February 28, 2009

Pepsi and Coca Cola Contains PORK (PIG) extracts - PROVEN!!

Shocking / Bad News : Pepsi and Coca Cola contains extract from Pork (Pig)Most of the people avoid Pepsi and Coca-Cola for various reasons:-because of harmful chemical co! ntents such as excessive carbonates, etc. Now there is yet another reason which is more dangerous. The scientific and medical research says that drinking Pepsi & Cola leads to cancer because the key element is taken from Pigs sausage.The pig is the only animal that eats dirt, dung and urine, which makes lethal and deadly fabric polluted germs and microbes. According to a report published in Jordanian magazine, the Head of Delhi University Science and Technology , Dr. Mangoshada scientifically proved that the key element in Pepsi and Cola contains extract from the intestines of Pig which causes cancer and other deadly diseases. The Indian university conducted tests on the impact of drinking Pepsi and Coca Cola which proved that drinking them lead to more rapid heart rate and low pressure.Also drinking 6 bottles of Pepsi or Cola at a time causes instant death. It also contains chemicals such as carbonic and phosphoric acids, citric acid which harms teeth and causes bone fragility. Bones kept in the Cup of Pepsi melts during the week knowing that the bones of the dead remain in the grave for thirty years.Research itself confirmed that the calcium dissolved in Pepsi and it weakens the bladder, kidneys, kills the pancreatic, leads to diabetes and infectious diseases. Pepsi or Coca-Cola lovers, you have nothing to worry as it is not the only drinks available on this earth, as we have other healthy alternatives such as natural fruit juices, canned coconut water, flavoured milks, buttermilk etc., all of them are conveniently available even in the small stores.

February 25, 2009

கப்ரில் நபி(ஸல்) அவர்களின் நிலை

ஜும்ஆவின் தினத்தில் என்மீது அதிகமாக ஸலவாத் ஓதுங்கள் அது எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கப்ரில் மடிந்தவர்களாயிருக்கும் போது எங்களின் ஸலவாத்தை உங்களுக்கு எவ்வாறு எடுத்துக் காட்டப்படும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி தின்பதை விட்டும் தடை செய்துள்ளான் என்றார்கள். (அறி: ஷத்தாத்பின் அவ்ஸ் (ரலி) நூல்: அபூதாவூத், இப்னு மாஜ்ஜா, நஸயீ, தாரமீ, அஹ்மத், இப்னுஹிப்பான்) நிச்சயமாக பூமியில் உலா வந்து கொண்டிருக்கும் சில மலக்குகள் அல்லாஹ்வுக்கு உள்ளனர். அவர்கள் எனது உம்மத்துகளிடமிருந்து எனக்கு ஸலவாத்தைச் சேர்ப்பித்துக் கொண்டிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: நஸயீ, தாரமீ) மேற்காணும் ஹதீஸின் மூலம் நபிமார்களின் உடலை மண் தின்பதை விட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம். இப்பாதுகாப்பு நபிமார்களின் உடலுக்கு உண்டு என்பதாகத்தான் ஹதீஸில் வந்துள்ளதே தவிர, சிலர் கூறுவது போல் குர்ஆன் மனனம் செய்த ஹாபிழ்கள் மற்றும் இறை நேசச் செல்வர்களுக்கும் உண்டு என்பதற்கான சரியான ஆதாரம் ஹதீஸ்களில் கிடையாது. அவ்வாறு உண்டு கூறப்படும் அனைத்து ஹதீஸ்களும் பலகீனமாகவும், இட்டுக்கட்டப்பட்டவையாகவும் உள்ளன. அடுத்து நாம் நபி(ஸல்) அவர்களுக்குக் கூறும் ஸலாமும், அவர்கள் மீது ஓதும் ஸலவாத்தும் தமக்கு சேர்ப்பிக்கப்படுவதாக அவர்கள் கூறி இருப்பதை காணுகிறோம். அவர்களின் பால் சேர்ப்பிக்கப்படும் ஸலவாத்தையும், ஸலாமையும் எவ்வாறு அவர்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது என்பதப் பின்வரும் அறிவிப்பு விளக்குகிறது. உங்களில் ஒருவர் எனக்கு ஸலாம் கூறினால், அல்லாஹ் எனது உயிரை என்னில் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கிறான். அதன் பயனாக அவருக்கு பதில் ஸலாம் அளிக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறி:அபூஹுரைரா(ரலி) நூல்; அபூதாவூத், பைஹகீ, அஹ்மத்) இவ்வறிப்பின் மூலம் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறும்போதும், அவர்கள் மீது ஸலவாத்தோதும் போதும், அவற்றை அவர்களுக்கு சேர்ப்பிக்கக் கூடிய அந்த சந்தர்ப்பத்தில் மட்டும் அவர்களின் உயிரை அவர்களுக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றது என்பதானது, அவர்கள் எப்போதும் கப்ரில் ஹயாத்தாக உயிரோடு இல்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது. ஆகவே, நபி(ஸல்) அவர்களுக்கு கூறப்படும் ஸலவாத்தையும், அவர்கள் மீது ஓதப்படும் ஸலவாத்தையும் மலக்குகளின் வாயிலாக சேர்ப்பிக்கப்படுகின்றது. அல்லது எடுத்துக் காட்டப்படுகின்றது என்ற பொருளுள்ள வாசகமே இடம் பெற்றுள்ளது. மலக்குகளின் வாயிலாக தமக்கு சேர்ப்பிக்கப்படும் ஸலவாத், ஸலாம் முதலியவற்றைத்தவிர மற்றவர் பேசுவதையும் செவியுருகிறார்கள், கப்ரில் உயிருடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கும் சரியான சான்று எதுவுமில்லை என்று ஹதீஸ்கலா வல்லுனர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

புகைப் பழக்கம்

நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.
சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் þல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் þருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் þருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் þவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு 'சமூக விரோதி' புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.
þறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?
þஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.
நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக þருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)
þன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு சொல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:195)
உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7:31)
மேலே கண்ட þறைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா?
மார்க்கம், மருத்துவம், ஒழுக்க ரீதியில் தீய பழக்கம் என கருதப்படுவதை முஸ்லிம்கள் தாமும் தவிர்த்து, சமுதாயத்தினரையும் தவிர்க்கத் தூண்டுவதை விடுத்து, தாமே அக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாக þருப்பது þஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடாகும்.
புகைப்பிடிப்பவர்களிடம் அதன் தீமைகளை எடுத்துரைத்து அப்பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டினால் சாதாரணமாக அவர்கள் கூறுவது "புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியாமலில்லை; உடல் பாதிக்கப்படுவது உணராமலுமில்லை; ஆனால் பாழாய்ப்போன வழக்கத்தை விட முடியவில்லையே" என்பதுதான். புகைப்பிடிக்கும் அறிஞர்களும் கூட þதையே கூறுவது அவர்கள் கற்ற கல்விக்கும் பெற்ற அறிவுக்கும் அழகல்ல.

வெற்றியாளர்கள் யார்?

(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும் நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.3:104
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள். 3:130 எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். 3:185 முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
எவர் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும். 4:13
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் விலகிக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். 5:90
அந்தாளில் எவரொருவர் வேதனையை விட்டும் விலக்கப்படுவாரோ அவர்மீது (அல்லாஹ்) கிருபை புரிந்துவிட்டான். இது மிகத் தெளிவான வெற்றியாகும்" 6:16
அன்றைய தினம் (நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். 7:8
எவர்கள் ஈமான் கொண்டு தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். 9:20
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்; நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு நன்மையே செய்யுங்கள். 22:77
உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் வெற்றியாளர்களாவார்கள். 30:38
எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள். 39:61
எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹ்மத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும். 45:30
(ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள் அன்றியும் நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். 62:10
உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். 64:16

தாய், தந்தையர்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." அல்குர்ஆன் 31:14 பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23
இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244
பெண்கள் எவருக்கு ஒரு மகள் பிறந்து அதை அவமானப்படுத்தாமல் அதைவிட ஆண் மகனுக்கு அதிகச் சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான். நூல:் முஸ்னது அஹமது ஹதீஸ் எண் 1957
அவர்களில் (1400 ஆண்டுகளுக்குமுன் மக்காவாசிகளின்) ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாறாயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது; அவன் கோபமடைகிறான்.
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோஇ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? அல்குர்ஆன் 16:58,59
எவருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து அவர்களை நன்முறையில் வளர்ப்பாரோ, அவரை அவர்கள் நரகிலிருந்து காப்பற்றுவார்கள். நூல்: முஸ்லிம்
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். அல்குர்ஆன் 17:31
அன்று பெண் குழந்தை பிறந்தவுடன் உயிரோடு புதைத்தார்கள். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பிறப்பதற்கு முன்பே ஆணா, பெண்ணா என்றறிந்து பெண்ணாயிருந்தால் கருவிலேயே அழித்து விடுகிறார்கள். உண்மையில் இதுவும் ஒரு கொலைதான்.
அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! மக்கள் வினவினார்கள் "அல்லாஹ்வின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?" முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்" என்று பதலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.

தாய், தந்தையர்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." அல்குர்ஆன் 31:14 பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23
இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244
பெண்கள் எவருக்கு ஒரு மகள் பிறந்து அதை அவமானப்படுத்தாமல் அதைவிட ஆண் மகனுக்கு அதிகச் சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான். நூல:் முஸ்னது அஹமது ஹதீஸ் எண் 1957
அவர்களில் (1400 ஆண்டுகளுக்குமுன் மக்காவாசிகளின்) ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாறாயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது; அவன் கோபமடைகிறான்.
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோஇ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? அல்குர்ஆன் 16:58,59
எவருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து அவர்களை நன்முறையில் வளர்ப்பாரோ, அவரை அவர்கள் நரகிலிருந்து காப்பற்றுவார்கள். நூல்: முஸ்லிம்
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். அல்குர்ஆன் 17:31
அன்று பெண் குழந்தை பிறந்தவுடன் உயிரோடு புதைத்தார்கள். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பிறப்பதற்கு முன்பே ஆணா, பெண்ணா என்றறிந்து பெண்ணாயிருந்தால் கருவிலேயே அழித்து விடுகிறார்கள். உண்மையில் இதுவும் ஒரு கொலைதான்.
அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! மக்கள் வினவினார்கள் "அல்லாஹ்வின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?" முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்" என்று பதலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.

