றது. ஏனென்றால் யாசகம் இ°லாத்தில் அனுமதியில்லை.சென்னையில் கூட °டார் ஹோட்டலில் ஆபாச நடனம் ஆடுவதாக தகவல் வந்தால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லையா? அது போன்ற சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்தால் நியமிக்கப் பட்டஅலுவலர்கள் நடவடிக்கை எடுப்பது தானே நியாயம். அதை விட்டு விட்டு தனிப்பட்ட அமைப்பினர் தடியினை சுழற்ற அனுமதிக்கலாமா?
ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் பண்பாட்டினை சீர்திருத்துகிறேன் என்று சொல்வதோடு நின்று விடவில்லை, மஹாரா°ட்ரா மாநிலம் மாலேகான் நகரில் வெள்ளிக்கிழமை கூட்டுத்தொழுகை நடக்கும் போது ராணுவத்திலுருந்து திருடப்பட்ட ஆர்.டி.எக்.எ° வெடிமருந்தை உபயோகித்து ஆறு உயிர்களை பலி வாங்கிய ரானுவ அதிகாரி புரோகித், பெண் துறவி சாத்வியின்கொடூர செயல் ஒரு ஆரம்பம் தான் என்றும் கூறுகிறார் என்றால் பாருங்களேன். அவர் அவ்வாறு பேசுவதிற்கு தைரியம் யார் கொடுத்தது? அண்ணல் நபி அவர்கள் தன் தோழர் அபு குரைராவிடம்‘யார் இறை நம்பிக்கை யில்லாதவன் என்ற வினாவிற்கு,’எவருடைய அண்டை வீட்டார் பாதுகாப்போடு இல்லையோ அவர்கள் தான்’ என்றார்கள். இன்னொரு சமயத்தில் நபி பெருமானார் தோழர் ஜரீர் அவர்களிடம்,’மாந்தர் அனைவருமே ஒரு தாய் மக்கள், எனவே அனைவருடனும் கருனையுடனும், பரிவுடனும் நடந்து கொள்ளுமாறு சொன்னார்கள். ஆகவே வன்முறை தண்டல்கார்களிடமிருந்து நம்மையும், அண்டை வீட்டாரையும் பாதுகாக்க உறுதி மொழி எடுக்க வேண்டும்.
இந்திய நாட்டின் தலை விதியை நிர்ணயிக்கிற மக்களை தேர்தல் ஏப்ரல்-மே மாதம் வரும் நிலையில் பி.ஜே.பி. பிரதம மந்திரி வேட்பாளர் திரு.அத்வானி இப்போதே முன்னாள் ரானுவ தளபதிதிரு.முல்லிக், ஏர் சீப் மார்சல் திரு.டிப்னி°, உளவுப் படை தலைவர் ஆகியோர்களைக்கூட்டி மீட்டிங் போட்டுள்ளார். கடந்த 29.1.2009 அன்று மும்பையில் ஜனதாக்கட்சி தலைவர்சுப்ரமணிய சுவாமி மடாதிபதிகள் கொண்ட ‘தர்ம ரக்சா மன்ச்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் ‘மு°லிம்கள் தீவீர வாதத்திற்கு எதிரான பத்வா கொடுக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறார்கள். ஆனால் மும்பை மாலேகான் வெடி குண்டு தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரி புரோகித், பெண் சாமியார் சாத்வியின் செயலை அந்தக் கூட்டம் கண்டிக்க வில்லை என்பது நமக்கு ஆச்சரியமாக தெரியவில்லையா?.