February 22, 2009

யார் பொறுப்பு

சமூகத்தில் படர்ந்த அனாச்சாரயார் பொறுப்பு லீலைகள் பல. அவற்றுள் மிகக் கொடியது பாவகரமானது இஸ்லாத்தின் மூலக் கொள்கை ஏகத்துவத்தையே முறியடிக்கும் தன்மை கொண்டது இறைவனுக்கு வைக்கும் சமாதி வணக்கம். இந்த நிலை ஓரளவு மாறுதல் அடைந்துவிட்டால் பிற சில்லரை அனாச்சார அனுஸ்டானங்களெல்லாம் நாளடைவில் தாமாகவே விடுதலை பெற்றுவிடும் அதற்கு போறாட்டங்களும் கிளர்ச்சிகளும் தேவை இராது.சில்லரை அனாச்சாரங்கள் என்பது, சொறுகப்பட்டிருக்கும் மின்சார பல்புகள் போன்றவை. அவைகளை உடைத்து விடுவதால் பயனில்லை. வேறு பல்புகள் மாட்டிவிடப்படலாம். எரிவதற்கு இயங்க வைக்கும் இயந்திரம் வேறிடத்தில் இருக்கிறது. அது மெயின் சுவிட்ச். அதை இயங்காமல் செய்து விடுவதால் மட்டுமே தான் கருதிய பலன் கைகூடும். இந்த மூலத்தை இரகசியத்தை உணர்வதில்லை.சில்லரை அனாச்சார செய்கைகளை கண்டிக்கவும், திருத்தவும் ஈடுபடுகிறோம். அவை வீண் வேலை! பலிபீடம் அங்கல்ல! தர்கா மணி மண்டபங்களுக்குள் இருக்கின்றது. அவைதான் தகர்க்கப்பட வேண்டும். அப்படித் தகர்த்துவிட்டால் ஏகத்தவத்தன்மைக்கு இழிவும் பாதகமும் ஏற்படாது. சமூகம் தாழ்ந்து கொண்டே போகாது.இந்த உண்மையை உணர்ந்து கொண்ட உணர்ச்சி மிகுந்த தொண்டர்கள் பலர், கல்லரை வணக்க ஒழிப்புப் பணியில் கருத்தை செலுத்துகிறார்கள். இதகைய புனிதமும் ஜீவாதாரமுமான தொண்டு புரிய இலாயக்குள்ளோர் மதகுருமார்களான மெªலவிகள் தான் என்பது நம்மிடை நிலவி வரும் தவறான கருத்து. இம்முறையில் அந்த தொண்டு புரிபவன் தூற்றப்படுகிறான், மிறட்டப்படுகிறான். மார்ர்கப் புலமையற்ற மடையா, இந்த பணி புரிந்திடலாமோடா? எனப் பரிகசிக்கப்படுகிறான், கண்டிக்கப்படுகிறான்! காரசாரமாக!அனாச்சாரங்களை கண்டிக்கும் இலட்சியத்தோடு அறப்போர் புரிபவன் மிஷ்காத்தை கரைத்துக் குடித்தவனாக இருக்கவேண்டியதில்லை 5, 7, 10 ஆண்டுகள் என்று அரபி மதரஸாக்களில் கற்றுத் தேர்ந்து படாடோபங்களோடு காட்சி தரவேண்டியதில்லை. கலைகள் பலவற்றில் சட்ட நுணுக்க வல்லுனர்களாக ஆராய்ந்தறிந்த சாஸ்திரியாக இருக்கத்தான் வேண்டுமென்ற விதியும் இல்லை. அனைவராலும் அது முடியக்கூடிய காரியமா? இஸ்லாம் அப்படி ஏதேனும் சட்டம் விதிக்கவில்லை. ஒவ்வொருவனுக்கும் மதப்பணியைக் கடமையாக்கி இருக்கிறது."லாயிலாஹா இல்லல்லாஹூ" இந்தக் கலிமா மந்திரத்தை ஓதி விட்டாலே போதுமே கல்லறை வணக்கம், ஆண்டவனுக்கு இணைவைக்கும் இழி செயல் இஸ்லாத்துக்கு ஆகாது. அது விலக்கப்படவேண்டும் என்ற கருத்தைப் பெற அதைச் செயலாக்கிக்காட்டும் துணிவைப் பெற. இதற்காக மார்க்க ஞானங்களை எல்லாம் துருவிப்பார்க்க வேண்டியதில்லை! அதன் மூலம் சன்னதுகள் தேவையில்லையே!ஓர் கலியாண வீடு என்று வைத்துக்கொள்வோம். பாடகர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். அந்தப் பாகவத சிகாமனி, மயான காண்ட ஒப்பாரி மாலை பாடுகிறார். கூடியிருந்து கேட்டோர் கனன்றெழுந்து ஓய்! பாகவதரே, உன்பாடலை நிருத்தும்! நீயும் ஒரு பாடகனா? காலமுணர்ந்து பனியாற்றும் இசைவாணனா? மங்களகரமான விழாவில் கல்யாணி ராகம் படுவதை விட்டு, முகாரி பாடலாமா? என்று கேட்கிறார்கள். என் பாடலை ரசிக்க வந்த மகாஜனங்களே, உங்களுக்கு ரசிக்கும் தன்மை கிடையாது. நீங்கள் என்னைப்போல் பாகவதர்களா? பட்டம் பெற்றவர்களா? சங்கீதக் கலை கற்றவர்களா? சினிமா டிராமாவில் நடித்தீர்களா? இந்நிலையில் நீங்கள் என்னைக் கண்டிப்பதா? கனல் கக்கும் விழிகளை உருட்டி மிரட்டிக்காட்டுவதா? இப்படிப் பதறித் துடித்து பதில் தருகிறார் பாகவதர் என்று கற்பனை செய்து கொள்வோம்.இந்நிகழ்ச்சிப்படி பாகவதரின் கருத்துப்படி, தவற்றைக் கண்டிக்க முற்பட்டது தகாது என விழங்குகிறது. இது பொருத்தமா? நேர்மையா? பகுத்தறிவுக்கு ஏற்றதா? சங்கீதக் கலை தெரிந்தவர்கள்தான் கண்டிக்க வேண்டும், திருத்தும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதா? இது முறையா? கூடுமா? முடியக்கூடிய காரியமா? பாகவவதரைப்பற்றி என்னகருத்து உதிக்க முடியும்?அதேபோல் நம்மில் சில மவுலவிமார்கள் பட்டமும், ஆடை அலங்காரப்பட்டும் இல்லாத மதப்பணியாளர்களை தூற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்! நம்மைக் குறை கூற இவர்களுக்கென்ன அந்தஸ்துண்டு? உரிமை உண்டு? எனக் கொக்கரிக்கிறார்கள்.இந்நிலை மாறவேண்டும், மதப் பணிபுறிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிமையிருக்கிறது என்ற உயரிய எண்ணங்கள் கொண்ட இதயங்கள் பெருகவேண்டும். அதற்கு எல்லோருக்கும் வாய்ப்பும் வசதியும் அளிக்கப்படவேண்டும். அதுவரை ஏமாற்றுவோர், ஏமாற்றப்படுவோர் இருந்தேதான் தீருவர். சமூகம் சீரழிந்து கொண்டேதான் போகும்.

கப்ாின் வேதனைக்குக் காரணம் என்ன?

கப்ாின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. 1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது. 2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது. கப்ாின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி? 1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பாச் செய்ய வேண்டும். 2. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளில் முடியுமானவைகளைச் செய்ய வேண்டும். 3. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை முற்றாக விட்டுவிட வேண்டும். கப்ாின் வேதனையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து, அதை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கிவைப்பானாக

உங்களில் ஒரு கூட்டம்!

மனிதன் ஒன்று முதல் ஐயறிவுகளைப் பெற்றுள்ள இடத்தினின்றும் முற்றிலும் மாறுபட்டவனாக விளங்குகின்றான். எதனையும் பகுத்துணரும் பக்குவத்தைப் பெற்றவனாகவும் திகழ்கிறான். எது உன்மையான செயல், எது தீமையான செயல் என்பதில் அவனுக்குப் படிப்படியாக தெளிவும் ஏற்பட்டு விடுகின்றது.

சிந்தனைப் தெளிவும் சீர் தூக்கிப் பார்க்கும் மன நிலையும் ஏற்பட்டு விட்ட வளர்ந்த மனிதன் பகுத்தறிவினால் வாழ முற்படுகிறான். இந்நிலையில் காலங்காலமாக பரம்பரை பரம்பரையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பகுத்தறிவுக்கொவ்வாத சில சடங்குகள் சம்பிரதாயங்களையும் விட்டுவிட மனத் துணிவில்லாமல் அவன் தத்தளிக்கவும் செய்கிறான்.

இந்நிலையில் இறை நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம்களாகிய நாம் எங்கனம் செயல்பட வேண்டும் என்பதை அல்குர்ஆன் நமக்கு அரிய வழிகாட்டியாகத் திகழ்கின்றது.

மேலும் நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதை கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும், இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3:104)

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (எனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் நம்பிக்கை கொண்டிருப்பின் (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் 3:110)

நல்லதை ஏவித் தீயதைத் தடுக்கும் கூட்டமானது மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மார்க்கத் தெளிவு மற்றவர்களை விட அவர்களுக்கு அதிகம் இருக்க வேண்டும். இல்லையேல், மற்றவர்களால் விமர்சிக்கப் படுவர். தன் மனதில் பட்டதை விருப்பு வெறுப்பை மார்க்கம் என்று கூறக்கூடாது. கற்பனையாக மார்க்கத்தை வியாபாரமாக்கியதால்தான் இன்றைய சமுதாயத்தில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மெளலூதுகளும் பாத்திஹாக்களும் இன்ன பிற கேலிக் கூத்துகளான 'பித்அத்களும்' மார்க்கக் கடமைகளைப் போல் அதுவும் மிக முக்கிய கடமைகளாகச் சித்தரிக்கப் படுகின்றன.

உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:116)

தெள்ளத் தெளிவாகவே திருமறை தெளிவாக்கிவிட்டது. மன முரண்டாக மார்க்கத்தைப் பற்றி நாம் விளக்கம் செய்யக்கூடாது.

நான் உங்களை வெள்ளைவெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அழிந்து நாசமாகக் கூடியவர்களைத் தவிர வேறு எவரும் அதில் வழி தவறவே மாட்டார்கள். அறிவிப்பவர்: இர்பால் இப்னு ஸாரியா (ரலி) நூல்:
இப்னுமாஜா
பித்அத் புரியும் ஒருவரது தொழுகை, நோன்பு, ஈகை, ஹஜ், உம்ரா, தியாகம், மார்க்கத்திற்காக முயற்சிகள் முதலிய அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட மாட்டா. குழைத்த மாவிலிருந்து தலைமுடி எப்படி இலகுவாக வெளியேற்றப்படுமோ, அதே போல் பித்அத்காரன் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவான். அறிவிப்பாளர்: ஹுதைபா(ரலி) நூல்: ஸுனன்
இப்னுமாஜ்ஜா
இறைமறை இறைத்தூதர் வழிமுறை இவ்விரண்டைத் தவிர வேறு வழிமுறைகள் எத்துனை அழகாக இருப்பினும் பின்பற்றக் கூடாது என்பது வெளிப்படையாகவே விளங்கிவிட்டது.

நவீன புதுமைகளை மார்க்கமாக எண்ணிச் செயல்பட்டு வந்தவர்கள் யாவரும் உண்மை தெரிந்த பிறகும் இறையச்சமும் இறை நம்பிக்கையும் சற்றுமின்றி, உண்மையான மார்க்கத்தின் பக்கம் அடியெடுத்து வைக்க மறுப்பதேன்? பழகிவிட்ட காரணமா? பழக்கத்தை விட மனமில்லாத காரணமா? நமக்கு மார்க்கம் பெரிதா பரம்பரைப் பழக்க வழக்கங்கள் பெரிதா? இறைவனுக்கு அஞ்சி சிந்தித்துச் செயல்பட முன்வாருங்கள்!

இஸ்லாம் மனித வாழ்க்கையை மாண்புறச் செய்யவே விழைகின்றது. நம்முடைய மார்க்கமும் இலகுவான எளிய மார்க்கம்! மனிதன் தன் சக்திக்கு ஏற்ப செயல்படத்தக்க விதமாக அமைந்துள்ள எளிய மார்க்கம். மார்க்கம் சீர்திருத்தப்பட்ட ஒன்று. ஏற்கனவே எல்லாம் வல்ல இறைவனால் முழுமையுறச் செய்யப்பட்ட மார்க்கத்திலேயே நாம் இருக்கின்றோம். இதனை நம்மைச் சுற்றியுள்ளவர்களிடத்தே எடுத்தியம்புவதே நமது பணியாகும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மார்க்கத்தை தம் மனோ இச்சைகளுக்கும் சுயநலங்களுக்கும் ஏற்ப வளைத்துக் கொள்ளும் போலி வேடதாரிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதே நேரத்தில் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் ஒரு குழுவினரும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அத் திருத்தொண்டர்களாக நீங்கள் இருக்கலாமே!

February 21, 2009

செல்வந்தர்களே!

செல்வந்தர்களே! நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்மையில் அனுபவிப்பது எவற்றை என்பதை நிதானமாகச் சிந்தியுங்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் மனிதன் ஒரு வயிற்றுக்குத்தானே சாப்பிட முடியும். இரண்டு வயிற்றுக்கு சாப்பிட முடியுமா? இரண்டு வாகனங்களில் தான் பிரயாணம் செய்யமுடியுமா? மனிதன் அனுபவிப்பதற்கென்று அல்லாஹ் ஒதுக்கியதற்கு மேல் ஒரு ஊசி முனை அளவுதானும் அனுபவிக்க முடியுமா? இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு ஏழை நடுத்தர வர்க்கத்தினன் அனுபவிக்கும் உலக சுகங்களைக்கூட அனுபவிக்க விடாமல் உங்களது செல்வம் உங்களைத் தடுத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

செல்வத்தை பெருக்குவதற்கு அதே லட்சியமாக வாழ்ந்து வரும் மனிதனைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான். "செல்வத்தை பெருக்கும் ஆசை உங்களைப் பாராக்கி விட்டது" அல்குர்ஆன் (102:1) என்று அல்லாஹ் கூறுவது மறுமையை மறந்த நிலைதான். ஆனால் செல்வந்தர்களில் பலர் இவ்வுலகில் அவர்கள் அனுபவிக்க வேண்டியவைகளையும் அனுபவிக்காமல் மறந்து செல்வங்களைச் சேர்ப்பதில் மூழ்கி இருப்பதையே பார்க்க முடிகிறது. ஆக பெரும்பாலான செல்வந்தர்கள் செல்வங்களைச் சேர்த்து குவிப்பதில் குறியாக இருப்பது அனுபவிப்பதற்காக அல்ல, மக்களிடையே கிடைக்கும் பெரும் செல்வந்தன் என்ற பெயரையும், அந்த மக்கள் கொடுக்கும் மரியாதையையும், கூழைக்கும்பிடையும், உலகில் கிடைக்கும் அற்ப பதவிகளையும் எதிர் பார்த்தே. இவற்றால் தனக்கு இவ்வுலகில் உரிய பயனில்லை, மறுமயிலும் பயனில்லை அதற்கு மாறாக மிகப்பெரும் வேதனை தண்டனை காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள். ஆக எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் அவன் உண்டு கழித்தது, உடுத்தி கிழித்தது, மறுமைக்கென்று அவன் முன்கூட்டியே அனுப்பி வைத்தது மட்டும்தான் அவனுடையதாகும். எஞ்சிய செல்வங்கள் அனைத்தும் அவனது வாரிசுகளுக்குரியதாகும். அந்த வாரிசுகளாவது அது கொண்டு அனுபவிக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. அந்த செல்வங்களைப் பங்கிட்டு கொள்வதில் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளிடையே சண்டை சச்சரவு, அடி தடி தகராறு, கோர்ட் கச்சேரி என்ற அவல நிலையையே பார்க்க முடிகிறது. செல்வந்தன் சேர்த்து வைத்த செல்வம் அவனது வாரிசுகளையும் நிம்மதி இழக்கச் செய்து வழக்கு வம்பு என்று அச்செல்வம் கரைந்து போகும் நிலையே ஏற்படுகிறது. மிதமிஞ்சிய பெரும் சொத்து சுகங்களைச் சேர்த்து வைத்து விட்டுச் சென்றவர்களின் மக்கள், சொத்தைப் பிரித்துக் கொள்வதில் சண்டை சச்சரவு, வழக்கு வம்பு என செல்வத்தை கரைத்து வருவதையும் பார்த்து வருகிறோம். அண்ணன் தம்பிகளிடையேயுள்ள தகராறினால் பல சொத்துக்கள் பாழடைந்து கிடப்பதையும் பார்த்து வருகிறோம். இப்படி பெருங்கொண்ட சொத்து சேர்த்து வைத்த குடும்பங்கள் அவற்ரை முறையாக அனுபவிப்பதற்கு மாறாக சீரழிந்து கொண்டு வருவதையே பார்க்கிறோம். 10 தலை முறை 20 தலை முறை என சொத்து சேர்த்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களது வாரிசுகள் அவற்றை அழித்துவிட்டு பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுவதயும் நாம் பார்த்துத்தான் வருகிறோம். வாரிசுகளுக்கு நீங்கள் அளிக்கும் செல்வம்! செல்வந்தர்களே! இதை எல்லாம் இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் தெரியுமா? பெரும் சொத்துக்களை சேர்த்து வைத்து விட்டுச் செல்கிறவர்கள் தங்களின் வாரிசுகளுக்குப் பெரும் துரோகத்தைச் செய்து விட்டுச் செல்கிறார்கள் என்பதை புரிய வைக்கத்தான். அவர்களின் இவ்வுலக வாழ்க்கையும், மறு உலக வாழ்க்கையும் பாழாக்குகிறார்கள் என்பதே உண்மையாகும். சொத்து சேர்க்கும் பேராசையாகப்பட்டது உங்கள் வாரிசுகளை நல்லொழுக்க முடையவர்களாக, மார்க்கத்தில் பேணுதல் உடையவர்களாக பயிற்றுவிப்பதை விட்டும் உங்களைத் தடுத்து விடுகிறது. அதற்கு மாறாக உங்களின் மிதமிஞ்சிய செல்வம் அவர்களைப் பல தவறான வழிகளில் இட்டுச் செல்ல வழிகாட்டுகிறது. பல தீய பழக்க வழக்கங்களுக்கும் ஆளாகி விடுகிறார்கள். பல செல்வந்தக் குடும்பங்களில் இதை நிதர்சனமாகப் பார்க்க முடிகிறது. சொந்த உழைப்பே உயர்வுக்கு வழி! சொத்து சுகங்களைச் சேர்க்காவிட்டாலும், தங்கள் குழந்தைகளை நல்லொழுக்கம் உடையவர்களாக மார்க்கம் பேணக்கூடியவர்களாக ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகப் பழக்குவதோடு, தங்கள் கைகளால் உழைத்து ஹலாலான முறையில் தங்களின் வாழ்வாதாரங்களைத்த் தேடிக்கொள்ள அவர்களை பயிற்றுவிப்பதே சாலச் சிறந்ததாகும். உங்கள் சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்ததைக்கொண்டு அவர்கள் வாழ்வதைவிட அவர்களே அவர்களது வாழ்வாதரங்களைத் தேடிக்கொள்ள பயிற்றுவிப்பதே மிக மிக ஏற்றமாகும். அல்குர்ஆனை பொருள் விளங்கி நீங்கள் படிப்பீர்களானால் எண்ணற்ற இடங்களில் அல்லாஹ்வுடைய பாதையில் பந்துக்களுக்கும், அனாதைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், கடனாளிகளுக்கும் செலவிடுவதை உற்சாகப்படுத்து வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அவற்றை நன்கு படித்து விளங்கினால் வருடா வருடம் ஜகாத் கொடுப்பது மட்டுமல்லாமல் தாராளமாக இந்த வகைகளுக்கு அதிகம் அதிகமாக செலவிடுவதை எந்த அளவு அல்லாஹ் வலியுறுத்துகிறான் என்பதை விளங்க முடியும். அந்த வசனங்கள் வருமாறு:
2:3,177,195,219,254,261,267,270-274,3:92,134,4:34,38,39,95, 5:64, 8:3,36,60,72, 9:20,34,44,53,54,91,98,99,13:22,14:31,16:75, 22:35,24:33,25:7,26:88,89,28:54,29:15, 32:16,34:39,35:29,36:47,42:38, 47:38,57:7,10,59:8,60:10,11,63:7,10,64:16,65:7,70:24
இந்த வசனங்கள் அனைத்தையும் கவனமாக பொருள் அறிந்து படித்துப் பார்ப்பவர்கள், அல்லாஹ் அளித்துள்ள செல்வத்தை எந்த அளவு இல்லாதவர்களுக்கும் கொடுத்துஉதவ வேண்டுமென்பதை விளங்க முடியும்.

மனோ இச்சைக்கு வழிப்படுதல்

4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும்> உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும்> நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம்> இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி>) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும்> வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்். அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்். ஆனால்> அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும்> அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
5:77. ''வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாாின் மனோ இச்சைகளை நீ்ங்கள் பின்பற்றாதீர்கள்். அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன்> தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்"" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
7:176. நாம் நாடியிருந்தால்> நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்் எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து> தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்் அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று> அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது> அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.
6:150. ''நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்"" என்று கூறும்் அவர்கள் சாட்சி கூறினால்> (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் - நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள்> மறுமையை நம்பாதவர்கள் ஆகியோாின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் - ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.
6:56. ''நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்"" (என்று நபியே!) நீர் கூறுவீராக ''உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்் (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்் மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்"" என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
18:28. (நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும்> மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ> அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்் இன்னும்> எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்் ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காாியம் வரம்பு மீறியமாகி விட்டது.
25:43. தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?
28:50. உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில்> நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்் இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட> மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்் நிச்சயமாக அல்லாஹ் அக்கரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.
30:29. எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்் ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ> அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர்.
47:16. இன்னும்> அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்் ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும்> எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து் ''அவர் சற்று முன் என்ன கூறினார்?"" என்று (பாிகாசமாகக்) கேட்கின்றனர்் இத்தகையோாின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள்> தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.
45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சாீர> மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ> அவனை நீர் பார்த்தீரா? மேலும்> அநிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு் இன்னும்> அவனுடைய பார்வை மீதும் திரையை அதை்துவிட்டான். எனவே> அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
79:37-41 எனவே> எவன் வரம்பை மீறினானோ - இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- அவனுக்கு> நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.. எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ> நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
38:26. (நாம் அவாிடம் கூறினோம்்) ''தாவுூதே! நிச்சயமாக நாம் உம்மை புூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்் ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதுமாக)த் தீர்ப்புச் செய்யும்் அன்றியும்> அனோ இச்சையைப் பின் பற்றாதீர்் (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ> அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.
4:27. மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்். ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
53:23. இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை> நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை> நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும்> தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்> எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து> அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.

February 18, 2009

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:---
1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி 'என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் 'சதக்கா' (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா?" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)

வேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது:
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் "என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம் எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் 'சதக்கா' செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா?" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்

மேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார்.

இறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

இத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின் நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை.

February 14, 2009

வேண்டாம் வரதட்சணை

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4) ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம். வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை. தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை. பெண் குழந்தையை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் அந்தப் பிச்சைப் பணத்தை வாங்குவதற்கு ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் பிறந்த குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு சாகடிக்கும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் தெரிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெறாத நாளே இல்லை. இதற்கெல்லாம் காரணம் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்த்திருந்தும் இந்தக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்துவருகிறது. இந்திய அரசாங்கம் வரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று அறிவித்து இருந்தாலும் நடைமுறைப் படுத்தாத இந்தச் சட்டத்தால் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே வரதட்சனையை ஒழிப்பதற்கு பல வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இல்லற வாழ்கையில் இருவரும் மகிழ்சி அடையும் போது இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. என்று பெண்கள் இயக்கங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது. ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது. யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம். மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும். திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் தமது வீட்டில் தமது உறவினர்களுடன் வழக்கம் போலவே இருந்து வருவார்கள். ஆனால் பெண்கள் தனது தாய், தந்தை, உற்றார், உறவினர், ஊர் அனைத்தையும் தியாகம் செய்து வருகின்றனர். பிறந்த வீட்டை மறந்து விடுவதை சாதாரணமானதாகக் கருத முடியாது. பெண்களில் இந்த தியாகத்துக்காக ஆண்கள் பெண்களுக்குக் கொடுப்பது தான் நியாயமானது. பிறந்த வீட்டில் தனது வேலையைக் கூட பார்த்துப் பழகாதவள் புகுந்த வீட்டில் கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் குடும்பத்திற்காகவும் பணிவிடைகள் செய்கிறாள். நாள் முழுவதும் புகுந்த வீட்டுக்காக உழைக்கிறாள். ஆண்கள் பெண்களின் இந்த தியாகத்துக்காக கொடுப்பது தான் நியாயமானது. இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டதால் பெண் கர்ப்பம் அடைந்தால் அதனால் அவளுக்கு ஏற்படும் சிரமம் சாதரணமானது அல்ல. எதையும் உண்ணமுடியாது. ஆசைப்பட்டதை உண்டவுடன் வாந்தி எடுக்கிறாள்! நாள் செல்லச் செல்ல இயல்பான அவளது எல்லா நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இயல்பாக நடக்க முடியாது. இயல்பாக படுக்க முடியாது. இப்படிப் பல மாதங்கள் தொடர்ந்து சிரமம் அடைகிறாள். இவள் அந்த நிலையைக் அடைவதற்குக் காரணமாக இருந்த ஆண் தந்தையாகப் பொவதற்கு கடுகளவு சிரமத்தையும் அடைவதில்லை. இந்த தியாகத்துக்காகவே பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலைத் தட்டி விட்டு மறுஜென்மம் எடுக்கிறாள். செத்துப் பிழைக்கிறாள். இதற்கு நிகரான ஒரு வேதனையை உதாரணமாகக் கூட எடுத்துக் காட்ட இயலாது. ஆண் மகனின் வாரிசைப் பெற்றுத் தருவதற்காக -அவள் படுகிற சிரமத்திற்காக ஆண்கள் கொடுப்பது தான் நியாயமானதாகும்.. இந்த ஒரு சிரமத்துக்காக கோடி கோடியாக கூட கொடுக்கலாம். குழந்தையைப் பெற்றெடுத்தபின் இரண்டாண்டுகள் தூக்கத்தை தியாகம் செய்து கண் விழித்து பாலூட்டி வளர்க்கிறாள். தனது உதிரத்தையே உணவாகக் கொடுத்து இவனது வாரிசை வளர்க்கிறாள்!
கழுவிக்குளிப்பாட்டி சீராட்டி அழகு பார்க்கிறாள்! ஒவ்வொரு பருவத்திலும் குழைந்தைக்காக தன்னையே அர்ப்பணித்து விடுகிறாள்! இதற்காகவும் ஆண்கள் தான் கொடுக்கவேண்டும். இப்படிச் சிந்த்தித்துப் பார்த்தால் இன்னும் பல காரணங்களைக் காணலாம். இதன் காரணமாகத் தான் ஆண்கள் பெண்களுக்கு மஹர் எனும் மணக்கொடையை மனமுவந்து வழங்கிட வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. மணக் கொடை என்பது நூறோ இருநூறோ வழங்கி ஏமாற்றுவது அல்ல! நமது சக்திக்கும் வசதிக்கும் ஏற்றவாறு தாராளமாக வழங்குவதே மஹர் என்பதை இதிலிருந்து விளங்கலாம். ஒரு குவியலையே கொடுத்தாலும் அதிலிருந்து திரும்பப் பெறாதீர்கள் (அல்குர்ஆன் 4:20) என்று கூறுவதன் மூலம் மஹர் என்னும் மணக்கொடைக்கு அளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான். பெண்களுக்கு வரதட்சனைக் கொடுத்து மண முடிக்க வேண்டிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களிடமே கேட்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணரவேண்டும். கொடுக்காமல் இருந்தது ஒரு குற்றம். வாங்கியது மற்றொரு குற்றம் என்று இரண்டு குற்றங்களைச் சந்திக்கும் நிலை மறுமையில் ஏற்படும் என்பதையும் உணரவேண்டும். வரதட்சனை வாங்கும் திருமணங்களை ஜமாஅத்துக்கள் அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளைக்கு உயிரூட்ட வேண்டும். இளைய சமுதாயம் வரதட்சணையினால் ஏற்படும் அவலங்களை உணர்ந்து அந்த மூடப் பழக்கத்தை உடைத்து எறிந்திட முன்வர வேண்டும்! வல்ல இறைவன் இதற்கு அருள் புரியட்டும்!