அந்தக்கூட்டத்தில் பேசிய வி.எச்.பி. தலைவர் திரு. அசோக் சிங்கால் அவர்கள்,’இந்கியாவினை மதசார்பற்ற நாடு என்று அறிவித்ததின் மூலம் இந்தியாவின் தனித்தன்மை பறி போய் விட்டதாகவும், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் அதற்கான தீர்வு கிடைக்கும்’ என்றும் கூறுகிறார். எந்த அசோக் சிங்கால்? வரண்ட தென்தமிழகத்தின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட சேது சமுத்திரத்தை மதத்தின் பெயரயால் எதிர்ப்பவர் தான். மத்தியில் மதசார்பற்ற ஐக்கிய முன்னணி ஆட்சி இருப்பதால் தான் ரு.145000 கோடி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னைக்கும், மத்திய பல்கலை தழிழகத்திற்கும், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களும், தமிழகமெங்கும் கூட்டு குடிநீர் திட்டங்களும், அகல ரயில் பாதைகளும், மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ச்சி பணிகளுக்கான ஆணைகள் நமக்கு கிடைத்திருக்கிறது. அவை அத்தனையும் மதசார்புள்ள ஆச்சி வந்தால் அத்தனை மக்கள் நல திட்டங்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மத நல்லிணக்கத்திற்கும் ஊறு செய்யும் குண்டர்கள் தர்பார் தான் அரங்கேறும். அதற்கு நாம் ஒரு போதும் அனுமதியோம்.

February 7, 2009
தொழுகையை விட்ட என் தோழனே...!
புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக!
ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக!
தொழுகையை விட்ட என் சகோதரனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நண்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டுவிட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில், துன்பங்களில் அவனது உதவியே தேவையில்லாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட்டாயோ? அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ? நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ? அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்துவிட்டானோ? உனது மனச் சாட்சியை சாகடித்துவிட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ?நன்றாகத் தெரிந்துகொள் சகோதரனே! நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒருநாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது உனக்குத் தெரியாதா? அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும்? நீ பிறக்கும்போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல் பிறந்தாயே! நீ போகும்போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா? முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்து வாழ முடிகின்றது? இவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ நாளை மரணித்த பின்னர் அவனது சன்னிதானத்தில் எழுப்பப் படுவாயே! அவ்வேளை எந்த முகத்தோடு அவனை சந்திப்பாய்? உன்னை படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா? என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்? நீ என்னை படைக்கவில்லையென்று சொல்வாயா? நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா? நீ என்னை காக்க வில்லையென்று சொல்வாயா?
நீ அவனைச் சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் - எப்போதென்று நீ அறிவாயா? இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம். ஏன்? இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்துவிட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா? இல்லை, கொஞ்சம் தாமதப்படுத்தவாவது முடியுமா? முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்து வாழ்ந்த இவ்வுலகை விட்டுச் செல்லும்போது உனக்கு வழித் துணையாக வருவது எது? துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னை காப்பாற்றுவது எது? உனது பணமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா? எதுவுமேயில்லை. ஒரேயொன்றைத் தவிர - அதுதான் நீ செய்த நல்லமல்கள். நீ புரிந்த தொழுகை, நோன்பு இன்ன பிற வணக்கங்கள். அதைத்தான் நீ உலகத்தில் சேமிக்கவில்லையே! நீ உண்டாய், உடுத்தாய், உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னை படைத்தவனை நினைக்கவில்லையே! அவனுக்காக உன்சிரம் பணியவில்லையே! அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்லவில்லையே! அவனைப் பயந்து உன் விழிகள் அழவில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்யவில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாதபோது, உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா? உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காதபோது பிறர் உனக்காக பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா? அது ஒருபோதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...போதும் நண்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில் முடிகின்றது; யவ்வனம் விருத்தாபியத்தில் முடிகின்றது; அன்பு பிரிவில் முடிகின்றது; வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.தொழுகையை மறந்த என் தோழனே! தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளம் என்பது உனக்குத் தெரியாதா? அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறிய மாட்டாயா?
நபியவர்கள் கூறினார்கள்..."இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான் தொழுகையாகும். (அதுவும் அறுந்துவிட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி விடும்) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)
தொழுகையை மறந்தவனே! தொழாதிருத்தல் குப்ரும், வழிகேடுமாகும் என உனக்குத் தெரியாதா? நபியவர்கள் "எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகைதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ, அவன் காபிராகி விட்டான்" என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ்விடத்தில் நீ முஸ்லிம்தானா? தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்???"நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர் எனக் கணிக்கமாட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்).