குர்ஆனின் போதனைகள் அநியாயக்காரன் யார்?

அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? 2:140

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! 5:45

அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். 6:21

இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். 6:33

(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர்
அமர்ந்திருக்க வேண்டாம். 6:68

அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? 6:93

இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்." 6:135

மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான். 6:144

அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். 14:34

இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை. 22:71

அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; "அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?" எனக் கூறுவான். 25:27

எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். 29:49

அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர். 30:29

எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? 32:22

(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; 42:22

உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். 49:11
எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். 62:5

குர்ஆனின் போதனைகள் அநியாயக்காரன் யார்?

அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? 2:140


எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! 5:45


அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். 6:21


இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். 6:33


(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர்

அமர்ந்திருக்க வேண்டாம். 6:68


அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? 6:93


இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்." 6:135


மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான். 6:144


அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான். 14:34


இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை. 22:71


அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; "அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?" எனக் கூறுவான். 25:27


எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். 29:49


அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர். 30:29


எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? 32:22


(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; 42:22


உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். 49:11


எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். 62:5

அல்லாஹ்வின் வல்லமை

அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: எனது அடியார்களே! நான் நிச்சயமாக அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்களைத் தவிர. ஆகவே நேர்வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.
என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியர்வர்களைத் தவிர (மற்ற) அனைவரும் பசித்தர்வர்களே. ஆகவே அவர்களுக்கு உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உணவளிக்கிறேன்.
என் அடியார்களே! உங்களில் நான் உடை அணிவித்தவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் உடையற்றவர்களே. என்னிடம் உடையளிக்குமாறு கேளுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவ காரியங்களைப் புரிகிறீர்கள்; நான் சகல பாவங்களையும் மன்னிக்கிறேன். ஆகவே என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன்.
என் அடியார்களே! எனக்கு நீங்கள் தீங்கிழைக்கவோ, நன்மை புரியவோ முடியாது. என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், உங்களுக்கு பின்னால் தோன்றக் கூடியவர்களும், மனிதர்களூம், ஜின்களும், (அனைவரும்) உள்ளத் தூய்மைப் பெற்ற முத்தக்கீன்களாகி (இறையச்சமுடையவர்களாகி) விட்டாலும் அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. என் அடியார்களே! உங்களுக்கு முன்னால் தோன்றியவர்களும், இனி தோன்றக் கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், ஜின்களும், (ஒன்று சேர்ந்து) மிகக் கெட்ட மனம் படைத்தவர்களாகி விட்டாலும் அதுவும் என் அதிகாரத்தை சிறிதளவும் குறைத்து விடாது!
என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், மனிதர்களும், ஜின்களும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்றுகொண்டு என்னிடம் கேட்கட்டும் . அவர்கள் கேட்கின்ற அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அவ்வாறு கொடுப்பதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதி கடல் நீர் ஒட்டிக் கொள்வதால் எவ்வளவு கடல் நீர் குறையுமோ அந்த அளவுக்குக்கூட என்னிடமுள்ள அருட்கொடைகள் குறைந்து விடாது.
என் அடியார்களே! இதோ உங்கள் செயல்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். பிறகு (மறுமையில்) இதன் கூலியை உங்களுக்கு நான் அளிப்பேன். நீங்கள் நற்கூலி பெற்றுக்கொண்டால், அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி காட்டுங்கள்; நல்லது அல்லாததை (தண்டனை) நீங்கள் பெற்றுக் கொண்டால் அதற்கான காரணம் நீங்கள்தாம்.
அறிவிப்பவர்: அபூதர் (ரழி) நூல்: முஸ்லிம்

அன்று இடித்தவர்கள், இன்று பரிகாரம் தேடுகிறார்கள்!

'அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்?' (திருக் குர்ஆன் 2:114)