இமாம் தஹபி அவர்கள் கூறுகின்றார்கள்...
"தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துபவன் பெரும்பாவம் செய்தவனாவான். யார் தொழுகையை விட்ட நிலையில் இறக்கின்றானோ, அவன் துரதிஷ்டவாதியும், பெரும் பாவியுமாவான்". என்கின்றார்கள்.
என் தோழனே! தொழுகையில் அலட்சியமாயிருப்பதும், நேரம் கிடைக்கும்போது தொழுவது முனாஃபிக் - நயவஞ்சகர்களின் செயல் என்பதை நீ அறிவாயா? அல்லாஹ் சொல்கின்றான்...நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதிசெய்ய எத்தனிக்கின்றனர். ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும்போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் சொற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை. (குர்ஆன் 4:142)நயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸூபஹூத் தொழுகையையும் விட மிகவும் சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை அவர்கள் அறிந்துவிட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து நக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள் சொல்லியிருப்பது உன் செவிகளில் விழ வில்லையா?பார் நண்பா! பார்! அக்காலத்தில் நயவஞ்சகர்கள் கூட பள்ளிக்கு வராதிருந்ததில்லை. அவர்களோ தமது தொழுகையைப் பிறருக்குக் காட்டவேண்டுமென்பதற்காகப் பள்ளிக்கு வந்தார்கள். ஆனால் நீயோ நிரந்தரமாகப் பள்ளி வாயிலுக்கே முழுக்குப் போட்டு விட்டாயே!கொஞ்சம் சிந்தித்துப் பார் நண்பா! உனக்குப் பகுத்தறிவு உண்டல்லவா? அதனாலேயே உனக்கு மனிதன் எனப் பெயர் வந்தது. ஆனால் பார்! உன்னைவிடக் கேவலமான ஐவறிவுள்ள மிருகங்கள், பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றனவே! அவனை மறந்து நொடிப் பொழுதுகூட அவை இருந்ததில்லையே!
அல்லாஹ் சொல்கின்றான்...நிச்சயமாக வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸூஜூது செய்(து வணங்கு) கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப் பட்டுவிட்டது. அன்றியும் எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப் படுத்துபவன் எவனுமில்லை. நிச்ச்கயமாக அல்லாஹ் நாடியதைச் செய்கிறான். (குர்ஆன்22:18)ஆனால் பகுத்தறிவுள்ள உன்னால் உன்னைப் படைத்த கடவுளை மறந்து எங்ஙனம் இருக்க முடிகின்றது? ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு இருக்கின்றதே! உனக்கு அந்த நன்றி எங்கே? உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே! நீயோ உன்னைப் படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே! அவனுக்கு மாறு செய்கின்றாயே! உனக்கு மனசாட்சியே இல்லையா? உன் உள்ளம் மரத்துப் போய்விட்டதா? மனிதா! ஐயறிவுள்ளா மிருகங்களும் ஏனைய ஜடங்களும் உன்னைவிட அல்லாஹ்விடம் மதிப்புப் பெறுவதும், அவற்றைவிடக் கேவலங் கெட்டவனாக நீ ஆகுவதும் பற்றி உனக்கு வெட்கமில்லையா? உனது தன்மானம் அதை அனுமதிக்கின்றதா?என்னருமைச் சகோதரனே! நிச்சயம் மரணம் வரும். நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும், கை சேதத்திற்குமுரியவன் வேறு யார்? கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா? நபியவர்கள் கூறியதை கொஞ்சம் கேள்!!"ஜூம்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக் கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும். (ஆதாரம்: முஸ்லிம்)
தொழுகையை பாழ்படுத்திய என் சினேகிதா! இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்த கூட்டத்தில் மறுமையில் எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ? கேள் நண்பா! நபியவர்கள் சொல்லியிருப்பதைக் கேள்! "யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிவிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக்கு அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகிவிடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்." (ஆதாரம்: முஸ்லிம்)
அல்குர் ஆன் சொல்வதைக் கேள்!... "யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குருடனாக எழுப்புவோம். அப்போதவன் என் றப்பே! நான் உலகில் கண்பார்வை உள்ளவனாகத்தானே இருந்தேன், என்னை ஏன் குருடனாக எழுப்பியிருக்கின்றாய்? என வினவுவான். அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான், ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்தபோது அவற்றை மறந்து (குருடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது காலத்தை விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (குர்ஆன் - தாஹா:124)
ஆகவே நண்பா! நீ இன்று, இப்போதே நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப் படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது. அதை இதுவரைக்கும் மண்ணாக்கி விட்டாய்! இதுவரை தூங்கியது போதும், இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதி சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு. அதையும் வீணாக்கி விடாதே! போதும் நண்பா! போதும்! இத்தோடு நிறுத்திக் கொள். நான் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச் சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் .. தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப்பு கோரிடு. அழு, அழு - நன்றாக அழு.. உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு. இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற விடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதிமொழி எடுத்துக் கொள்.
(அல்லாஹ்வை ) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வரவில்லையா? தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே!..நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும், கிருபையுள்ளாவனுமாவான். (குர்ஆன் - அல்ஹதீத்: 53)
ஒரு முஸ்லிம் தொழுகையை விட்டு விட்டால், அவனது விசயத்தில் என்னென்ன இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்பதை நீ அறிவாயா? இதோ கேள்!
தொழுகையை விட்டவன் காபிராக ஆகிவிடுகிறான்.
அவன் மரணித்தால் அவனைத் தொழ வைக்கக் கூடாது.
அவனுக்காக எவரும் துஆக் கேட்கக் கூடாது.
அவனை குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்யவும் கூடாது.
அவனுடைய மகளுக்கு அவன் வலியாக இருந்து திருமணம் முடித்து வைக்கவும் கூடாது.
அவன் இறந்தால் அவனது சொத்தில் உறவினருக்கோ, அவனது உறவினர் இறந்தால் அதில் அவனுக்கோ எவ்விதப் பங்குமில்லை.அவன் மக்கா ஹரத்தின் எல்லைக்குள் பிரவேசித்திட அனுமதியில்லை.
அவன் அறுத்த பிராணிகளை யாரும் உண்ணக்கூடாது.
அவனுக்கு முஸ்லிம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அப்படி முடித்திருந்தால் அந்த திருமணத்தை ரத்து செய்யவேண்டும்.
அவன் தான் முஸ்லிம் பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்து கொண்டே மணமுடித்திருப்பின் அவனுக்குப் பிறந்த பிள்ளாய்கள் கூட அவனது குழந்தைகளாகக் கணிக்கப்பட மாட்டாது.