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மஸ்ஜிதின் நடுக்கோபுர உச்சியில் கடப்பாரையுடன் நிற்கும் இரண்டு பேர், நினைவிருக்கிறதா?
இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை தன் ஊருக்கு எடுத்துச்சென்று 'ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்' என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழிக்க வைத்தவர் இன்று இஸ்லாத்தில் இணைந்து 100 பள்ளிவாசல்களையாவது புனர் நிர்மாணம் செய்ய உறுதிபூண்டு தன் பாவத்துக்கு பரிகாரம் தேடும் அதிசயம்!
அவ்விருவரும் இன்று முஹம்மது ஆமிர், முஹம்மது உமர் என்று பெருமையோடு கூறுவதுடன் பல மஸ்ஜிதுகளை கட்டுவதையும், புனர்நிர்மாணம் செய்வதையும் தமது பிறவிப்பலனாக கருதி செய்து வருகின்றனர். இந்த அதிசயம் எப்படி நடந்தது? இவர்கள் முஸ்லிம்களாவதற்கு யார் காரணம்? என்ன காரணம்?
அறிந்து கொள்ள உள்ளே நுழைவோம்!
பல்பீர் சிங் - 6-12-1970-ல், ஹரியானாவிலுள்ள பானிபட் மாவட்டத்திலள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு சிறந்த விவசாயி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்பதோடு நல்லவர், மனிதநேயமிக்கவர். பிறருக்கு அநீதம் விளைவிப்பதை கடுமையாக வெறுப்பவர்.
மும்பாய்க்குப் பிறகு 'சிவசேனா' வின் உறுதிமிக்க கோட்டையான பானிபட்டடில் வாலிபர்களும் மாணவர்களும் சிவசேனாவில் ஈடுபட்டிருந்த நேரம் அது.; பானிபட்டில் இன்டர் மீடியேட்டில் படித்துக் கொண்டிருந்த போது பல்பீரசிங்; 'அந்த' இயக்கத்தில் தன்னை பதிவு செய்து சேர்ந்து கொண்டார்.
பானிபட்டில், இந்திய வரலாற்றை எடுத்துக் கூறும் சாக்கில், வாலிபர்களிடையே முஸ்லிம்கள் மீதும், பாபர் போன்ற முஸ்லிம் மன்னர்கள் மீதும் வெறுப்பை ஊட்டப்பட்டது. தனது மகன் 'அந்த' இயக்கத்தில் சேர்ந்ததை அறிந்த பல்பீர்சிங்குடைய தந்தை உண்மை சரித்திரத்தை தனது மகனுக்கு புரிய வைக்க முயன்றார். "பாபர் மற்றும் அவ்ரங்கசேப் ஆட்சிக்காலத்தில் இருந்த நீதம், முஸ்லிம் அல்லாதோருடன் அவர்கள் நடந்து கொண்ட நன்னடத்தைகளையும், இந்திய மக்கள் தமக்குள்ளே மோதி இந்நாடு பலவீனப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலேயர்கள் வரலாற்றுத் திரிபுகள் செய்துள்ளனர்" என்கின்ற உண்மையை எடுத்துச் சொல்லியும் தனது மகனை அவரால் திருத்த முடியவில்லை.
1990-ல் அத்வானியின் ர(த்)த யாத்திரையின்போது பானிப்பட்டின் முக்கிப் பொறுப்பு பல்பீர் சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. ர(த்)த யாத்திரையில் வந்த தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை கக்க அந்த நிமிடமே மஸ்ஜிதை இடிக்க எவர் வந்தாலும் வராவிட்டாலும் தான் மட்டுமே சென்று அதை இடித்துத் தரை மட்டமாக்குவதாக சிவாஜியின் மீது சத்திய பிரமானம் எடுக்கிறார் பல்பீர் சிங்.
சிவசேனாவின் 'இளைஞர் பறக்கும் படை' யின் துணைத்தவைராக பொறுப்பேற்று 1990 அக்டோபர் 30 அன்று அயோத்திக்கு புறப்பட்ட அவரை ஃபஸாபாத்தில் போலீஸார் தடுத்து நிறுத்துகின்றனர். அதையும் மீறி அவரும் அவரது நண்பர்களும் எப்படியோ தப்பி அயோத்திக்குள் நுழைந்து விடுகின்றனர். அதற்கு முன்னர்தான் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருந்ததால் எவ்வளவோ முயன்றும் அவர்களால் பாபரி மஸ்ஜிதை நெறுங்கக்கூட முடியவில்லை. கோபம் எல்லை மீறியது. அப்பொழுதே உடனே லக்னோ சென்று முலாயம் சிங்கை தனது கரங்களால் சுட்டுப் பொசுக்க அவர் உள்ளம் நாடியது.
அங்கு சோனிப்பட்டின் ஜாட் இனத்துக் கிராமத்தைச் சார்ந்த அவரது நண்பர் யோகேந்திர பாலும் சேர்ந்து கொண்டார். யோகேந்திர பாலின் தந்தை ரகுபீர் சிங் சௌத்ரி பெரும் நிலச்சுவான்தரராக இருந்தார். அவர் எவ்வளவோ தடுத்தும் இவர்கள் சற்றும் பின் வாங்கவில்லை.
டிசம்பர் - 6, 1990 – க்கு முந்தைய இரவு பாபரி மஸ்ஜிதை நெருங்கி அருகிலுள்ள முஸ்லிம்களின் வீட்டு மாடியில் இரவைக் கழித்தனர். தலைவர்களின் உத்தரவை எதிர்பார்க்காமல் கரசேவையை துவங்கி விட அவர் உள்ளம் துடித்தது. அவ்வளவு அவசரம்! இருந்த போதும் குழுத்தலைவர் கட்டுக்கோப்புடன் இருக்கும்படி கூறி தடுத்து விட்டார்.
இந்நிலையில் கரசேவகர்ளுக்கிடையில் உமாபாரதி உரை நிகழ்த்தினார். அவரது உரையை கேட்டதுமே பல்பீர் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கியிருந்த வீட்டின் மாடியிலிருந்து இறங்கி கடப்பாறையுடன் மஸ்ஜிதின் முகட்டில் ஏறினர். உமாபாரதி ம்… ஏக், தோ, பாபர் மஸ்ஜித் தோடுதோ! (ஒன், டூ … இடியுங்கள் பாபர் மஸ்ஜிதை) என்று முழங்க அந்த நாசகாரக் கும்படலுன் பல்பீர் சிங்கும் மஸ்ஜிதின் நடுக்கோபுரத்தின் மீது கடப்பாறையை செலுத்தி கொக்கரித்தபடி இடித்துத் தரை மட்டமாக்குகிறார்.
அதற்குப்பிறகு அந்த இடத்தில் சிலையை நட்டு விட்டு திரும்புகின்றனர். திரும்பும்போது இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் இரு செங்கற்களை உடன் எடுத்துச் செல்கின்றனர். அச்செங்கற்களை பானிபட்டில் தனது மற்ற நண்பர்களிடம் காட்டி பாராட்டையும் பெறுகின்றனர். சிவசேனா அலுவலகத்தில் அக்கற்கள் வைக்கப்பட்டு ஒரு விழாவே நடந்தது.
இந்நிகழ்வுகள் அனைத்தும் தெரிய வந்தபோது பல்பீர் சிங்கின் தந்தை மிகவும் கோபமுற்றார். தனது மகனிடம், "இப்போது இந்த வீட்டில் நீயும் நானும் ஒன்றாக இருக்க முடியாது. இறைவனின் இல்லத்தை இடித்தவனின் முகத்தை நான் பார்க்க மாட்டேன். எனது மரணம் வரும் வரை உன் முகத்தைக் காட்டாதே" என்று உறுதிபடக் கூறிவிட்டார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பல்பீர் சிங் பானிபட்டில் தனக்கு கிடைத்த மரியாதையை அவரிடம் எடுத்துச் சொல்லியும் அவரது கோபம் தணியவில்லை. "இத்தகைய அநியாயக்காரர்களினால் இந்த நாடே அழிந்து போகும்" என்று கூறியவராக வீட்டை விட்டு வெளியேற தயாரானார். தந்தையின் கோபத்தைக் கண்ட பல்பீர் சிங் தானாகவே அவ்வீட்டை விட்டு வெளியேறி பானிபட்டில் தங்கினார்.
அதற்குப்பிறகு நடந்த சம்பவங்களைப்பற்றி அவரே கூறுகிறார், கேளுங்கள்:
நான் முஸ்லிமாவதற்கு படிப்பினையாக இருந்த எனது நண்பன் யோகேந்திரபாலின் சம்பவத்தை முதலில் சொல்கிறேன். பிறகு என் சம்பவத்தை கூறுகிறேன். எனது நண்பன் யோகேந்திரபாலும் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை எடுத்து வந்திருந்தான். 'ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்' என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தான். மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழித்தனர். இங்குதான் 'மஸ்ஜிதின் எஜமானன் அல்லாஹ் தான் யார் என்பதை நிரூபித்தான்'.
இறையாலயத்தின் செங்கல் மீது சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய நான்கைந்து நாட்களுக்குப்பின் யோகேந்திரபாலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. தனது ஆடைகளை சுற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாக அலைந்தான். இவன் கண்ணியமிக்க ஜமீன்தாரின் ஒரே மகன். பைத்தியம் முற்றி தாயின் ஆடையை உரிந்து தவறான செயலில் ஈடுபட முயன்றான். பலமுறை இத்தீய எண்ணத்தில் பெற்ற தாயை கட்டியணைத்தான். அவனது தந்தை பரிதவித்து மந்திரிப்போர் பலரிடம் தன் மகனை காட்டினார். தானதர்மங்கள் செய்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார்.
ஆனால், யோகேந்தர் நிலை மென்மேலும் மோசமடைந்தது. மீண்டும் ஒரு முறை பெற்ற தாயை உடலுறவு கொள்ள அவன் முயன்றபோது தாயாரின் கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் ஓடி வந்து தாயை காப்பாற்றினர். நிலைமை மிக மோசமானதால் யோகேந்தர்பால் சங்கிலியால் கட்டப்பட்டான். மக்களிடம் மதிப்பு மிக்க அவனது தந்தை அவனை சுட்டுக்கொல்ல நாடினார். அப்போது ஒருவர் 'சோனிபட் ஈத்காவில் ஒரு மதரஸா உள்ளது. அங்கு பெரிய மவ்லானா ஒருவர் வந்து செல்கிறார். கடைசி முயற்சியாக அவரிடம் சென்று உங்கள் பிரச்சனையை கூறுங்கள். அங்கும் பிரச்சனை தீரவில்லை என்றால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்' என்று கூறினார்.
சோனிபட்டில் நடந்தது என்ன?
ஆனால் அவரால் பெரிய மவ்லானா(கலீம் சித்தீக்கி)வை சந்திக்க முடியவில்லை. மகனை சங்கிலியால் கட்டிக்கொண்டு டில்லி-பாவானாவின் இமாம் மவ்லானா பஷீர் அஹ்மதை சந்தித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு பஷீர் அஹ்மது இப்படிச் சொன்னார். தற்போதைய நிலைமை மோசமாக இருப்பதால் டிசம்பர் 6 க்கு (1992) முன்பே ஹரியானாவின் பல இமாம்கள், ஆசிரியர்கள் உ.பி.யிலுள்ள தங்களது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். இந்நிலையில் இம்மாதம் முதல் தேதிதான் பெரிய மவ்லானா (கலீம் சித்தீக்கி) கவலையுடன் உரையாற்றினார்கள். அதில் முக்கிய சில வரிகளைக் கூறுகிறேன்.
'முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ், இஸ்லாம், மஸ்ஜித், இறைத்தூது பற்றி முன்பே எடுத்துக் கூறியிருந்தால் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்காது. எனவே பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதில் முஸ்லிம்களும் ஒரு விதத்தில் குற்றவாளிகளே! ஆகவே. இப்பொழுதாவது நாம் உணர்வு பெற்று அழைப்பப்பணியில் ஈடுபட்டால் மஸ்ஜிதை இடித்தவர்களே மஸ்ஜிதை நிர்மாணிப்பவர்களாக, புனர் நிர்மாணம் செய்பவர்களாக மாறிடுவர். ஏனெனில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 'யா அல்லாஹ்! என் சமூக மக்களுக்கு நேர்வழி காட்டு, அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர்' என்று பிரார்த்தித்தார்கள் - என்று பெரிய மவ்லானா குறிப்பிட்டார்கள்.
உங்கள் மகனுக்கு சூனியம் எதுவும் இல்லை. இது எஜமானனின் தண்டனைதான். ஆகவே, நாளை மறுநாள் புதன் கிழமை மவ்லானா கலீம் சித்தீக்கி இங்கு வரும்போது உங்கள் மகனின் நிலையை கூறுங்கள். அவர் சரியாக்கி விடுவார் என்று நம்பிக்கை உள்ளது என்றார் பஷீர் அஹ்மது. அதற்கு யோகேந்தர்பாலின் தந்தை என் மகன் குணமடைந்து விட்டால் நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன் என்று பதிலளித்தார்.
புதன் கிழமையன்று ஜமீன்தார், சங்கிலியால் கட்டப்பட்டு அரை நிர்வாணக் கோலத்துடன் இருந்த தன் மகன் யோகேந்தர்பாலுடன்; மல்லானாவை சந்தித்தார். அவர் சொன்ன அனைத்தையம் கேட்டுக்கொண்ட மவுலானா கலீம் சித்தீக்கி 'உங்கள் மகன் இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் இல்லத்தை இடித்த மாபெரும் அநீதி இழைத்துள்ளான். இத்தண்டனை இவர் ஒருவருக்கு கிடைத்தது மிகவும் குறைவுதான். நாங்களும் அந்த இறைவனின் அடிமைகளே! மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு இறையில்லம் என்றால் என்னவென்பதை எடுத்துரைக்க நாங்கள் தவறிவிட்டதால், இப்பெரும் அநீதத்திற்கு நாங்களும் ஒருவிதத்தில் காரணமாக உள்ளோம். இப்போது எதுவும் எங்கள் கையில் இல்லை. ஒரே ஒரு வழி மட்டும்தான் உள்ளது. அந்த ஏக இறைவனின் சமூகத்தில் அழுது மன்றாடுங்கள். நாங்களும் மன்னிப்பு வேண்டுகிறோம். இம்மஸ்ஜிதின் நிகழ்ச்சி முடிவுறும் வரையில் நீங்கள் இறைவனிடம் 'இறைவா! என் சிரமத்தை உன்னைத்தவிர வேறு எவராலும் நீக்க முடியாது' என்று மாசற்ற உள்ளத்துடன் மன்றாடி பிரார்த்தித்துக் கொண்டே இருங்கள் என்று கூறிவிட்டு மஸ்ஜிதுக்குள் சென்று தொழுதார்;. சிறிதுநேரம் உரையாற்றி துஆ செய்ததுடன் மற்றவர்களையும் ரகுபீர்சிங் - யோகேந்தர்பால் ஆகியோருக்காக துஆச் செய்ய கூறினார். நிகழ்ச்சிக்குப்பின் மஸ்ஜிதிலேயே உணவு பரிமாறப்பட்டது.
உணவு முடித்து வெளியே வந்தால் அனைவருக்கும் மிகப்பெரும் ஆச்சர்யம்! அல்லாஹ்வின் கிருபையை என்னவென்பது! இத்துனை நாட்களாக நிர்வாணத்துடன் திரிந்து கொண்டிருந்த யோகேந்தர்பால் திடீரென தன் தந்தையின் தலைப்பாகையை கழற்றி தனது உடலை நன்கு மறைத்து தந்தையுடன் சாதாரண மனிதன் போல் பேசிக் கொண்டிருந்தான். பைத்தியம் தெளிந்த அவனைக்கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி. ஜமீன்தார் ரகுபீர்சிங்கிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி.
இஸ்லாத்தை தழுவுவதற்காக ரகுபீர்சிங் மஸ்ஜிதுக்குள் நுழைய விழைந்ததைக் கண்ட யோகேந்தர்பால் 'தந்தையே! சற்றுப்பொறுங்கள்! உங்களுக்கு முன் நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். பாபரி மஸ்ஜிதை நான் திரும்பவும் கட்ட வேண்டும்' என்று கூறினார். பிறகு இருவரையும் ஒளு செய்ய வைத்து கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டது. ரகுபீர்சிங் - முஹம்மது உஸ்மானாக, யோகேந்தர்பால் - முஹம்மது உமர் ஆக மாறிவிட்டார்கள். இருவரும் சந்தோஷமாக ஊர் திரும்பினார்கள்.
தமது ஊர் திரும்பியவர்கள் முதல் வேலையாக அவ்வூர் மஸ்ஜிதின் இமாமை சந்தித்து தாங்கள் முஸ்லிமாகிவிட்ட விபரத்தை தெரிவித்தனர்.. இமாம் இச்சம்பவங்களை மக்களிடம் எடுத்துக்கூற அந்த பகுதி முழுவதும் செய்தி பரவியது. ஹிந்துக்களுக்கு இச்செய்தி மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களில் சிலர் அவசரமாக ஆலோசனை செய்து இவ்விருவரையம் அன்று இரவே கொன்றுவிட வேண்டும் முடிவு செய்தார்கள். இல்லையேல் பலரும் இஸ்லாத்துக்கு மாறிவிடுவார்கள்' என்ற பயம் அவர்களுக்கு! அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் இச்செய்தியை இமாம் ஸாஹிபிடம் தெரிவித்து விட்டதால் அல்லாஹ்வின் அருளால் அன்ற இரவே அவர்கள் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி புலத் சென்று சிலநாட்களுக்குப்பின் 40 நாள் ஜமா அத்தில் சென்று விட்டனர்.