பார்த்தாயா சினேகிதனே? நீ செய்து கொண்டிருந்த பாவம் எவ்வளவு மகா கெட்டது என்பதைப் பார்த்தாயா? ஆனால் அதே பாவத்தை நீ தொடர்ந்து செய்ததால் அது பாவமென்றே தெரியாதளவுக்கு உன் உள்ளம் வலித்து விட்டதே பார்த்தாயா? இன்றே நீ தவ்பாச் செய்யலாமல்லவா? ஆம். அதை தாமதப்படுத்தாதே! அல்லாஹ்விடம் தஞ்சமடைந்து விடு. அவன் உன்னை கைவிட்டால் வேறு உன்னைக் காப்பவர் யார்? அவனிடம் கையேந்தியோர் என்றுமே கைசேதப் பட்டதில்லை. கடவுளை நம்பினார் கைவிடப் படார்.அதேபோல் நீ செய்த ஏனைய பாவங்களுக்காகவும் சேர்த்தே தவ்பாச் செய்துவிடு. இனிமேல் அவற்றை விட்டு முழுமையாக விலகிவிடு. அவை பற்றிய எண்ணங்களைக் குழி தோண்டி புதைத்துவிடு. அவற்றின் பக்கம் இனிமேல் தலைவைத்துக் கூட உறங்காதே. அடிக்கடி அல்லாஹ்வின் வல்லமைகள் பற்றி - அவன் உனக்களித்துள்ள எண்ணிலடங்காத அருட்கொடைகளை எண்ணிப் பார்! அவனுக்கு வழிப்பட்டோருக்கு வழங்கவிருக்கும் இன்பங்களையும், மாறு செய்தோருக்குக் கொடுக்கவிருக்கும் தண்டனைகள் பற்றியும் கொஞ்சம் யோசி! அப்போது அல்லாஹ்வின் அச்சம் உனக்கு உண்டாகும். நல்ல மனிதர்களுடன் அதிகம் தொடர்பை ஏற்படுத்திக் கொள். உன் தீய நண்பர்களை விட்டு விடு. அவர்கள்தான் உன் அழிவுக்குக் காரணமாயிருந்தவர்கள். அவ்வாறே தீய பழக்கங்களிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக விடுபட்டு விடு. பயன் தரும் நூல்களைப் படிப்பதை வழக்கத்தில் கொள். குறிப்பாக இஸ்லாமிய நூல்களை படி. அதனால் உன் ஈமான் அதிகரிக்கும். உன் பாவங்கள், தீய பழக்கங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். யார் மரணம் எப்போதென்று யாருக்கும் தெரியாது. எனவே நீ மரணிக்குமுன் உனக்குத் தேவையானவற்றை உன் மறுமை வாழ்வுக்குத் தேவையானவற்றை இப்போதே சேகரித்து வைத்துக்கொள்! நாளை நீ மரணித்து விட்டால்.. கூட இருப்பவர்கள் ஐயோ பாவம்!! ஒரு நல்ல மனிதன் மரணித்து விட்டானே என நான்கு பேராவது அனுதாபப்படும் அளவுக்காவது நல்லவனாக வாழ். உலகில் உன்னுடன் வாழ்ந்தவர்கள்தான் நாளை உன்னைப்பற்றி இறைவனிடம் சாட்சி சொல்பவர்கள் என்பது நபிமொழி. நீ நல்ல முறையில் வாழ்ந்தால்தானே அவர்கள் நல்லபடியாக சாட்சி சொல்வார்கள். எனவே நீ குறைந்த பட்சம் ஒரு நல்ல முஸ்லிமாக வாழ்ந்து மரணித்தால்தான் நீ உலகில் பிறந்ததற்கும், வாழ்ந்ததற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இல்லையேல் அனைத்துமே வீண்!!!
எனவே இன்றே நீ தவ்பாச் செய். நல்லவனாகிவிடு. இன்றிலிருந்து நீயொரு புதிய மனிதன்.

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (2:128)
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" (2:250)
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامً
எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! 25:74
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286)
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! (3:8)
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்". (3:9)
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!"(3:16)
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (3:53)
ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக". (3:147)
رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" . (3:191)
رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை!" . (3:192)
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ
"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!". (3:193)
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. (3:194)
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" . (7:23)
رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" . (7:47)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!. (7:126)
رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" . (10:85)
رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء
"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை." (14:38)
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" . (14:41)
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
"எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" . (18:10)
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" . (23:109)
رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ
"எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (40:7)
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ
"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" . (59:10)
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது," (60:4)
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" . (66:8)
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன் 7:89
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம் 44:12
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء
("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!" (14:40)

இறைவனை நெருங்குவதற்குரிய வழி (வஸீலா)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَابْتَغُواْ إِلَيهِ الْوَسِيلَةَ மூமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் (வஸீலா) தேடிக்கொள்ளூங்கள், (அல்குர்ஆன் 5:35)
வஸீலா என்றால் அரபி அகராதியில் ஏணி, துணைச்சாதனம் என்ற அர்த்தத்தை கொண்டிருக்கிறது. வல்ல அல்லாஹ் நமக்கு மூன்று வகையான வஸீலாக்களை அனுமதித்துள்ளான்.
1, இறைவனின் அழகிய திருநாமங்களைக் கொண்டு வஸீலா தேடுதல்.
2, நம்முடுடைய ஸாலிஹான நல்ல அமல்களைக்கொண்டு வஸீலா தேடுதல்
3, ஸாலிஹான செயல்களையுடைய அடியார்களிடம் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது நமக்காக துஆ செய்யச் சொல்லி வஸீலா
தேடுதல்.
وَلِلّهِ الأَسْمَاء الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُواْ الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَآئِهِ سَيُجْزَوْنَ مَا كَانُواْ يَعْمَلُونَ
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்.அவனுடய திரு நாமங்களில் தவறிழைப்போரை(புறக்கணித்து) விட்டு விடுங்கள். அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் தக்க கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7:180) மேற்சொன்ன வசனத்தின் வாயிலாக இறைவனது அழகிய திருநாமங்களைக் கூறி பிறார்த்தித்து "வஸீலா" தேடுவதற்கு அனுமதி இருப்பதை காணலாம்.
وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ
நீங்கள் பொருமையைக்கொண்டும், தொழுகையைக்கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன் 2:45)
பனூ இஸ்ரவெல் காலத்தில் நடந்ந குகையில் அடைப்பட்ட மூன்று நபர்களின் சம்பவம் ஸாலிஹான நல் அமல்களைக் கொண்டு வஸீலா தேடுவதற்கு ஒரு சரியான எடுத்துக்கட்டாகும்.
கடுமையான மழையின் காரணமாக மூவர் ஒரு குகையினுள் ஒதுங்கிய போது, கடுங்காற்று அத்துடன் வீசியதால் பெரிய கல் ஒன்று உருண்டு வந்து குகை வாயிலை அடைத்துக்கொண்டது. அங்கிருந்த கல்லை நகற்ற முடியாத அம்மூவரும் அவரவர்களின் நல்அமல்களை இறைவனிடம் முறையிட்டு வழி திறக்க துஆ செய்தார்கள். இது நீண்ட சம்பவத்தின் சுருக்கம் (புஹாரி,முஸ்லிம் ஹதீஸ் நூல்களில் காணலாம்) மெற்கண்ட சம்பவத்தின் மூலம் நல் அமல்களைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதை அறிகிறோம்.
ஒரு நல்ல அடியார் உயிருடன் இருக்கும் பொழுது நம்முடைய தேவைகளுக்காக துஆ செய்யச் சொல்லி وَسِيلَةَ "வஸீலா" தேடுவதற்கு உமர்(ரழி) அவர்கள் காலத்தில் நடந்த சம்பவம் ஒரு சிறப்பான எடுதுக்காட்டாகும். உமர்(ரழி) காலத்தில் மழை இல்லாமல் கடுமையியான பஞ்ஞம் ஏற்பட்டது. அப்பொழுது உமர்(ரழி) அவர்கள் அன்றைய கால கட்டத்தில் நல்லடியாராகக் கருதப்பட்ட நபி (ஸல்) கொண்டு மழைக்காக பிரார்தனை செய்யச்சொல்லி, மழை வந்து செழிப்புற்று பஞ்சம் நீங்கியது. (புஹாரி)
வஸீலா தேடுவதற்குரிய வழிகளை இறைவனும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் இவ்வளவு தெளிவாக்கிய ஒரு விஷயத்தில் தவறான கருத்துக்களைப் புகுத்தி, மார்க்கதிற்க்கு முரணாக இறந்த நமது முன்னோர்களின் பொருட்டால் கேட்டு பலர் வழி தவறிக்கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுது நாமும் உயிருடன் விழித்த நிலையில் இருக்கும் ஸாலிஹான நல்லடியார் ஒருவரை அழைத்து துஆ செய்யச் சொல்லலாம். நமது தேவையைக் கேட்டுப் பெறலாம். ஆனால் சிறிய மெளத்தாகிய தூக்கத்தில் இருக்கும் ஒரு நல்லடியாரிடம் நமது தேவைகளைக் கேட்டால் பதில் அளிக்கமாட்டார்; இந்நிலையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து அடக்கமாகி விட்டவர்களிடம் போய் கேட்டால் பதில் கிடைகுமா? கபுருகளுக்கு சென்று முறையிடும் நமது சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டாமா? وَمَا يَسْتَوِى الاٌّحْيَآءُ وَلاَ الاٌّمْوَاتُ உயிருள்ளோரும், மரணித்தோரும் சமமாக மாட்டார்கள். (அல்குர்ஆன் 35:22) என்ற தெளிவான இவ்வசனத்தையும் கவனிக்க வேண்டாமா? இம்மாதிரி நல்லடியார்களிடம் முறையிடுவதை வல்ல அல்லாஹ் வண்மையாக கண்டிப்பதைப் பாருங்கள்.