முஹம்மது உமர் ஜமாஅத் அமீரின் ஆலோசனைப்படி மேலும் 4 மாதங்கள் ஜமாஅத்தில் சென்று விட்டார். இதன் தொடராக அவரது தாயாரும் முஸ்லிமாகிவிட்டார். டில்லியில் சிறந்ததொரு முஸ்லிம் குடும்பத்தில் முஹம்மது உமருக்கு திருமணமும் நடந்தது. தற்போது அனைவரும் மகிழ்ச்சியடன் டெல்லியில் வசிக்கின்றனர். சொந்த ஊரிலுள்ள சொத்துக்களை விற்று டெல்லியில் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர்.
முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி, தான் இஸ்லாத்தை எற்ற நிகழ்ச்சியின் முதல் பகுதிதான் என்று கூறும் முஹம்மது ஆமிர் (பல்பீர்சிங்) இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு எப்படி?
கேள்வி: உங்கள் நண்பர், அவர் தந்தையின் இஸ்லாம் பற்றி கூறினீர்கள். நீங்கள் இஸ்லாத்தை தழுவியதைப்பற்றி கூறுங்களேன்?
பதில்: முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி நான் இஸ்லாத்தை ஏற்ற நிகழச்சியின் முதல் பகுதிதான். இதோ நான் இஸ்லாத்தை ஏற்றதை கூறுகிறேன்! கேளுங்கள்.
9-மார்ச் 1993-ல் எனது தந்தை திடீரென மாரடைப்பால் மரணித்து விட்டார். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் அதில் நான் பங்கெடுத்ததும் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவர் என் தாயரிடம்,
"இறைவன் நம்மை ஏன் முஸ்லிமாக படைக்கவில்லை?
முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருப்பின் குறைந்த பட்சம் அநீதம் இழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேனே?
அநீதி இழைக்கும் கூட்டத்தாரில் நம்மைபிறக்கச் செய்து விட்டானே?" என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் தான் இறந்த பிறகு தனது இறுதி சடங்கில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்றும்,
தனது சடலத்தை அநீதம் செய்யும் கூட்டத்தாரின் வழமை போல் எரிக்கக் கூடாது
ஹிந்துக்களின் அடக்கஸ்தலங்களுக்கும் எடுத்துச் செல்லக்கூடாது.
மண்ணில் புதைத்துவிடுங்கள் அல்லது தண்ணீரில் மூழ்கடித்து விடுங்கள் என்று தமது ஆசையை வெளிப்படுத்துயிருந்தார். (மறுமையில் இவர்களின் நிலை என்ன என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்)
எங்களது வீட்டினர் அவரது ஆசைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்தனர். எட்டு தினங்களுக்குப் பிறகே அவரது மரணச் செய்தியை கேள்விப்பட்ட நான் மிகவும் நொடிந்துவிட்டேன். என் உள்ளம் நொறுங்கிவிட்டது.
"அவர் இறந்த பிறகுதான் பாபரி மஸ்ஜிதை இடித்தது எனக்கு அநீதியாகப்பட்டது எனது பெருமை அனைத்தும் கைசேதமாக தெரிந்தது.."
நான் மிகவும் மனம் வெதும்பி எனது இல்லம் சென்றடைந்தபோது எனது தாய் என் தந்தையின் கவலையை பிரஸ்தாபித்து அழுது கொண்டிருந்தார்;. ஒரு சிறந்த தந்தையை துன்புறுத்தி கொன்றுவிட்டாயே! நீ ஒரு மனுஷனா? என்று இடித்துரைத்தார். இதன் பின் வீட்டிற்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்.
யோகேந்தர்பாலுடன் சந்திப்பு
ஜுன், 1993-ல் முஹம்மது உமர் (யோகேந்தர்பால்) ஜமா அத்திலிருந்து பானிபட் வந்து என்னை சந்தித்தார். தனது சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினர். இரண்டு மாதங்களாக வானிலிருந்து ஆபத்து ஏதும் எனக்கு இறங்கிடுமோ என்று பயந்தேன். தந்தை இறந்த கவலையும் பாபரி மஸ்ஜித் இடிப்பும் என்னை வாட்டி வதைத்தன. முஹம்மது உமரின் சம்பவம் கேட்டு மேலும் கலக்கம் அடைந்தேன்.
ஜுன், 23ஆம் தேதி மௌலானா கலீம் சித்தீகி அவர்கள் சோனிபட் வரவிருப்பதாகவும் அவர்களை சந்தித்து அவர்களுடன் சில நாட்கள் தங்குவது தான் சிறந்தது எனவும் முஹம்மது உமர் மிகவும் வலியுறுத்தி கூறினார். நான் மௌலானாவை சந்திக்க திட்டமிடலானேன் எனினும் நான் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது எனக்கு முன்பாகவே முஹம்மது உமர் சென்று என்னை பற்றிய முழு விபரத்தையும் மௌலானாவிடம் தெரியப்படுத்திவிட்டார்.
நான் மௌலானாவிடம் சென்ற போது மிகவும் அன்புடன் வரவேற்றார்கள். மேலும் யோகேந்தர்பாலுக்கு அல்லாஹ் தண்டனை அளித்தது போல் நீங்கள் செய்த பாவத்திற்கும் அல்லாஹ் தண்டனை அளித்திருக்க முடியும். அதே சமயம் இவ்வுலகில் தண்டனை கிடைக்காவிட்டாலும் மறுமையின் தண்டனை நிரந்தரமானது அத்தண்டனை எப்படியிருக்குமென உமது சிந்தனைக்கே எட்டாது என்றார்கள்.
முஸ்லிமாவதே தீர்வு:
ஒரு மணி நேரம் மௌலானவுடன் அமர்ந்த பின் "இறை வேதனையிலிருந்து தப்ப முஸ்லிமாகுவதே தீர்வு என தீர்மானித்தேன்" மௌலானா இரண்டு நாட்கள் பயணத்தில் செல்லவிருப்பதை அறிந்து நானும் உடன் வருகிறேன் என்றேன். அவர்களும் சம்மதித்தார்கள். டில்லி, ஹரியானா, கூர்ஜா ஆகிய இடங்கள் சென்று 'புலத்' வந்தோம் இதற்கிடையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள நான் தயாராகிவிட்டேன். இந்த எனது எண்ணத்தை சகோதரர் உமரிடம் கூறிய போது அவரும் சந்தோஷப்பட்டு மௌலானவிடம் தெரிவித்தார்.
"அல்ஹம்துலில்லாஹ்! ஜுன் 25, 1993 அன்று லுஹர் தொழுகைக்குப்பின் புனித இஸ்லாத்தை தழுவினேன். மௌலானா எனக்கு முஹம்மது ஆமிர் என்று பெயரிட்டார்கள்.
தொழுகை மற்றும் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள என்னை புலத்தில் தங்கியிருக்க மௌலானா ஆலோசனை அளித்தார்கள் எனது மனைவியும், சிறு குழந்தையும் தனியாக இருப்பதை கூறியபோது எனக்காக ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்தார்கள். நான் சில மாதங்கள் புலத்தில் குடும்பத்துடன் தங்கி எனது மனைவிக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னேன். அல்ஹம்துலில்லாஹ்! மூன்று மாதத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
கேள்வி: உங்களது தாய் உங்கள் மீது வருத்தத்தில் இருந்ததால் நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியதைப் பற்றி என்ன கூறினார்?
பதில்: நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை கூறிய போது மிகவும் சந்தோஷமடைந்து இப்போது தான் உன் தந்தையின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார். அதே வருடம் என் தாயாரும் இறைவன் அருளால் முஸ்லிமாகிவிட்டார்.
கேள்வி: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
பதில்: "அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை இடித்ததற்கு பகரமாக பாழடைந்த மஸ்ஜிதுகளை நான் புதுப்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிகளை உருவாக்க வேண்டும்" என்று நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். மேலும் இப்பணியில் ஒருவருக் கொருவர் துணையாக இருந்து வாழ்நாளில் மஸ்ஜிதுகளை உருவாக்கவும், 100 மஸ்ஜிதுகளை புதுப்பிக்கவும் இலக்கு நிர்ணயித்தோம்.
அல்ஹம்துலில்லாஹ்! டிசம்பர் 6-2004க்குள்- இந்தப்பாவி ஹரியானா, பஞ்சாப், டில்லி, மீரட், கேன்ட் ஆகிய இடங்களில் பாழடைந்த அபகரிக்கப்பட்ட 13 மஸ்ஜித்களை புனர் நிர்மாணம் செய்துள்ளேன். சகோதரர் உமர் என்னையும் விஞ்சி 20 மஸ்ஜித்களை கட்டி முடித்து 21வது மஸ்ஜிதுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்."
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று நான் பாழடைந்த ஒரு மஸ்ஜிதில் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளோம்.. அல்ஹம்துலில்லாஹ்! எந்த வருடமும் எங்களுக்கு தவறவில்லை. எனினும் 100 என்ற இலக்கு தூரமாகவே உள்ளது. இவ்வாண்டு 8 பள்ளிகள் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது.. சில மாதங்களில் அங்கும் தொழுகை ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
சகோதரர் உமர் என்னைவிட ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் உள்ளார் எனது பங்கும் அவருக்குரியதே என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததே அவர்தான்.
தற்சமயம் நான் 'ஜுனியர் ஹைஸ்கூல்' நடத்தி வருகிறேன். இஸ்லாமிய போதனைகளுடன் ஆங்கிலவழிக் கல்வியும் உள்ளது.
கேள்வி: நீங்கள் முஸ்லிமான பிறகு உங்களது தாயார் முஸ்லிமாகிவிட்டார்கள் சரி. உங்கள் குடும்பத்தில் வேறு யாரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்களா?
பதில்: எனது மூத்த சகோதரரின் மனைவி நான்கு வருடங்களுக்கு முன் மரணித்துவிட்டார். நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள் அவரக்குண்டு. அதில் ஒரு குழந்தை ஊனம். எனக்கு பிறகே அண்ணணுக்கு திருமணம் நடந்தது. எனது அண்ணி சிறந்த பெண்ணாகவும் முன்மாதிரி மனைவியாகவும் நடந்து கொண்டதினால் அவரது மரணத்தால் எனது அண்ணன் மிகவும் பாதிக்கப்பட்டார். அவரது பிள்ளைகளை என் மனைவியே பராமரித்து வந்தார். என் மனைவியின் இச்சேவையினால் எனது அண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
நான் அவருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தேன் என் தந்தையின் மரணத்திற்கு நான் காரணமாக இருந்ததால் அவர் என்னை நல்ல மனிதராகவே கருதவில்லை.
ஸஹாபாக்கள் செய்தது போன்ற தியாகம்
நான் என் மனைவியிடம் "நம் பிள்ளைகள் பெரிய பிள்ளைகள் என் சகோதரர் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளார். எனவே நான் உன்னை விவாகரத்து செய்து நீ இத்தா காலம் முடிந்தபின் என் சகோதரர் முஸ்லிமாக தயாராகிவிட்டால் அவரை நீ திருமணம் செய்துகொள். இது இருவரின் வெற்றிக்கும் வழிகோலாகும் என்றேன்".
ஆரம்பத்தில் சம்மதிக்காத எனது மனைவி விளக்கிக் கூறியவுடன் ஏற்றுக்கொண்டார். எனது அண்ணனிடமும் நீங்கள் முஸ்லிமாகி குழந்தைகளின் வாழ்க்கைக்காக எனது மனைவியை திருமணம் செய்து கொள்ளுங்கள். அவள் தன் பிள்ளைகளைப் போன்று உங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்வாள் என்றேன் ஊராரை பயந்து தயங்கிய என் சகோதரரும் பிறகு சம்மதித்தார்.
பிறகு என் மனைவியை தலாக் கூறிவிட்டேன். இத்தா கழிந்த பிறகு என் சகோதரருக்கு கலிமா சொல்லிக்கொடுத்து அவருடன் திருமணமும் செய்து வைத்தேன். அல்ஹம்துலில்லாஹ்! அவர் இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். எனது குழந்தையும் அவருடனேயே வசிக்கிறது.மௌலானா அவர்களின் ஆலோசனைப்படி புதிதாக இஸ்லாத்தை ஏற்ற வயதான ஒரு பெண்ணை நான் திருமணம் செய்து அல்ஹம்துலில்லாஹ்! சந்தோஷமாக வாழந்து வருகிறோம். (சுப்ஹானல்லாஹ்! ஈமானில் உறுதியிருந்தால் இன்றும் ஸஹாபாக்களின் மலைக்க வைக்கும் தியாகங்களை மீண்டும் பிரதிபலிக்க முடியும் என்பதை முஹம்மது ஆமிர் உணர்த்தி விட்டார்.)
கேள்வி : நீங்கள் முஸ்லிம் சகோதரர்களுக்கு கூற விரும்புவதென்ன?
பதில் : 1. முஸ்லிம்கள் தமது வாழ்வின் இலட்சியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
2. இஸ்லாத்தை மனிதகுலத்திற்காக நம்மிடம் ஒப்படைக்கபட்ட அடைக்கலப்பொருளாகக் கருதி அதை முழு மனித சமுதாயத்திற்கும் சேர்த்து வைக்கவேண்டும்.
3. ஒரு சில இஸ்லாமிய விரோதிகளை பார்த்து மற்ற மக்களையும் அவ்வாறு எடை போடாதீர்கள். அவர்களிடம் பழிவாங்கும் எண்ணத்தை மேற்கொள்ளாதீர்கள்.
4. பாபர் மஸ்ஜித் இடிப்பில் கலந்து கொண்ட சிவசேனா, பஜ்ரங்தள் மற்றுமுள்ள ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம்கள் யார்? குர்ஆன் என்பது என்ன? மஸ்ஜித்தின் மகத்துவம் என்ன? போன்ற விபரங்கள் உண்மையான முறையில் தெரிந்திருக்குமேயானால் நிலைமையே வேறு ஒவ்வொரு ஹிந்து சகோதரரும் பள்ளியை கட்டும் எண்ணம் கொண்டிருப்பார். பள்ளியை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லாது போயிருக்கும் இது அனுபவப்பூர்வமான உண்மை.
5.. பால் தாக்கரே, வினய் கட்டியார், உமா பாரதி, அசோக்சிங் கால் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மை நிலை தெரிந்திருக்குமேயானால் நிச்சயமாக அத்தலைவர்களில் ஒவ்வொருவரும் தமது சொந்தப்பணத்தில் பாபர் மஸ்ஜிதை நிர்மாணிப்பதை தங்கள் வாழ்க்கையில் தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் பேறாக கருதியிருப்பர்.
6. நாட்டில் முஸ்லிம் விரோதிகளாக வலம் வருபவர்கள் 100கோடி ஹிந்துக்களில் ஒரு இலட்சம் கூட இருக்க மாட்டார்கள். ஒரு இலட்சம் என்பதே அதிகம் தான் 99 கோடியே 99 இலட்சம் மக்கள் என் தந்தையைப் போன்று மனிதநேய நண்பர்களாக, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை உளமாற நேசிப்பவர்களாகவே இருக்கின்றனர்.
என் தந்தை (ஃபித்ரத்) படைப்பால் முஸ்லிமாக இருக்க வில்லையா? முஸ்லிம்கள் அவருக்கு தீனை எடுத்துரைக்காததினால் நிராகரிப்பிலேயே இறந்துவிட்டார். இது என் மீதும் என் தந்தை மீதும் முஸ்லிம்கள் செய்த மிகப்பெரும் அநீதியல்லவா?
பாபர் மஸ்ஜிதை இடித்த என்னைவிட அநியாயக்காரர்கள் யாருமிருக்க முடியாது என்பது மறுக்கவியலாத உண்மை. ஆனால் என்னைவிட கொடுமைக்காரர்கள் யார் தெரியுமா??????????