أَفَحَسِبَ الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي أَوْلِيَاء إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا
"இந்த காபிர்கள் அல்லாஹ்வாகிய நம்மை விட்டுவிட்டு நம்முடைய அடியார்களை தங்களுடைய அவுலியாக்களாக எடுத்துக் கொள்ளலாம் என எண்ணுகிறார்களா? நிச்சயமாக அப்படிப்பட்ட காபிர்களை உபசரிக்க நாம் நரகத்தை சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம். (அல் குர்ஆன் 18:102)
மேலும் இறைவன் இவர்களைப் பற்றி கூறுகிறான்.
قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا
தங்களுடைய அமல்களில் பெரிய நஷ்டம் அடைந்தவர்களை நாம் அறிவித்து தரட்டுமா (நபியே!) நீர் கேளூம் (அல்குர்ஆன் 18:103)
الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا
அவர்கள் பாவமான கருமங்களைச் செய்து கொண்டு, மெய்யாகவே நாங்கள் மிக நல்ல காரியங்களைச் செய்வதாக எண்ணிக் கொள்வார்கள் .(அல்குர்ஆன் 18:104)
இவ்வுளவு தெளிவாக உள்ள இவ்விஷயத்தை உலக ஆதாயம் தேட முனையும் சிலர் பின் வரும் வசனத்தை காட்டி மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் இதை உண்ர்ந்து கொள்ளமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)
இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ்வின் பாதையில் இறந்த நல்லடியார்கள் இறக்கவில்லை உயிரோடு இருக்கிறார்கள் என்று இறைவன் கூறுகிறான். எனவே அவர்களிடம் உதவி கேட்கலாம், சிபாரிசு செய்யச் சொல்லாம் என வாதிடுகின்றனர். இதே வசன இறுதியில் அவர்கள் எப்படி உயிருள்ளவர்கள் என்பதை நீங்கள் உணரமாட்டீர்கள் என்று இறைவன் தெளிவாகக் கூறுவதை இவர்கள் உணரவில்லை.
மேலும் இவ்வசனத்திற்கு விளக்கமாக நபி(ஸல்)அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். நல்லடியார்களின் உயிர்கள் பச்சை நிற பறவைகளின் உடலில் புகுத்தப்பட்டு சுவர்க்கத்தில் உலவி கொண்டுயிருப்பார்கள்: அங்குள்ள கனிகளைப்புசித்து மகிழ்வார்கள். (நூல்: அபூதாவூத்)
எனவே நல்லடியார்கள் சுவர்கத்தில் உயிருடன் இருக்கிறார்கள், கபுருகளில் உயிருடன் இல்லை. அல்லாஹ் கூறுவது போல் நம்மால் உணர முடியாத ஒரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு. எனவே கண்ணியமிக்க இஸ்லாமிய சமுதாயத்தவர்களே! இறைவன் அனுமதித்த வழியில் இறைவனை நெருங்குவதற்குரிய வழியைத்தேட முற்பட்டு இம்மையிலும், மருமையிலும் ஈடேற்றம் அடையுங்கள். வல்ல அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரையும் அவனது நேர் வழியில் நடத்தாட்டுவானாக!

பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!!!
"நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)

"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்" (அல் குஆன் 23:18)

நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்றும், பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் ஆறுகள் வழியாக கடலை அடைகிறது என்றும், பின்னர் மீண்டும் ஆவியாகி, மேகங்களாகி மழை பெய்கின்றது என்றும் படித்திருக்கின்றோம். இந்த வகையான நீரின் சுழற்சிக்கு ஆங்கிலத்தில் water cycle என்று பெயர்.
இதைப் பற்றி "The Bible, The Qura'n and Science" என்ற உலகப்புகழ் பெற்ற ஆய்வு நூலை (தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் விஞ்ஞான ஒளியில் பைபிளும், குஆனும்) எழுதிய டாக்டர். மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் மேதை, The qura'n and Modern Science (குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்) என்ற தமது நூலில் பின்வருமாறு கூறுகிறார்:-
Water cycle என்பது இன்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. குர்ஆனில் கூறப்படுகின்ற water cycle பற்றிய வசனங்கள் இன்று நம்மிடையே உள்ள நவீன அறிவியலை ஒத்திருக்கின்றது. நாம் குர்ஆன் இறக்கி அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்து வந்த நம்பிக்கைகளைப் பார்ப்போமேயானால், வெறும் மூட நம்பிக்கைகளையும், தத்துவங்களையுமே நீரியல் பற்றிய உண்மை என்று நம்பி வந்தனர். உதாரணமாக பின்வரும் குர்ஆன் வசனத்தை ஆராய்வோம்.
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான் (அல் குஆன் 39:21)
இந்த வசனத்திலுள்ள அறிவியல் உண்மைகள் இன்று நமக்கு சாதாரணமாக தெரிகிறது என்றாலும் இந்த உண்மைகள் நீண்ட நாட்களாக குறிப்பாக குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நாம் மறுக்க முடியாது. இந்த water cycle கோட்பாட்டை Bernard Palissy என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முறையாக கண்டுபிடித்தார். 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள், பிளேட்டோ என்ற தத்துவ வாதியின் கருத்துக்களான கடல் நீர் காற்றின் அழுத்தத்தினால் பூமியினுள் ஊடுருவிச் சென்று பின்னர் ஊற்றுக்களாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Descartes போன்ற சிறந்த சிந்தனையாளாகள் கூட மேற்கூறிய சித்தாந்தத்தையே உண்மை என நம்பி வந்தனர்.
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த மக்கள் கூட தத்துவ மேதை என போற்றப்படுகின்ற அஸ்டாட்டிலின் கோட்பாடான மலைக்குகைகளில் பெரும் பனிக்கட்டிகள் குளிர்ந்து நீராகி, அவை பெரிய ஏரிகளாக மாறி அவைகளே பூமிக்கடியில் உள்ள ஊற்றுக்களில் நீர் ஓடுவதற்குரிய ஆதாரமாக இருக்கிறது என்று நம்பி வந்தனர்.
ஆனால் இன்றுள்ள அறிவியல் வளர்ச்சியோ, வானிலிருந்து பெய்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று அவைகள் நீர் ஊற்றுக்களாக ஓடுகின்றது என்பதைக் கூறுகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் கண்டுபடிக்கப்பட்ட இந்த நவீன அறிவியல் கருத்தை குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டது என டாக்டா மாஸ் புகைல் கூறினார்.
இதுபோல் இன்னும் பல திருமறையின் வசனங்களை ஆய்வு செய்த டாக்டா மாரிஸ் புகைல், தமது நூலின் இறுதியில் பின்வருமாறு கூறுகிறார். "
நாம் எடுத்து விளக்கிய அறிவியல் உண்மைகளிலிருந்து, மனித முயற்சிகளுக்கு சவாலாக இருந்துக் கொண்டிருக்கும் இந்த குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்ற முடிவைத் தவிர வேறெதுவுக்கும் நம்மால் வரமுடியவில்லை"."நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.
Subscribe to:
Posts (Atom)