வட்டி அழியும் !

அமெரிக்க மூலதன வங்கியின் திவாலில் உருவான பொருளாதார நெருக்கடி இப்போது அமெரிக்காவை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது பணக்காரர்கள் இழந்தது சில கோடிகள் என்றால் ஏழைகளும் நடுத்தர மக்களும் இழந்தது தங்களது ஒட்டு மொத்த வாழ்வையும் என்பதைப் பார்க்கும் போது உலகப் பொது முறைமையாக உலகத்தின் மீது ஏகாதிபத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட உலகமயமாக்கல் எந்த அளவுக்குக் கொடுமையானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தடையில்லா வர்த்தகம் என்ற மாயவார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போட்டு பன்னாட்டுப் பேராசைக்காரர்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவாக இன்று எத்தனை உயிர்ப்பலிகள் ! உடைமை நஷ்டங்கள் உயிரோட்டமே நின்று போனது போன்ற மன உலைச்சல்கள் !

ஏன் இது நிகழ்ந்தது?

இதன் பின்னணி பெரியது சராசரி மூளைக்குள் புகமுடியாதது.

ஆனால் அதன் ஆணிவேர் வட்டி என்ற விஷம் சூதாட்டம் என்ற பங்குச் சந்தை யூகவணிகம் என்ற மோசடி !அங்கிங்கெனாதபடி எங்கும் விரிந்த இந்த நெருக்கடிக்குள் உலகின் ஒரே ஒரு வங்கித்துறை மட்டும் சத்தம் போடாமல் அமைதி காக்கிறது என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?

ஆம் ! இஸ்லாமிய வங்கித்துறையை அது பெரிதாக பாதிக்கவில்லை பாதிக்கப்பட்ட ஒருசிலவும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியே வந்து செயல்பட்டவை என்பதுதான் இன்று உலகில் பரபரப்பினை ஏற்படுத்திவரும் உரத்த செய்தியாகும் ! இப்போது இஸ்லாமிய வங்கித்துறையின் நுணுக்கங்கள் பற்றி அதிகமான விசாரிப்புக்கள்.

அது ஒன்றும் மூடுமந்திரமான புரிந்துகொள்ள முடியாத வறட்டுத் தத்துவார்த்தம் அல்ல மிகமிக எளிய உபாயம் அதில்

*வட்டிக்கு இடமில்லை முற்றிலும் தடுக்கப்பட்டது

*ஊக வணிகத்துக்கு வழியில்லை

*கொடுக்கல் வாங்கலில் முழுமையான ஒப்பந்த முறை

*கடனுக்கு உடைமை உத்தரவாதம்

*மூலதனமிடுவோருக்கு லாபத்திலும் நஷ்டத்திலும் பங்குண்டு

*தங்களது பணம் எப்படி வங்கியால் மூலதனமிடப்படுகிறது என்பதை மூலதனமிட்டவர் தெரிய வாய்ப்பு வங்கியின் மார்க்க வல்லுநர்களின் கண்டிப்பான மேற்பார்வையில் வணிகம்

*வங்கி செயல்படும் நாட்டின் மேலாண்மைச் சட்டங்களின் முழுமையான மேற்பார்வைக்கு அனுமதி இவைதான் இஸ்லாமிய வங்கிகளின் செயல்பாட்டுச் சட்டம்

இப்படி 75 நாடுகளில் 300 வங்கிகள் செயல்படுகின்றன அவற்றில் சுமார் 300 பில்லியன் டாலர்கள் வணிகப் புழக்கத்தில் இருக்கின்றது.

நம் நாட்டிலும் உள்ளன ! ( அல் அமீன் ) தமிழகத்திலும் உள்ளது ( செய்யது ஷரீ அத் ஃபைனான்ஸ் )

உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த வங்கித் துறையில் பங்கேற்றிருந்தால் இன்னேரம் பல கோடி மடங்கு அதிகமாக இருந்திருக்கும். நாம்தான் மார்க்க விழுமியங்களை மதிப்பதில் மந்தமாயிற்றே?

இனியாவது விழித்துக் கொள்வோமா?

இதோ நமது வேதம் உரத்துச் சொல்கிறது

*நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே நீர் நற்செய்தி கூறுவீராக

*உங்களுக்கு முன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமையும் பிணியும் பீடித்தன தூதரும் அவருடன் விசுவாசம் கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கூறும் வரை அலைக்கழிக்கப்பட்டனர் அல்லாஹ்வின் உதவி மிக சமீபத்தில் இருக்கின்றது. (2:214)

*ஈமான் கொண்டோரே இரட்டித்துக் கொண்டே போகும் வட்டியை உண்ணாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சி இதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (3:130)

*நீங்கள் உண்மை மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள் (2:278)


*கடன் வாங்கியவன் வசதி வந்து திருப்பித் தரும் வரை பொறுத்திருங்கள் அல்லது அதனைத் தர்மமாக தள்ளுபடி செய்து விடுங்கள். (2:280)

*அல்லாஹ் வட்டியை அழிக்கின்றான் தான தர்மங்களை பெருக்குகிறான்.

*எத்தகைய கஷ்டத்திலும் நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு தொழுது இறைவனிடத்தில் உதவி தேடுங்கள் (2:45)
*ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு லேசும் சுகம் இருக்கிறது (94:06)

February 13, 2009

மனைவி

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915

பணிவு

''எவரேனும் அல்லாஹவிற்காகப் பணிந்தால் அவரது அந்தஸ்தை அல்லாஹ உயர்த்தியே தீருவான்.'' (ஸஹீஹ முஸ்லிம்)

அன்பளிப்பு

ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு, உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும். மேலும் எந்த அண்டை வீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குழம்புத் துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதினும் சரி என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன் அதற்குப் பகரமாக அன்பளிப்பும் அனுப்பி வந்தனர் என்று ஆயிஷா َضِيَ اللَّهُ عَنْ அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத், திர்மிதீ)

ஒருவர் வீட்டினுள் செல்லும்முன்

''நபி صلى الله عليه وسلم அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல் என்று கூறினார்கள். இதைச் செவிமடுத்த அம்மனிதர், 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அனுமதி வழங்க, அவர் உள்ளே வந்தார்" என ரிப்யீ இப்னு ஹிராஷ் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்)

தொழுகையின் முக்கியத்துவம்

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)“உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.
அதற்குத் தோழர்கள், “இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள். “இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும்! அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்” என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்)

கடன்

ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

மன திருப்தி

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி

February 12, 2009

பள்ளியில் பெண்கள்

நபி அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை நான் கேட்பேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டு இருக்கும்) அந்த குழந்தையின் தாயாருக்கு சிரமமளிக்க கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கி முடித்து விடுவேன். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்:புகாரி

மென்மை

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)

தர்மம்

உங்களில் ஒருவர் பேரிச்சம் பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்துக் கொள்ளட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதியீஇப்னு ஹாதம்(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம்

வாக்குவாதம்

நாங்கள் விதி பற்றி தர்க்கம் செய்து கொண்டிருக்கும்பொழுது நபி صلى الله عليه وسلم அவர்கள் வந்தார்கள். (இதனைக் கண்ட) அவர்கள் மாதுளம் சுளைகளை அவர்களுடைய முகத்தில் பதித்து விட்டதைப் போன்று அவர்களுடைய முகம் சிவப்பாகும் வரை சினமுற்றனர். அப்பொழுது அவர்கள் 'இது கொண்டா கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்? இதற்குத்தானா நான் உங்களிடம் தூதுவனாக அனுப்பப்பட்டேன்? நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தோர் தங்களின் மார்க்க விஷயத்தில் அதிகமாக தர்க்கம் செய்ததன் காரணமாகவும், தங்களின் நபிமார்களுடன் மாறுபட்டதன் காரணமாகவும் தான் அழிந்தனர் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: திர்மிதீ

நோயாளியை நலம் விசாரித்தல்

நபி அவர்கள், ''முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து'' என கூறியபோது நபி அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி அவர்கள் கூறினார்கள், ''அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)

February 11, 2009

விதி

பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான்(ரலி) நூல்: திர்மிதி

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.
கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: திர்மிதி


கோபம்

அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْஅண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (புகாரி)

ஸலாம் கூறுதல்

''உங்களுக்கு நம்பிக்கை (ஈமான்) பிறக்கும் வரை நீங்கள் சுவனத்தில் நுழைய முடியாது. உங்களில் ஒருவரையொருவர் உளமாற நேசிக்கும் வரை நீங்கள் நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களாக ஆக முடியாது. எச்செயல் பிறரை உளமாற நேசிக்கவைக்கும் என்பதை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? உங்களுக்கிடையில் ஸலாமைப் பரப்புங்கள். (அது உங்களுக்கிடையில் நேசத்தை ஏற்படுத்தி நம்பிக்கையைப் பலப்படுத்தி, சுவனத்தில் நுழைவதற்கு வழி வகுத்துவிடுகிறது) என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம், அபூதாூது, மற்றும் திர்மிதீ)

பிரார்த்தனை

உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரீ, முஸ்லிம்

தற்பெருமை

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி) நான் அண்ணல் நபி அவர்கள் கூறக் கேட்டேன்: “இறை நம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை (இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்று முறை கூறினார்கள். பிறகு “அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்தவண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான் ”என்று அண்ணலார் கூறினார்கள். (அபூதாவூத்)

மருத்துவம்

மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான் என்று நபி கூறினார்கள். அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஷரீக் (ரலி)நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்

நற்குணம்

"நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)

நட்பு

எவனுடைய கையில் என் உயி இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரையில் சுவனபதி செல்ல இயலாது. உங்களில் ஒருவர் மற்றவரை நேசிக்காதவரை நம்பிக்கையாளராகவும் இயலாது. எனவே நான் உங்களுக்கு கூறுகிறேன். அதனை நீங்கள் மேகொண்டால் ஒருவர் மற்றவருக்கு நீங்கள் நேசமுள்ளவராக ஆகிவிடுவீர்கள். அதாவது, உங்களுக்கிடையில் ஸலாம் கூறுவதை பழக்கத்தில் கொண்டுவாருங்கள் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

எனக்காக நட்புக்கொண்டவர்கள் எங்கே? இன்று நான் அவர்களுக்கு என்னுடைய நிழலில் இடமளிப்பேன். இன்று என்னுடைய நிழலைத்தவிர வேறு நிழல் கிடையாது என்று மறுமை நாளில் இறைவன் கூறுவான் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்: முஸ்லிம் முஅத்தா

எனக்காக நட்பு கொள்பவர்கள் மீதும் எனக்காக (மார்க்க உரையாடல்) அமர்பவர்கள் மீதும் எனக்காக ஒருவர் மற்றவரைச் சந்திக்கச் செல்பவர்கள் மீதும் எனக்காககச் செலவழிப்பவர்கள் மீதும் என் அன்பு கடமையாகிவிட்டது. என்று இறைவன் கூறியதாக நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூ இத்ரீஸில் கவ்லான் முஆது (ரலி) முலம் அறிந்து நூல்:முஅத்தா

அல்லாஹ்வுக்காக நட்புக்கொள்வதும் அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளரின்) மேலான செயல்களாகும் என நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூசர் (ரலி) நூல்: அபூதாவூத்

அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்ல, தியாகிகளூம் அல்ல. மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமைக் கொள்வர். என்று நபி கூறினர். (அப்பொழுது) அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். ".(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." என்ற 10:62 வது வசனத்தை ஓதினர். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தம் சகோதரர்மீது அன்பு கொண்டால், தாம் அவர்மீது அன்பு கொண்டிருப்பதாக அவரிடம் அறிவித்து விடவும். என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிக்தாம் இப்னு மஃதீகர்பு (ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதீ


மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி)

يَا مَعْشَرَ الْجِنِّ وَالإِنسِ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي وَيُنذِرُونَكُمْ لِقَاء يَوْمِكُمْ هَـذَا قَالُواْ شَهِدْنَا عَلَى أَنفُسِنَا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَشَهِدُواْ عَلَى أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُواْ كَافِرِينَ
மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) "ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?" (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், "நாங்களே எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்" என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள். (அல்குர்ஆன் 6:130)

February 10, 2009

மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர்கள் உறுதியும் துணிவும் நிறைந்த பண்பு நலன்கள் பெற்றிருப்பர்!

அறியாமை நிறைந்த சமுதாயங்களில் மக்கள் உறுதி வாய்ந்தவர்களாகக் காணப்பட்டாலும் அவர்கள் குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டவர்கள் தாம். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்களின் பலகீனத்தை எதிர்த்துச் செயல்பட முடியாது. மிகவும் கண்டிப்பான கொள்கைகளை கடைப்பிடிப்பவர் என அறியப்பட்டவரும் கூட தன்னுடைய நலன்கள் கேள்விக்குறிக்கு ஆளாகும் போது தன்னுடைய விதிகளை மீறி விடுவார். நிர்ப்பந்தம் ஏற்படும் போது, தொல்லைகள் எழும்போது, இடர்ப்பாடு அல்லது நோய்க்கு ஆளாகும் போது அல்லது கண்டிக்க அக்கம்பக்கத்தில் யாருமில்லை என்று உணரும் போது எந்த விதியையும் கடைப்பிடிப்பதில்லை. எந்த வரையரையையும் கையாளுவதில்லை. தங்கள் கொள்கைகளை மீறாமலிருக்கவோ அல்லது தங்களின் விருப்பங்களை விட்டுக் கொடுக்கவோ தகுந்த காரணம் இல்லாதப் போது கவர்ச்சி மிக்க பிரேரணைகளை ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனாலும் முன்னர் குறிப்பிட்டதுப் போல் ஒருவர் இதுப்போன்று ஒரு தவறை முன்பு இழைத்திருக்கிறாரா அல்லவா என்பது முக்கியமன்று. மார்க்க நெறிமுறைகளைக் கவனத்தில் கொள்ளாதவருக்கு தன்னுடைய தன்னல ஆர்வங்களுக்கு முன்னுரிமை வழங்குவதைத் தடுக்க தகுந்த காரணம் இல்லை என்பது தான் முக்கியம். இறையச்சம் இல்லாத போது, இத்தகைய மனிதனுக்கு தன்னுடைய மனதிட்பத்திற்கு உகந்து நடக்கும் திராணி இல்லாமல் போகும்.
இஸ்லாமிய ஒழக்க நெறிகளை உணர்ந்த அறியும் ஆற்றல் படைத்த ஒருவரின் நிலை வேறு விதமாக இருக்கும். தான் உண்மை என நம்புவதை நடைமுறைப்படுத்தியாக வேண்டும் என்ற தீர்மானத்தை முறியடிக்க எதனாலும் முடியாது. இந்தத் தீர்மானத்திற்கு முக்கிய காரணம் அவனுக்குள்ள ஆழ்ந்த இறையச்சமே. இறைவன் யாவற்றையும் காண்கிறான், செவியுறுகிறான், இதயத்தில் மறைந்துள்ள அனைத்தையும் அறிவான் எனும் உண்மையை உணர்ந்துள்ளான்; மேலும் தான் எப்போதும் இறைவனின் முன்னிலையிலேயே இறை நம்பிக்கை உடைய ஒருவனிடம் தனிமனிதச் சிறப்பியல்பும் மனதிட்பமும் காணப் பெறும்; இறைவன் விதித்துள்ள வரையறைகளைப் பேணி நடப்பான். இறைவனுக்கு அதிருப்தியளிக்கும் எதையும் எப்பொழுதும் செய்யவே மாட்டான். வாழ்க்கையில் என்ன நேர்ந்தாலும் சரி, எப்பொழுதும் இறைவனின் நினைவு மாறாமல் இருக்கவே நாடுவான்; அதில் சோர்வடைய மாட்டான். இது குர்ஆனில் கீழ்வருமாறு கூறப்படுகிறது.

காலையிலும் மாலையிலும் அவனை(இறைவனை) துதி செய்துக் கொண்டும், வணிகப் பறிமாற்றத்தில் இறைவனை நினைவு கூர்வதிலும், தொழுகையை நிறைவேற்றுவதிலும், ஜகாத் வழங்குவதிலும் உறுதியாக நின்று, உள்ளங்களும் பார்வைகளும் நிலைகுலையும் நாளைப் பற்றிப் பயந்தவர்களாக அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றை விடச் சிறந்த கூலியை, இறைவன் தன் அருளால் அதிகமாகவே வழங்குவான் என்று நம்பி வாழும் பலர் இருக்கின்றனர். இறைவன் தான் நாடியவருக்கு கணக்கின்றி வழங்குவான். (24:36, 37,38)
இஸ்லாமிய ஒழுக்க நெறி தன்னல வேட்கையை நீக்கும்
மார்க்கக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்காதவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே கவலை கொள்வதில் வியப்பில்லை. அவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் தத்துவங்கள் கோருபவற்றில் இதுவும் ஒன்று என்பது உண்மை. தியாகம் செய்ய முன் வருதல், இரக்கம், நல்லொழுக்கம் ஆகிய பண்புகள் எல்லாம் மார்க்கம் வலியுறுத்துபவை; மார்க்கமே அவற்றை நெஞ்சார விரும்பக் கோருகிறது. வாழ்ந்து மரணமடைந்த பின் மறுமையில் தங்களுடைய செயல்பாடுகளுக்குக் கணக்குக் கொடுத்தாக வேண்டும் என்று நம்பும் இறை நம்பிக்கையாளர் தாம் குர்ஆன் அறிவுறுத்தும் ஒழுக்க நெறிகளை முற்றிலும் நடைமுறைப்படுத்துவார்கள். இறை நம்பிக்கையற்றவர் இத்தகைய நற்பண்புகள் உடையவராகத் திகழ்வார் என எதிர்ப்பார்க்க வியலாது. மேலும் இறைநம்பிக்கையற்றவர் “தன்னலம் மிக்க இத்தகைய மக்கள் அங்கே காணப்படுகிறார்கள்; நான் நிச்சயமாக அவர்களில் ஒருவன் அல்லன்” என்று சொல்வது முற்றிலும் தவறாகும். மார்க்க நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்க்கு தன்னலம் பேணுவதைத் தவிர வேறு வழியில்லை. வேறு பல ஒழுக்கக் கேடுகளைத் தூண்டும் மனப்பான்மைக்கு எது காரணமோ அதுவே தான் இதற்கும் காரணம் ஆகும். அவற்றில் சில: மறுமையில் நம்பிக்கையின்மை; இவ்வுலகில் இழைக்கப்படும் ஒவ்வொரு தீய செயலும் மறுமையில் தண்டனை பெற்றுத்தரும் என்பதை நம்பாதது, இறையச்சம் இன்மை.

மார்க்கப் பண்புகளை பேணி வாழாதவர்கள் தன்னலம் ஒன்றிலே அக்கறைக் கொண்ட மற்றவர்களைப் பற்றி கவலைக் கொள்ளாமல் வாழ்வதற்கு இது தான் காரணம். இவர்களுடைய வாழ்க்கையின் முக்கிய நோக்கம், செல்வம் குவிப்பது, தொழில் அபிவிருத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, ஆகியவைத் தாம். உற்றார் உறவினரின் தேவைகளை நிறைவேற்ற உதவுவது, வறியவர்களுக்கும் முதியவர்களுக்கும் உதவுவது, சமுதாய நலனுக்காகத் தன்னால் இயன்றதை வழங்குவது ஆகியவை எல்லாம் பொதுவாக அவர்கள் மனதில் வெகு அபூர்வமாகவே உதிக்கும். இறை நம்பிக்கையற்றவரின் இப்புவி வாழ்க்கையை பற்றிய கணிப்பில், தியாகம் புரிவது அல்லது நல்ல செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனும் எண்ணங்களெல்லாம் இடம் பெறாததே இதற்கு காரணம். அவர்களை சூழ வாழும் மக்களிடமும் இதற்கு மாற்றமான மனப்பான்மையையும் செயல்பாட்டையும் காணவியலாது. ஒட்டுமொத்த சமுதாயமே இந்த முறையில் தான் செயல்படுகிறது. சமுதாயத்தில் அனைவருமே இதே மனப்பான்மை உடையவராகத் திகழ்வது அவர்களின் மனசாட்சிக்கு ஊக்கம் அளிக்கிறது.
சுருக்கத்தில், மார்க்கக் கொள்கைகளும், நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படாத சமுதாயத்தில் தன்னல வேட்கை தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு வரும் எவ்வித விதிவிலக்குமின்றி தன்னலம் உடையவர்களாகவே திகழ்வார்கள்.
எதையும் உருவாக்க முடியாத, தான் எனும் அக நிலையில் (நஃப்ஸ்), இத்தகைய தன்னல வேட்கையை நுழைய செய்து இறைவன் மனிதனைச் சோதிக்கின்றான். மனிதனின் இந்த வேட்கையைப் பற்றி இறைவன் குர்ஆனில் கீழ் வருமாறு கூறுகிறான்:
ஒவ்வொரு மனிதனும் தன்னல வேட்கைக்கு ஆளாகி விடுகிறான். நீங்கள் நன்மை செய்து இறைவனுக்கு அஞ்சி நடந்தால் இறைவன் நீங்கள் செய்வதை தெரிந்துக் கொள்வான். (41:128)
தன்னலம் பாராட்டும் மக்கள் பொதுவாகத் தாங்கள் உறுதிக் கொண்டவற்றை, அவை அற்பமானவையாக இருப்பினும் சரியானவை என்றே வலியுறுத்துவார்கள். தன்னலமுடைய ஒருவன் களைத்திருக்கும் போதும் அமர்ந்து களைப்பாற நினைக்கும் போதும், பக்கத்தில் சோர்ந்து நிற்கும் ஒரு முதியவர் அல்லது நோயாளியைக் கண்டு கொள்வதே இல்லை. மற்றவர்களைப் பற்றிக் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காமல் ஒவ்வொன்றிலும் மிகச் சிறந்ததையே அடைய விரும்புவான். தன்னுடைய வசதிக்காக மற்றவர்க்குத் தொல்லை ஊட்டுவதால் எவ்விதச் சலனமும் அவன் மனதில் ஏற்படுவதில்லை. தான் அலுவலில் ஈடுபடும் போது அமைதியை நாடும் அவன், பிறர் பணிபுரியும் போது அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அவனுடைய தன்னல வெறி பல்வேறு வழிகளில் குடும்ப வாழ்க்கையிலும் அலுவலகத்திலும் வெளிப்படும்.
இறை நம்பிக்கையற்ற சமுதாயங்களில் கூட, நற்செயல்களுக்குப் பெயர் போன சிலர் காணப் பெறுவர். தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் தாராள மனப்பான்மையுடன் நடந்துக் கொள்வார்கள். இறைவனின் திருப்தியைப் பெறுவதில்லை. இதற்கு காரணம், பண்பாளர் என்று பிறரால் மதிக்கப்பட வேண்டும் என்பதே; இதன் நோக்கம் புகழ்பட வேண்டும், பாராட்டும் நற்பெயரும் மக்களிடமிருந்து பெற வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இவர்கள் ஏழைகளுக்கு என ஒதுக்குவது அவர்களின் வருமானத்தோடு ஒப்பிடும் போது மிக அற்பமானதே.
இலட்சியவாதிகள் பொறுப்பேற்கவும் தலைமை தாங்கவும் விழைவார்கள். இதிலும் இவர்களின் நோக்கம் இறைவனின் திருப்தியைப் பெறுவதோ மக்களுக்கு சேவை புரிவதோ அன்று. செல்வாக்கும் புகழும் பெற்று சமதாயத்தில் தகைமை (அந்தஸ்து) மிக்கவர்களாக உயர வேண்டும் எனும் தங்களின் ஆசாபாசங்களை நிறைவேற்றவே உழைக்கிறார்கள். தங்களுடைய ஆர்வம் பாதிக்கப்படும் போது அவர்களின் உண்மை வடிவம் வெளிப்படும்.
மார்க்கப் பண்புகள் பின்பற்றப்படாத சமுதாயங்களில், தாராள மனப்பான்மையுடையவர்களாகக் கருதப்படுவார்கள், தியாகம் செய்யும் இறை நம்பிக்கையாளர்களோடு ஒப்பிடப்படும் போது தன்னல வாதிகளாகவே கணிக்கப் பெறுவர். இறை நம்பிக்கையாளர்கள் “தன்னலத் தியாகம்” எனும் தத்துவத்தை புரிந்துக் கொண்ட விதத்திற்கும் பாராதூரமான வேறுபாடு உள்ளது. உண்மையான இறை நம்பிக்கையாளர்கள், எப்பொழுதும் தங்களின் தேவையை விட மற்றவரின் தேவைக்கே முக்கியத்துவம் நல்குவார்கள். தங்களின் சகோதரர்களுக்கும் சகோதரரிகளுக்கும் தங்கள் மனப்பூர்வமாக நலனையே நாடுவார்கள். குர்ஆன் வலியுறுத்தும் ஒழுக்கத்தையே இது பிரதிவலிக்கிறது.
இறைவன் மீதுள்ள அன்பின் காரணமாக அவர்கள் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் சிறைவாசிகளுக்கும் உணவளிப்பார்கள். (76:8)
இத்தகைய ஒழுக்க உணர்வால், இறை நம்பிக்கையாளர்கள் ஒடுக்கப்படும் ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்காக இறைவனுடையப் பாதையில் போராடுவார்கள். (4:75)
தங்களுடைய நலனையும் தேவைகளையும் மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல் இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பேற்று பொது நன்மையை நாடுவார்கள்.
என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, ஒரு மணிதன் தான் தனக்காக விரும்புவதை தன் சகோதரனுக்கும் விரும்பாதவரை இறை நம்பிக்கைக் கொண்டவனாக மாட்டான். என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ, முஸ்லிம்)
மார்க்கப் பண்புகள் மேலோங்கி நிற்கும் போது, சமுதாய உறவுகள் தியாகத்தின் அடிப்படையில் அமையும். இதனால் பல பிரச்சனைகள் மறைந்து விடும்.
மூலம் : ஹாரூன் யஹ்யா